தமிழகத்தில் முதன் முறையாக ரஜினிக்கு மிக உயரமான கேட் அவுட்.! பேட்ட பராக்.!

0
346
Petta

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் பேட்ட திரைப்படம் நாளை மறுநாள் வெளியாக உள்ளது. படத்தின் ட்ரைலர் மற்றும் பாடல்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் சக்க போடு போட்ட நிலையில் ரஜினி ரசிகர்கள் படத்தின் கொண்டாடத்தை தற்போது துவங்கியுள்ளனர்.

அஜித் நடித்துள்ள விஸ்வாசம் திரைப்படமும் அதே நாளில் வெளியாக இருப்பதால் இரன்டு படங்களுக்கு மத்தியில் கடும் போட்டி இப்போதே துவங்கியுள்ளது. இதனால் இரு தரப்பு ரசிகர்களும் பேனர்கள், கட்அவுட்கள் என்று அமர்க்களபடுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் ரஜினி ரசிகர்கள் ‘பேட்ட’ படத்திற்காக 140 அடி கட்அவுட் அமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ஏற்கனவே நெல்லையில் 100 அடி கட் அவுட் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடதக்கது.