பொன்னியின் செல்வன் குந்தவை கெட்டபில் சீரியல் நடிகை ஹீமா பிந்து பதிவிட்டு இருக்கும் புகைப்படம் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. பல ஆண்டு கனவான வரலாற்று சிறப்புமிக்க காவியங்களில் ஒன்றான அமரர் கல்கியின் பொன்னியின் செல்வன் கதையை திரைப்படமாக இயக்குநர் மணிரத்னம் இயக்கி இருக்கிறார். இந்த கதையை பல பேர் முயற்சி செய்து இருந்தார்கள். ஆனால், அதை மணிரத்னம் தான் சாதித்து காட்டி இருக்கிறார். அதுமட்டும் இல்லாமல் மணிரத்னத்தின் திரை வாழ்க்கையில் இதுவரை இல்லாத அளவுக்கு மிக பிரம்மாண்டமாக இந்த திரைப்படம் வெளியாகி இருக்கிறது.
இந்த படத்தில் விக்ரம், பிரகாஷ் ராஜ், கார்த்தி, ரவி, விக்ரம் பிரபு, ஜெயராம், ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, ரகுமான், கிஷோர், அஸ்வின், நிழல்கள் ரவி, ரகுமான், லால், மோகன் ராமன், பாலாஜி சக்திவேல் என சினிமா உலகில் உள்ள பல முன்னணி நடிகர்கள் நடித்து இருக்கிறார்கள். இந்த படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்து இருக்கிறார். மேலும், தமிழ் ரசிகர்கள் மட்டும் இல்லாமல் உலக சினிமா ரசிகர்களும் பொன்னியின் செல்வன் படத்தை கொண்டாடிஇருக்கின்றனர்.
பொன்னியின் செல்வன் படம்:
படம் வெளியாகி ரசிகர்கள் முதல் பிரபலங்கள் வரை என அனைவரும் மத்தியிலும் நல்ல விமர்சனங்களை பெற்று இருக்கிறது. இது ஒரு பக்கம் இருக்க, குந்தவை கதாபாத்திரத்தில் நடித்த திரிஷா கெட்டப்பில் பலரும் போட்டோ ஷூட் நடத்தி அதை சோசியல் மீடியாவில் வைரலாக்கி வருகிறார்கள். அந்த வகையில் தற்போது சீரியல் நடிகை ஹீமா பிந்தவும் குந்தவைக் கட்டத்தில் போட்டோ சூட் நடத்தி இருக்கிறார். சின்னத்திரை சீரியலின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை ஹீமா பிந்து.
ஹீமா பிந்து குறித்த தகவல்:
இவர் ஆந்திராவை சேர்ந்தவர். இவருடைய குடும்பம் சினிமா துறையை சேர்ந்தவர்கள் என்பதால் இவருக்கும் சினிமாவின் மீது சிறு வயதிலிருந்து ஆசை ஏற்பட்டது. இதனால் கல்லூரி படிக்கும் போது ஹீமா பிந்து ரிலீஸ் வீடியோ, போட்டோ ஷூட் புகைப்படம் என செய்து கொண்டிருந்தார். அது மட்டும் இல்லாமல் இவர் எப்போதும் சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருப்பார். இதனால் இவரை எக்கச்சக்கமான ரசிகர்கள் பாலோ செய்கிறார்கள். அதன் மூலம் தான் இவருக்கு சீரியலில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.
இதயத்தை திருடாதே சீரியல்:
இவர் கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பாகி சமீபத்தில் முடிவடைந்த இதயத்தை திருடாதே என்ற சீரியலில் சஹானா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த சீரியல் ஆயிரம் எபிசோடுகளை கடந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று இருந்தது. இதனால் முதல் சீசனை அடுத்து இந்த சீரியலின் இரண்டாம் பாகமும் ஒளிபரப்பி இருந்தார்கள். இரண்டு சீசன்களுமே ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வெற்றி அடைந்தது. தற்போது இவர் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் இலக்கியா என்ற தொடரில் நடித்துக் கொண்டு வருகிறார்.
குந்தவை கெட்டப்பில் ஹீமா பிந்து:
இந்த நிலையில் இவர் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் திரிஷா நடித்த குந்தவை திரிஷா மாதிரி உடை அணிந்து போட்டோ சூட் எடுத்திருக்கிறார். தற்போது அந்த வீடியோவும், புகைப்படம் தான் சோசியல் மீடியாவில் ரசிகர்கள் மத்தியில் அதிகமாக வைரல் ஆகி வருகிறது. இதைப் பார்த்து ரசிகர்கள் பலருமே லைக்ஸ்களை குவித்தும், ஹீமா பிந்துவை பாராட்டியும் வருகின்றனர்.