பல ஆண்டுகள் கழித்து ஹீரோவாக களமிறங்கி இருக்கும் கருபழனியப்பன் படத்திற்கு தடை கோரி வழக்கு – என்ன காரணம் பாருங்க.

0
559
Kallan
- Advertisement -

‘கள்ளன்’ திரைப்படத்தை தடை செய்யக் கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருக்கும் சம்பவம் தற்போது சோசியல் மீடியாவில் பயங்கர பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. தமிழ் சினிமா உலகில் பிரபலமான இயக்குனராக இருந்தவர் கரு. பழனியப்பன். இவர் காரைக்குடியைச் சேர்ந்தவர். இவருக்கு சிறுவயதிலேயே தமிழ் மீதும், தமிழ் இலக்கியத்தின் மீதும் அதிக ஆர்வம் கொண்டவர். இதனால் இவர் பல பட்டிமன்றம் நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கிறார். பின் 1994 ஆம் ஆண்டில் சினிமாவிற்குள் நுழைந்தார். முதலில் இவர் துணை இயக்குனராக தான் பணியாற்றியிருந்தார்.

-விளம்பரம்-

ஆரம்பத்தில் இவர் பார்த்திபன் உடன் புள்ள குட்டிக்காரன், மற்றும் ஹவுஸ் புல் ஆகிய படங்களில் பணியாற்றினார். அதற்கு பின் இரண்டு வேறு இயக்குனர்களின் கீழும் பணிபுரிந்தார். பின் துள்ளாத மனமும் துள்ளும், பெண்ணின் மனதைத் தொட்டு, பூவெல்லாம் உன் வாசம் ஆகியவற்றின் இயக்குனர் எழிலிடமும் பழனியப்பன் பணிபுரிந்தார். அதற்கு பிறகு தான் இவர் நடிகராகவும் இயக்குனராகவும் ஆனார். பார்த்திபன் கனவு என்ற படத்தின் மூலம் தான் இவர் முதன் முதலாக இயக்குனரானார். அதனைத் தொடர்ந்து இவர் சில படங்களை இயக்கி இருக்கிறார்.

- Advertisement -

கள்ளன் படம் பற்றிய தகவல்:

தற்போது இவர் ஜீ தமிழில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் பிரபலமான தமிழா தமிழா என்ற நிகழ்ச்சியில் தொகுப்பாளராக தொகுத்து வழங்குகிறார். இந்தநிலையில் தற்போது இவர் கள்ளன் என்ற படத்தில் நடித்திருக்கிறார். இந்த படத்தை எழுத்தாளர் சந்திரா இயக்கியிருக்கிறார். தற்போது இந்த படம் பல பிரச்சனைகளை சந்தித்து வருகிறது. அதுமட்டுமில்லாமல் இப்படத்தை தடை செய்ய வேண்டும் என்று உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

கள்ளன் படம் வெளியிட தடை மனு:

இந்த இந்த வழக்கை மேலூரை சேர்ந்த கலைமணி அம்பலம் என்பவர் தாக்கல் செய்திருக்கிறார். அந்த மனுவில் அவர் கூறியிருப்பது, சந்திரா இயக்கி கரு. பழனியப்பன் நடித்த படத்திற்கு கள்ளன் என பெயர் சூட்டப்பட்டுள்ளது. தமிழக அரசு ஆவணங்களில் கள்ளன் என்று இருந்த பெயர் பின்பு கள்ளர் என்று மாற்றப்பட்டது. அந்தப் பெயரிலேயே அரசு ஜாதி சான்றிதழ் வழங்கி வருகிறது. தற்போது ‘கள்ளன்’ என்ற பெயரில் எடுக்கப்பட்டுள்ள இந்த திரைப்படம் கொள்ளைக் கூட்டத்தை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்டுள்ளது.

-விளம்பரம்-

கள்ளன் படத்திற்கு எழுந்த ப்ரச்சனை:

இது கள்ளர் சமூகத்தின் பெயரை களங்கப்படுத்தும் விதமாகவும் அந்த சமூக மக்களுக்கு மன உளைச்சலை ஏற்படுத்தும் விதமாகவும் இருக்கிறது. எனவே ‘கள்ளன்’ என்ற பெயரில் எடுக்கப்பட்ட இத்திரைப்படத்தை வெளியிட தடை விதித்தும், அப்படத்தின் தயாரிப்பாளர், இயக்குனர் மீதும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார். பின் இந்த மனுவை விசாரித்த நீதிபதி மத்திய திரைப்பட சான்று வாரிய இயக்குனர், தயாரிப்பாளர் மற்றும் இயக்குனருக்கு நோட்டீஸ் அனுப்பி உத்தரவிட்டிருக்கிறது. மேலும், இந்த வழக்கை இன்றைய தேதிக்கு ஒத்தி வைத்து இருந்தார்கள்.

மதுரையில் எழும் பிரச்சனை:

அதுமட்டுமில்லாமல் இந்த டைட்டில் பிரச்சனை கடந்த ஆண்டு டீசர் வெளியீட்டின்போது எழுந்தது. தற்போது கள்ளன் படம் வெளியாக உள்ள நிலையில் மீண்டும் எழுந்திருக்கிறது. இந்நிலையில் இப்படத்திற்கு எதிராக மதுரை நகரில் கண்டன சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும், இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வருவதால் நீதிபதி என்ன சொல்லப்போகிறார்? என்பதை பொறுத்து இருந்து பார்க்கலாம்.

Advertisement