சமந்தாவும் இல்லை, தமன்னாவும் இல்லை- அதிக சம்பளம் வாங்கும் டாப் 5 தென்னிந்திய நடிகைகள், யார் no.1 தெரியுமா?

0
640
- Advertisement -

தென்னிந்திய சினிமா உலகில் அதிக சம்பளம் வாங்கும் நடிகைகள் பட்டியல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. சமீப காலமாகவே தென்னிந்திய சினிமா உலகில் உள்ள பல நடிகைகள் பாலிவுட் வரை சென்று இந்திய அளவில் பிரபலமான நடிகைகளாக இருக்கிறார்கள். அப்படி இருக்கும் நடிகைகளில் அதிக சம்பளம் வாங்கும் நடிகைகளின் பட்டியல் தான் தற்போது வைரலாகி இருக்கிறது.

-விளம்பரம்-

திரிஷா:

தென்னிந்திய சினிமா உலகில் பல ஆண்டு காலமாக முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார் திரிஷா. இவர் ஆரம்பத்தில் படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்தாலும் பின் கமல், ரஜினி, விஜய், அஜித், சூர்யா, விக்ரம் போன்ற பல முன்னணி நடிகர்களுடன் படத்தில் கதாநாயகியாக நடித்து இருக்கிறார். அதோடு இவர் தமிழ் மொழியில் மட்டும் இல்லாமல் தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என பிற மொழி படங்களிலும் நடித்து வருகிறார். மேலும், அதிக சம்பளம் வாங்கும் நடிகைகளின் பட்டியலில் திரிஷா தான் முதல் இடத்தில் இருக்கிறார். இவர் ஒரு படத்திற்கு 10 கோடி ரூபாய் வரை சம்பளம் வாங்குகிறார். ‘தக் லைஃப்’ படத்தில் நடித்ததற்கு மட்டும் இவருக்கு 12 கோடி ரூபாய் கொடுக்கப்பட்டு இருக்கிறது.

- Advertisement -

நயன்தாரா:

தொகுப்பாளராக தன்னுடைய பயணத்தை தொடங்கி இன்று சினிமாவில் ஒரு டாப் நடிகை ஆகவும், தமிழ் சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகைகளில் ஒருவராகவும், பல ஆண்டுகாலமாக ‘லேடி சூப்பர் ஸ்டார்’ ஆகவும் நயன்தாரா கலக்கி கொண்டிருக்கிறார். இவர் முன்னணி நடிகை மட்டுமன்றி தயாரிப்பாளராகவும் திகழ்ந்து கொண்டிருக்கிறார். சமீபகாலமாக இவர் கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களை மட்டும் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். மேலும், அதிக சம்பளம் வாங்கும் நடிகைகளின் பட்டியலில் இரண்டாவது இடத்தில் நயன்தாரா இருக்கிறார். இவர் ஒரு படத்திற்கு 5 முதல் 10 கோடி ரூபாய் வரை சம்பளம் வாங்குகிறார்.

ஸ்ரீநிதி செட்டி:

கன்னட மொழியின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமாக அறியப்பட்டவர் ஸ்ரீநிதி செட்டி. இவர் கே ஜி எஃப் படத்தின் மூலம் தான் இந்தியா முழுவதும் பிரபலமானார். ஒரே படத்தில் இவருக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பும் கிடைத்தது. அதற்கு பிறகு இவர் தமிழில் கடந்த ஆண்டு விக்ரம் நடிப்பில் வெளியாகி இருந்த ‘கோப்ரா’ என்ற படத்தில் நடித்திருந்தார். அதனை தொடர்ந்து இவர் தற்போது பல படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். மேலும், அதிக சம்பளம் வாங்கும் நடிகைகளில் பட்டியலில் இவர் மூன்றாம் இடத்தை பிடித்திருக்கிறார்.

-விளம்பரம்-

பூஜா ஹெக்டே:

தென்னிந்திய சினிமா உலகில் மிக பிரபலமான நடிகையாக திகழ்பவர் பூஜா ஹெக்டே. இவர் தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். தற்போது இவர் பாலிவுட்டிலும் பிசியாக நடித்துக் கொண்டு வருகிறார். மேலும், இவர் ஒரு படத்திற்கு 5 கோடி வரை சம்பளம் வாங்குகிறார். தற்போது இவர் சூர்யா நடிப்பில் உருவாகும் சூர்யா 43 என்ற படத்தில் கமிட்டாகி இருக்கிறார்.

அனுஷ்கா ஷெட்டி:

தென்னிந்திய சினிமா உலகில் பல வருடங்களாக முன்னணி நடிகையாக கொடி கட்டி பறந்து வருகிறார் நடிகை அனுஷ்கா. இன்றும் ரசிகர்களின் கனவு கன்னியாக அனுஷ்கா திகழ்ந்து இருக்கிறார். இவர் முதலில் தெலுங்கு திரையுலகில் தான் அறிமுகமாகி இருந்தார். அதன் பின் இவர் ரஜினி, அஜித், விஜய், சூர்யா, விக்ரம் என்று தமிழ் சினிமாவில் உள்ள பல முன்னணி நடிகர்களின் படத்தில் நடித்து இருக்கிறார். மேலும், இவரை இந்திய முழுவதும் பிரபலமாக்கியது ‘பாகுபலி’ படம் தான். இந்த படத்தின் மூலம் அனுஷ்கா மக்கள் மத்தியில் தேவசேனாகவே பதித்து விட்டார். அதற்கு பின் சிறிய இடைவெளி எடுத்து கொண்ட அனுஷ்கா ‘மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலிஷெட்டி’ என்ற படத்தின் மூலம் கம்பேக் கொடுத்திருக்கிறார். மேலும், இவர் ஒரு படத்திற்கு 4- 7 கோடி ரூபாய் வரை சம்பளம் வாங்குவதாக கூறப்படுகிறது.

Advertisement