தமிழ் சினிமாவில் பிரபல இசையமைப்பாளர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ். இவர் இசையமைப்பாளராக அறிமுகமான மின்னலே படத்தின் பாடல்கள் இன்றளவும் ரசிகர்களின் பேவரைட் பிடலாக இருந்து வருகிறது. தற்போது ஹரிஷ் ஜெயராஜ் சூர்யா நடித்துள்ள காப்பான் படத்திலும் இசையமைப்பாளராக பணியாற்றியுள்ளார்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் சூர்யா. சமீபத்தில் செல்வராகவன் இயக்கத்தில் உருவான NGK திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. அதனைத் தொடர்ந்து கே.வி.ஆனந்த் இயக்கத்தில் காப்பான் திரைப்படம் ஆகஸ்ட் மாதம் 30 ஆம் தேதி வெளியாக உள்ளது.
இதையும் பாருங்க : கொஞ்ச நாள்ள அடங்கிடுவா.! பிக் பாஸ் போட்டியாளர் குறித்து சிம்பு சொன்ன விஷயம்.!
சூர்யாவுடன் நடிகர் மோகன்லால் ஆர்யா மற்றும் சாயிஷா போன்ற முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர்.இப்படத்திற்கான ஆடியோவெளியீட்டு விழா நேற்று சென்னையில் மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது. அந்நிகழ்ச்சியில் பல்வேறுபட்ட பிரபலங்கள் பங்கேற்றுள்ளனர்.
அந்த நிகழ்ச்சியில் இப்பட இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜின் மகள் நிகிதா ஹாரிஸ் மேடையில் காப்பான் பட பாடல் பாடியுள்ளார். மேலும் காப்பான் படத்திலும் பாடல் பாடியுள்ளாராம்.மேடையில் அவர் பாடியதைக் கண்ட ரசிகர்கள் அவரை மிகவும் பாராட்டி உள்ளனர். மேலும், மேடையில் இருந்த அனைவருமே நிகிதாவின் குரலை கேட்டு சொக்கிப்போய்விட்டனர்.