தமிழ் சினிமா உலகில் பிரபலமான இயக்குனர்களில் ஒருவர் ஏ.எல்.விஜய். தற்போது இவர் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் காதல் ரிசெட் ரிப்பீட். புதுமுக நடிகர்களை வைத்து இந்த படம் எடுக்கப்பட்டிருக்கிறது. இந்த படத்தில் ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்திருக்கிறார். இந்த படத்தில் மதும்கேஷ், ஜியா சங்கர், அர்ஜூன் அசோகன், எம்.எஸ்.பாஸ்கர், ஜெயப்பிரகாஷ், விஜி சந்திரசேகர் ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.

இந்த படம் மார்ச் ஆறாம் தேதி திரைக்கு வர இருக்கிறது. இந்நிலையில் இந்த படத்தினுடைய பிரீ ரிலீஸ் ஈவென்ட் சென்னையில் நடைபெற்றிருக்கிறது. அப்போது இந்த விழாவில் கலந்து கொண்ட ஹாரிஸ் ஜெயராஜ், 1999 ஆம் ஆண்டில் இளம் இயக்குனராக இருந்த கௌதம் மேனனை நான் சந்தித்தேன். அதற்கு பிறகு 2000 ஆண்டில் மின்னலே படத்தின் வேலைகள் தொடங்கப்பட்டது. அந்த படத்தில் கதாநாயகன் மாதவன் சினிமாவிற்கு புதிது. அலைபாயுதே படமும் வெளியாகவில்லை. ரீமாசென் நடிகையும் புதிது.
காதல் ரிசெட் ரிப்பீட் :
அந்த படத்தில் இயக்குனர் புதிது, கேமராமேன் புதிது, நானும் புதிது, அந்த படத்திற்கு தயாரிப்பாளர் முரளி மனோகர் தான் ஸ்டார். அவர் ஜீன்ஸ் படத்தை தயாரித்திருந்தார். அந்த படத்தில் பணியாற்றிய பாடலாசிரியர்கள் மீது எங்களுக்கு நம்பிக்கை கிடையாது. அப்போது தாமரை என்ற புதிய பாடலாசிரியர் சேர்த்துக் கொண்டோம். அதன் பிறகு அந்த படத்தினுடைய வேலைகள் முடிந்து படம் வெளியானது. இப்போது மின்னலே திரைப்படம் ரீ ரிலீஸ் ஆனது. இதையெல்லாம் நான் ஏன் சொல்கிறேன் என்றால், கதைக்களம் என்ற ஒன்று சரியாக அமைந்துவிட்டால் அதற்கு எந்த ஒரு பெரிய ஸ்டாரும் தேவையில்லை.

ஹாரிஸ் ஜெயராஜ் பேட்டி:
அது எல்லோரையும் பெரிய டெக்னீசியன் ஆக்கிவிடும். சாதாரண நடிகர்களை பெரிய நடிகராக காண்பித்து விடும். பெரிய ஆர்டிஸ்ட் பெரிய டெக்னீஷியன்ஸ் இணைந்து ஒரு மொக்கை கதையை பயன்படுத்தினால் எல்லாமே காணாமல் போய்விடும். கதை என்பது தான் ஒரு படத்திற்கு ரொம்ப முக்கியமான ஒன்று.
ஒவ்வொரு படத்துக்கும் அந்த கதை மாறுகிறது. இதை நான் பார்த்திருக்கிறேன். எல்லாம் பிரம்மாண்டமான கலைஞர்கள் இருப்பார்கள். ஆனால், அதில் ஒரு கதையுமே இருக்காது. இதை நான் தொடர்ந்து பார்த்து இருக்கிறேன்.
https://www.youtube.com/watch?v=ppdaZQrixX4
சினிமா நிலை:
நான் இதுவரை 64 புதிய பாடகர்களை அறிமுகப்படுத்தினேன். 65 ஆவது பாடகி தான் காயத்ரி ராஜா. அனைவரும் நன்றாக ஓரிடத்தில் இருப்பதை நினைத்தால் சந்தோஷமாக இருக்கிறது. 12 புதிய நடிகர்களுக்கு இசையமைத்திருக்கிறேன். எனக்கு இது பெருமையாக இருக்கிறது. ஒரு கதையும் இசையும் நல்ல வரிகளும் சேரும்போது மிகப்பெரிய அளவில் வெற்றி கிடைக்கும். இயக்குனர் விஜய், இசையை மனதில் வைத்து தான் இந்த கதையை எழுதி இருக்கிறார். ஒவ்வொரு பாடல்களுக்கும் பல மாதங்கள் செலவழித்திருக்கிறோம். இந்த படத்தில் மலையாள இயக்குனரை பாடகராக அறிமுகப்படுத்தி இருக்கிறோம். தரமான பொழுதுபோக்கு படத்தை எதிர்பார்க்கும் ரசிகர்களுக்கு இந்த படம் ஒரு சிறந்த பொழுதுபோக்காக இருக்கும் என்று கூறியிருக்கிறார்.






