தமிழ் மக்களை கொன்ற மகளுக்கு தமிழகத்தில் தம்பட்டமா? – ஹாரிஸ் ஜெயராஜை திட்டி தீர்க்கும் நெட்டிசன்கள்.

0
2050
yohani
- Advertisement -

சமீப காலமாகவே சோசியல் மீடியாவில் சில ஆல்பம் பாடல்கள் ஜெட் வேகத்தில் வைரலாகிறது. அந்த வகையில் சமீபத்தில் இன்ஸ்டாகிராம், டுவிட்டர் போன்ற சமூக ஊடகங்களில் பலரின் பின்னணிப் பாடலாக ’மணிகே மாகே ஹிதே’ என்ற பாடலை கேட்டிருப்பீர்கள். இந்த பாடல் சமூக உடல்களில் ஆயிரக்கணக்கான தேடல்களை கொண்டுள்ளது. இந்த பாடலுக்கு சொந்தமான பாடகி இலங்கையை சேர்ந்த யோஹானி. இவருக்கு 28 வயது தான் ஆகிறது மேலும் இவர் இலங்கை இசைக்கலைஞர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

-விளம்பரம்-

இலங்கை மட்டுமல்லாது இந்திய அளவிலும் இந்த பாடல் ஹிட் அடித்தது. அதிலும் இந்த பாடல் கடந்த மூன்று மாதங்களில் மட்டும் 9.2 கோடிக்கும் அதிகமான பார்வையாளர்கள் பார்த்துள்ளார்கள். மேலும், இந்த பாடலை இந்தியர்கள் பலரும் இன்ஸ்டாவில் ரீல்ஸ் செய்து வெளியிடவே இந்த பாடல் மேலும் பிரபலமானது.

- Advertisement -

இந்த பாடல் பிரபலமானது குறித்து பேசிய யோஹானி,எனது பாடலை பல பெரிய நட்சத்திரங்கள் விரும்பியதற்கு நான் மிகவும் கடமைப்பட்டுள்ளேன். பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் அவர்கள் கூட என்னுடைய பாடலைப் பார்த்து ட்விட் செய்துள்ளார். ஒருநாள் அவருக்கு முன்னால் நேரடியாக பாடுவேன். என்னுடைய கனவு நினைவாகும் என நம்புகிறேன் கூறி இருந்தார்.

இந்த பாடல் மூலம் கிடைத்த பிரபலத்தின் மூலம் இவருக்கு இந்தி பிக் பாஸ் 15 துவக்க விழாவில் மேடையில் பாடும் வாய்ப்பும் கிடைத்தது. அதே போல பொதுவாக இது போன்ற சமூக ஊடகங்கள் மூலம் பிரபலமடைபவர்களுக்கு சினிமாவில் பெரும்பாலும் வாய்ப்பு கிடைத்துவிடும். அந்த வகையில் யோஹானிக்கும் சினிமாவில் பாடும் வாய்ப்பு கிடைத்தது.

-விளம்பரம்-

சமீபத்தில் பிரபல இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ், மதன் கார்க்கி மற்றும் யோஹானியுடன் இருக்கும் புகைப்படம் ஒன்றை பகிர்ந்து இருந்தார். இந்த புகைப்படத்தை பார்த்து பலரும் ஹாரிஸ் ஜெயராஜை திட்டி தீர்த்து வந்தனர். இதனால் அவர் இந்த பதிவையே நீக்கிவிட்டார். அதற்கு காரணம் யோஹானியின் தந்தையால் எழுந்த விமர்சனங்கள் தான்.

யோஹானியின் தந்தையான பிரசன்ன டீ சில்வா தான் ஈழ தமிழகர்களை கொன்று குவித்தவர் என்று கூறி பதிவிட்டுள்ள ட்விட்டர் வாசி ஒருவர் “என் அப்பாதான் விடுதலைப்புலிகளையும் எங்களை எதிர்த்த தமிழர்களையும் கொன்று எங்கள் நாட்டை விடுதலை செய்தவர்” என்று பெருமைப்படும் இனப்படுகொலையாளி ராணுவ தளபதி பிரசன்ன டீ சில்வாவின் மகளை பாட்டு பாட வைத்திருக்கிறார்கள். ஹாரிஸ் ஜெயராஜும் , மதன் கார்க்கியும் தூ…தமிழர்களா நீங்கள்? என்று கூறியுள்ளார்.

Advertisement