இதுவரை வெளிவந்த அனைத்து இந்தியன் 2 போஸ்டரிலும் இதை கவனிச்சீங்களா.!

0
814
indian-2
- Advertisement -

ஷங்கர் மற்றும் கமல் கூட்டணியில் வெளியான ‘இந்தியன் ‘ திரைப்படம் ,மாபெரும் வெற்றியடைந்தது. இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது நீண்ட வருடங்களுக்கு பிறகு இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை தயாரித்து வருகின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்புகள் இன்று துவங்கியது. 

-விளம்பரம்-

2.0 படத்திற்கு பின்னர் ஷங்கர் இயக்கும் முதல் படம் இது என்பதால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. காஜல் அகர்வால் கமலுக்கு ஜோடியாக நடிக்கிறார். மேலும், அனிருத் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். சமீபத்தில் இந்த படத்தின் சில போஸ்டர்களை படக்குழு வெளியிட்டது.

இதையும் பாருங்க :ந்தியன் இவருக்காக உருவாக்கப்பட்ட கதை தான்.!ரகசியத்தை சொன்ன இயக்குனர்.!

- Advertisement -

இதுவரை வெளியான அணைத்து போஸ்டர்களிலும் கமலின் இடது பக்க கண் மறைக்கபட்டுள்ளது அல்லது காண்பிக்கபடமால் இருக்கிறது. இது எதிர்ச்சியாக நடந்ததாக தெரியவில்லை, இதனை திட்டமிட்டு தான் செய்துள்ளனர் என்று தெளிவாக தெரிகிறது.

இந்தியன் முதல் பக்கத்தில் கமல் மர்ம கலைகளை அறிந்த ஒருவராக இருப்பார். எனவே, இந்த போஸ்டரில் அவரது இடபக்க கண் மறைத்து காண்பிக்கபட்டதை வைத்து பார்க்கும் போது இந்தியன் 2 வில் கமலின் கண்கள் சம்மந்தபட்டு காட்சிகள் அமைக்கபட்டுள்ளதா என்ற எண்ணம் தோன்றுகிது.

-விளம்பரம்-
Advertisement