ஆக்‌ஷன் மற்றும் த்ரில்லரில் கலக்கும் பிரசாந்த் நடிப்பில் “ஜானி” டீஸர்..!

0
419
Jhony

தமிழ் சினிமாவில் 90ஸ் கால கட்டத்தில் நடிகர் பிரசாந்த் முன்னணி நடிகராக விளங்கி வந்தார். விஜய் மற்றும் அஜித்திற்கு போட்டியாக வருவார் என்று எதிர்பார்க்கபட்ட நடிகர் பிரசாந்த், தொடர் தோல்வி படங்களால் தமிழ் சினிமாவில் இருந்து காணாமலே போனார். கடந்த 2016 ஆம் ஆண்டு இவர் நடிப்பில் வெளியான ‘சாகசம் ‘ படமும் படு தோல்வியடைந்தது.

- Advertisement -

இந்நிலையில் இரண்டு வருட இடைவேளைக்கு பிறகு தற்போது வெற்றி செல்வன் இயக்கத்தில் ‘ஜானி ‘ என்ற புதிய படத்தில் நடித்துளளார். இந்த படத்தை நடிகர் பிரசாந்தின் தந்தை தியாகராஜன் தயாரித்துள்ளார், மேலும், இந்த படத்தில் பிரஷாந்திற்கு ஜோடியாக நடிகை சன்ஷிதா ஷெட்டி நடித்துளளார்.

மேலும், இந்த படத்தில் நடிகர் பிரபு, ஆனந்த்ராஜ், தேவதர்ஷினி போன்றவர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். சமீபத்தில் இந்த படத்தின் டீஸர் ஒன்று வெளியாகி இருக்கிறது. சஸ்பென்ஸ் திரில்லர் படமாக எடுக்கப்பட்டுள்ள இந்த படத்தின் டீஸரை பார்க்கும் போது, பேங்க் ராபெரி சம்மந்தபட்ட கதையாக இருக்கும் என்ற எண்ணம் தோன்றுகிறது. இதோ ‘ஜானி ‘ படத்தின் டீஸர் வீடியோ.