பரணியின் அமெரிக்க ரசிகை – மனம் நெகிழச்செய்யும் உண்மை சம்பவம் !

0
2713
bharani
- Advertisement -

“ ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியைப் பார்த்த பிறகு மனசளவுல பரணி அண்ணாவோட தங்கச்சியானேன். இப்ப அவரை நேர்ல பார்த்ததுமே, அவர் குடும்பத்துல ஒருத்தியாகிட்டேன்” – நெகிழ்ச்சியாகப் பேசுகிறார் பிரியதர்ஷினி. யார் இந்த பிரியதர்ஷினி என்பவர்களுக்கு ஒரு குட்டி flash back.

-விளம்பரம்-

baranai

- Advertisement -

“எனக்காகச் சமைச்சுப்போடுறேன்னு சொன்ன அமெரிக்கத் தங்கச்சிக்கு நன்றி” என ‘பிக் பாஸ்’ ஃபைனல் நிகழ்ச்சியில் நடிகர் பரணி சொன்ன தங்கச்சிதான், மேலே உள்ள பாராவுக்குச் சொந்தக்காரர்.

“நானும் என் கணவரும் அமெரிக்காவில் வசிச்சோம். வீட்ல நிறைய தமிழ் சேனல் நிகழ்ச்சிகளைப் பார்ப்பேன். அதைப் பார்க்கிறப்ப எனக்குத் தோணுற கருத்துகளை வீடியோவா ரெக்கார்டு பண்ணி, ஃபேஸ்புக்ல போடுவேன். ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியை ஆரம்பத்துல இருந்தே விடாமப் பார்த்தேன். அதுல பரணி அண்ணாவைச் சக போட்டியாளர்கள் டார்கெட் பண்ணி அவர் மனசைக் காயப்படுத்திட்டிருந்தாங்க. அதைப் பார்க்கிறப்ப ரொம்பவே வருத்தப்பட்டேன். அவருக்கு ஒருத்தர்கூட சப்போர்ட் பண்ணலையேனு, பலமுறை அழவும் செய்திருக்கேன்.

-விளம்பரம்-

baranai

உடனே அவருக்கு சப்போர்ட் பண்ற மாதிரியும், அவரோட ஃபேமிலிக்கு ஆறுதல் சொல்ற மாதிரியும் ஒரு வீடியோவைப் பதிவு பண்ணினேன். குறிப்பா அந்த வீடியோ பதிவில், ‘பரணி அண்ணாவுக்குச் சீக்கிரமே சாப்பாடு போடுறேன்’னும் சொல்லியிருந்தேன். அதன் பிறகு ‘பிக் பாஸ்’ வீட்டுலேருந்து அவர் வெளியே வந்துட்டார். அப்புறம் அவர்கிட்ட போன்ல பேச நினைச்சாலும், ‘முன்பின் அறிமுகமில்லாத என்னை அவருக்குத் தெரியாதே; அதோடு நான் பேசின வீடியோவை அவர் பார்த்திருக்க வாய்ப்பிருக்கா?’னு எனக்கு நானே கேள்வி கேட்டு அமைதியாகிட்டேன்.

அதுக்கப்புறம் அந்த நிகழ்ச்சியோட ஃபைனல் அன்னிக்கு பரணி அண்ணா ‘எனக்குச் சாப்பாடு போடுறேன்னு சொன்ன அமெரிக்கத் தங்கச்சிக்கு நன்றி’னு டிவியில சொன்னதைப் பார்த்து நெகிழ்ந்துட்டேன். என் அன்பை அவர் ஏத்துகிட்டதும் செம சந்தோஷமாகிடுச்சு. உடனே, ‘என்னை மறக்காம ஞாபகம் வெச்சு ஃபைனல் நிகழ்ச்சியில பேசினதுக்கு நன்றி’னு ஒரு வீடியோவைப் பதிவு பண்ணினேன்.

