இந்தி தான் தேசிய மொழி, Pan இந்தியா படம் குறித்து பேசிய கிச்சாவிற்கு காஜல் கணவர் பதிலடி.

0
408
- Advertisement -

ஹிந்தி தேசிய மொழி அல்ல என்று கன்னட நடிகர் கூறிய கருத்துக்கு அஜய் தேவ்கன் கொடுத்த பதிலடி தற்போது சோசியல் மீடியாவில் பயங்கர சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. கன்னட சினிமாவின் ராக்கிங் ஸ்டார் என்று அழைக்கப்படுபவர் நடிகர் யாஷ். இவருக்கு பெரும் புகழை ஏற்படுத்தி கொடுத்தது கே ஜி எப் திரைப்படம் தான். இந்த படம் கன்னட சினிமா வரலாற்றிலேயே அதிக வசூல் செய்த படம் என்ற சாதனையை பெற்று இருக்கிறது. இதனை தொடர்ந்து தற்போது கே ஜி எஃப் 2 படம் வெளியாகி இருந்தது. இந்தப் படத்தில் கதாநாயகியாக ஸ்ரீநிதி செட்டி நடித்திருக்கிறார். இந்த படத்தை பிரசாந்த் நீல் இயக்கி இருக்கிறார். இந்த படத்திற்கு ரவி பஸ்ரூர் இசையமைத்துள்ளார் மற்றும் பவுன் கௌடா ஒளிப்பதிவு செய்து இருக்கிறார்.

-விளம்பரம்-
Kgf

மேலும், பல எதிர்பார்ப்புகளுடன் ஏப்ரல் 14 ஆம் தேதி கேஜிஎப் 2 படம் வெளியாகி இருந்தது. படத்தில் கருடனை கொன்று கேஜிஎப்பில் கால் தடம் பதித்து இரண்டாம் கதையை துவங்குகிறார் யாஷ் . ஆனால், அது அங்கிருக்கும் பலருக்கு பிடிக்காமல் போகிறது. கேஜிஎப் இடத்தில் இருந்து யாஷை தூக்க வேண்டும் என்று பலரும் திட்டங்களை தீட்டுகின்றனர். இறுதியில் யாஷ் கேஜிஎப் மக்களை காப்பாற்றினாரா? எதிரிகளை துவம்சம் செய்தாரா? மக்களின் நிலைமை என்ன? என்பது தான் படத்தின் மீதி கதை.

- Advertisement -

கே ஜி எஃப் 2 படம் பற்றிய தகவல் :

இயக்கம், திரைக்கதை என இரண்டிலுமே பிரசாந்த் நீல் மிரட்டி இருக்கிறார். முதல் பாகத்தை விட இரண்டாம் பாகம் 2 மடங்கு மாசாக இருக்கிறது. விறுவிறுப்பான கதைகளும், காட்சிகளுக்கு காட்சி பிரம்மாண்டம், அழுத்தமான வசனம், ஆர்ப்பரிக்கும் சண்டைக்காட்சிகள், பிரம்மிக்க வைக்கும் ஆக்ஷன் என அனைத்துமே ரசிகர்களை ரசிக்க வைத்து இருக்கிறது. மேலும், இந்த படம் இந்தியா முழுவதும் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கொண்டாடப்பட்டு இருந்தது.

கே ஜி எஃப் 2 படத்தின் வசூல்:

அதுமட்டும் இல்லாமல் இந்த படத்தை பார்த்து ரசிகர்கள் முதல் பிரபலங்கள் வரை என பலரும் பாராட்டி இருந்தார்கள். இதுவரை கே ஜி எஃப் 2 படம் 800 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்திருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இந்நிலையில் கேஜிஎஃப் படம் குறித்து கன்னட நடிகர் சுதீப் பேசி இருக்கும் கருத்து தற்போது சோசியல் மீடியாவில் பேசும் பொருளாக மாறி இருக்கிறது. கே ஜி எஃப் 2 படம் மிகப்பெரிய அளவில் வெற்றி அடைந்ததைத் தொடர்ந்து விழா ஒன்றில் கன்னட நடிகர் சுதீப் கூறியிருப்பது,

-விளம்பரம்-

கன்னட நடிகர் சுதீப் கூறியது:

கன்னடத்தில் ஒரு பேன் இந்தியன் படம் எடுத்திருப்பதாக சொல்கிறீர்கள். அதில் ஒரு சிறிய மாற்றம் செய்ய விரும்புகிறேன். இந்தி தேசிய மொழி அல்ல. பாலிவுட்டிலும் pan-indian படம் எடுக்கிறார்கள். அதை தெலுங்கு, தமிழில் டப் செய்து வெளியிட்டாலும் வெற்றி பெறுவதில்லை. இன்று நாங்கள் அனைத்து இடங்களிலும் வெற்றி பெறும் படம் எடுத்து இருக்கிறோம் என்று கூறியிருந்தார். இப்படி சுதீப் கூறியிருந்த கருத்து சோஷியல் மீடியாவில் வைரலானது. இதனையடுத்து சுதீப்பின் கருத்துக்கு பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கான் பதில் கொடுத்திருக்கிறார். அதில் அவர் கூறியிருப்பது,

நடிகர் அஜய் தேவ்கான் கூறியது:

உங்களை பொறுத்தவரை இந்தி தேசிய மொழி இல்லை. அப்போது ஏன் உங்கள் தாய்மொழி படத்தை இந்தியில் டப் செய்கிறீர்கள். இந்தி எப்போதும் எங்களுக்கு தாய்மொழி மற்றும் தேசிய மொழி தான் என்று கூறியிருக்கிறார். இப்படி அஜய் தேவ்கான் போட்டிருந்த பதிவு தற்போது இந்தி மற்றும் மற்ற மொழிகள் பிரச்சனையில் எண்ணையை ஊற்றி கொழுந்துவிட்டு எரிய வைத்து இருக்கிறது. அது மட்டுமில்லாமல் ட்விட்டரில் இரண்டு தரப்பினரும் மாறி மாறி தங்களுடைய கருத்துக்களை பதிவிட்டு வருவது பயங்கர பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

Advertisement