கொரோனா நிலை குறித்து தவறான தகவல்- பிரபல நடிகர் மீது சட்ட நடவடிக்கை. விஜயபாஸ்கர் அறிவிப்பு.

0
977
vb

நாளுக்கு நாள் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே இருப்பதால் சிகிச்சை அளிக்க இடமில்லாமல் அரசாங்கமும் மருத்துவர்களும் தத்தளித்து வருகிறார்கள். இந்நிலையில் பிரபல நடிகர் ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்க இடம் இல்லாமல் போனதால் சோஷியல் மீடியாவில் புகார் அளித்துள்ளார். மருத்துவமனைகளில் பாதிக்கப்பட்ட நோயாளிகளை அட்மிட் செய்ய பெட் இல்லாத அளவிற்கு இருப்பதாகப் புகார்கள் எழுந்து வருகின்றன.

இந்நிலையில் நடிகரும், பிரபல தொகுப்பாளருமான வரதராஜன் அவர்கள் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியது, என்னுடைய நண்பர் ஒருவருக்கு இரண்டு நாட்களாக காய்ச்சல் இருந்தது. இன்று காலை அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது. கொரோனா அறிகுறி என்பதால் மருத்துவமனைக்குச் செல்ல முயற்சித்த போது எந்த மருத்துவமனையிலும் பெட் இல்லை. இங்கு அழைத்துக்கொண்டு வராதீர்கள் எங்களால் சிகிச்சையளிக்க முடியாது என்று மருத்துவமனை நிர்வாகங்கள் தெரிவித்தது. மருத்துவமனைகளின் ஓனர், எம்டி என அனைவரிடம் பேசினோம்.

- Advertisement -

யாரும் அவர்களுக்கு உதவ முன்வரவில்லை. அரசாங்கம் இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். அவருக்கு எப்படிக் கொரோனா வந்தது என்றே தெரிவில்லை. ஏன்னா, அவர் மிகவும் சுத்தம் கடைபிடிக்கப்படுபவர். அப்படி இருந்தும் அவர் உடல் நிலை பாதிக்கப்பட்டார். அதனால நமக்கெல்லாம் கொரோனா வராது என்று யாரும் வெளியில் சுற்றாதீர்கள். தேவைப்பட்டால் மட்டும் வெளியில் செல்லுங்கள். வெளியில் செல்லும் போது மாஸ்க் வெளியில் செல்லும் போது மாஸ்க் அணிந்து கொண்டு அரசின் நடைமுறைகளைக் கடைப்பிடியுங்கள் என்று கூறியுள்ளார்.

இப்படி வரதராஜன் அவர்கள் கூறிய வீடியோ சோஷியல் மீடியாவில் வெளியானது. இதைப்பார்த்த தமிழக சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர் அவர்கள் சென்னையில் படுக்கைகள் இல்லை என்று சொல்வது பொய்யான தகவல். இது குறித்து அவர் மீது சட்டபூர்வ நடவடிக்கை எடுக்கப்படும். அதோடு சென்னையில் இன்னும் 5000 படுக்கைகள் காலியாக உள்ளன என்று சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர் உறுதியளித்துள்ளார்.

-விளம்பரம்-
Advertisement