baranai

ரொம்பக் கஷ்டப்பட்டு பரணி அண்ணா நம்பர் வாங்கி அவருக்குப் படபடப்போட கால் பண்ணினேன். என்னைப் பத்தி சொன்னவுடனே, ‘உங்க வீடியோவைப் பார்த்து ரொம்பவே சந்தோஷப்பட்டேன். உங்ககிட்டப் பேசணும்னு நினைச்சாலும், நம்பர் கிடைக்காம தவிச்சேன்’னு சொன்னார், அப்படியே அவர் மனைவி ரேவதிகிட்டேயும் பேசினேன். ‘அவர் ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியில இருந்து வெளிய வரப்போ நான் உடம்பு சரியில்லாம இருந்தேன். அப்பதான் உங்க வீடியோவைப் பார்த்தேன். மனசுக்கு ரொம்ப ஆறுதலா இருந்துச்சு’னு அண்ணி சொன்னாங்க. அதுக்கப்புறம் அவங்ககிட்ட தொடர்ந்து பேச ஆரம்பிச்சேன்” என்றவர் பரணியை நேரில் சந்தித்துப் பேசிய நிகழ்வைப் பற்றி சொன்னார்.

baranai

“நானும் அமெரிக்காவில் ஐடி வேலை செய்துகொண்டிருந்த கணவர் ராஜசேகரும் தீபாவளிக் கொண்டாட்டத்துக்காக திருநெல்வேலியில இருக்குற மாமியார் வீட்டுக்கு வந்திருக்கிறோம். அதை தீபாவளி சமயம் பரணி அண்ணாகிட்ட சொன்னேன். ‘சூரசம்ஹாரம் நிகழ்வைப் பார்க்க திருசெந்தூர் வருவோம். அப்போ கட்டாயம் உங்க வீட்டுக்கு வந்து எல்லோரையும் பார்க்கிறோம்’னு ரேவதி அண்ணி சொன்னதோட, அண்ணாவுக்கு அதைப் பத்தி பலமுறை நினைவூட்டியிருக்காங்க.

நேத்து காலையில என் அம்மா வீட்டுக்கு என்னைப் பார்க்க பரணி அண்ணா குடும்பத்தோட வந்தாங்க. அண்ணா சஷ்டி விரதம் இருக்கிறதால அவருக்கு ஸ்பெஷலா எதுவும் சமைச்சுப் போட முடியலை. ஆனா, அவருக்கு ஸ்வீட், ஆப்பிள் ஊட்டிவிட்டேன். அவர் ஃபேமிலி, எங்க ஃபேமிலி பேசின அந்தத் தருணத்தை மறக்கவே முடியாது. ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சிக்கு முன், பின் நிகழ்ந்த மாற்றங்கள். சொந்த ஊர் பத்தின விஷயங்கள் மற்றும் சினிமாத் துறை விஷயங்களைப் பத்தி அண்ணா நிறைய பேசினார்.

baranai

நான் கொடுத்த வாக்குறுதிப்படி, ‘சீக்கிரமே சென்னைக்கு வந்து, உங்க ஃபேமிலிக்குச் சமைச்சுப்போடுறேன்’னு சொன்னேன். பரணி அண்ணாவும், ‘சரி!’னு சொல்லிச் சிரிச்சார். தீபாவளிக் கொண்டாட்டத்துக்குத் தமிழ்நாட்டுக்கு வந்த நானும், கணவரும் இனி இங்கேயே நிரந்தரமா தங்கிடலாம்னு முடிவு பண்ணிட்டோம். அதன்படி சீக்கிரமே சென்னைக்கு ஷிஃப்ட் ஆகி, பிசினஸ் பண்ணலாம்னு முடிவு பண்ணியிருக்கிறோம். சில நாள்கள்ல சென்னைக்கு ஷிஃப்ட் ஆனதும், பரணி அண்ணாவுக்கு என் கையால சமைச்சுப் போடணும்” எனப் புன்னகைக்கிறார் அன்பு தங்கச்சி பிரியதர்ஷினி.

Advertisement