இசையமைப்பாளரும் நடிகருமான ஹிப் ஹாப் தமிழா ஆதி தற்போது PhD முடித்து டாக்டர் ஆகி இருப்பதாக தெரிவித்துள்ளார்.தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக இருந்து நடிகராக மாறியவர்கள் பலர் உள்ளார். ஜி வி பிரகாஷ், விஜய் ஆன்டனி போன்றவர்கள் வரிசையில் இசையமைப்பாளராக இருந்து தற்போது நடிகராக வருவார் ஹிப் ஹாப் தமிழா என்று அழைக்கப்படும் ஆதி. இவர் முதலில் 2015 ஆம் ஆண்டு தான் சினிமா துறைக்குள் படங்களில் இசை அமைக்க தொடங்கினார்.

இதற்கு முன் ஹிப் ஹாப் ஆதி நிறைய ஆல்பம் பாடல்கள் வெளியிட்டு உள்ளார். அதன் மூலமாக தான் இவருக்கு சினிமா உலகில் பாட வாய்ப்பு கிடைத்தது.அதுமட்டும் இல்லாமல் அனிருத் அவர்கள் தான் ஹிப் ஹாப் ஆதியை “வணக்கம் சென்னை” என்ற படத்தில் ‘சென்னை சிட்டி கேங்க் ஸ்டார் என்ற பாட்டு மூலம் சினிமா உலகிற்கு அறிமுகம் படுத்தினார். அதனைத் தொடர்ந்து இயக்குனர் சுந்தர் .சியின் ஆம்பள படத்தில் பாடுவதற்கு வாய்ப்புக் கிடைத்தது.

Advertisement

இதனைத் தொடர்ந்து ஆதி தனி ஒருவன், இமைக்கா நொடிகள், அரண்மனை உள்ளிட்ட பல படங்களில் பாடி உள்ளார். பின் இவர் மீசையை முறுக்கு என்ற படத்தின் மூலம் நடிகர் ஆனார்.அதனை தொடர்ந்து நட்பே துணை, நான் சிரித்தால் போன்ற பல படங்களில் நடித்து உள்ளார். தற்போது இவர் நடிகர் மட்டும் இல்லாமல் இசையமைப்பாளர், இயக்குனர், திரைக்கதை ஆசிரியர் என பன்முகம் கொண்டு விளங்குகிறார்.

மேலும், இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்களும், பாடல்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. கடந்த ஆண்டு இவர் நடிப்பில் வெளியாகி இருந்தஅன்பறிவு திரைப்படம் Ottயில் வெளியாகி ஓரளவிற்கு வரவேற்பையும் பெற்று இருந்தது. தற்போது பல்வேறு படங்களில் இசையமைப்பாளராகவும் நடிகராகவும் பிஸியாக இருந்து வரும் ஹிப் ஹாப் ஆதி Phd படிப்பை முடித்து இருப்பதாக தெரிவித்து இருக்கிறார்.

Advertisement

இதுகுறித்து பேசிய அவர் ‘சந்தோஷமான விஷயம் என்னென்னா நான் பிஹெச்டி முடிச்சிட்டேன். இது படிச்சு வாங்கின பட்டம்தான். அஞ்சரை வருஷம் ஆயிடுச்சு. இதை முடிக்கத்தான் நடிப்புக்கும் ஒரு சின்ன பிரேக் எடுத்தேன். இனிமேல் நீங்கள் என்னை டாக்டர் ஹிப் ஹாப் தமிழானு கூட அழைக்கலாம்.‘Music Entrepreneurship’ என்ற பிரிவில் பிஎச்டி முடிச்சுருக்கேன். தனியார் கல்லூரிகளில் எல்லாம் கிடையாது, கோவை பாரதியார் அரசுப் பல்கலைக்கழகத்தில்தான் பிஹெச்டி பண்ணினேன்.

Advertisement

எனக்குத் தெரிந்து இந்தியாவிலேயே இந்தத் துறையில் பிஹெச்டி பட்டம் பெறுவது இதுதான் முதல் முறை என்று நினைக்கிறேன்’ என்று கூறியுள்ளார். கடந்த 2015 ஆம் ஆண்டே ட்விட்டரில் ரசிகர் ஒருவர் ஏன் நீங்கள் மீசையை எடுத்து விட்டீர்கள் உங்களுக்கு அது செமயா இருந்தது என்று கூறியிருந்ததற்கு நான் பிஎச்டி பணிகளை துவங்கியிருக்கிறேன். அதனால் தான் கிளீன் சேவ் செய்து இருக்கிறேன் என்று கூறியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement