ஹிப் ஹாப் ஆதியின் பாடலை வச்சி செய்த நெட்டிசன்கள் – அது புரியாமல் அவர் போட்ட பெருமையான பதிவு. சும்மா இருப்பாங்களா பசங்க.

0
1578
aathi
- Advertisement -

சமீபத்தில் வெளியான ஹிப் ஹாப் தமிழா படத்தின் பாடலை நெட்டிசன்கள் வச்சி செய்து வருகின்றனர். தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக இருந்து நடிகராக மாறியவர்கள் பலர் உள்ளார். ஜி வி பிரகாஷ், விஜய் ஆன்டனி போன்றவர்கள் வரிசையில் இசையமைப்பாளராக இருந்து தற்போது நடிகராக திகழ்ந்து வருவார் ஹிப் ஹாப் தமிழா என்று அழைக்கப்படும் ஆதி. இவர் முதலில் சினிமா துறைக்குள் படங்களில் இசை அமைக்கத் தொடங்கினார். இதற்கு முன் கூட ஹிப் ஹாப் ஆதி நிறைய ஆல்பம் பாடல்கள் வெளியிட்டு உள்ளார்.

-விளம்பரம்-

அதன் மூலமாக தான் இவருக்கு சினிமா உலகில் பாட வாய்ப்பு கிடைத்தது. இவர் இயக்குனர் சுந்தர். சியின் ஆம்பள படத்தில் பாடுவதற்கு வாய்ப்புக் கிடைத்தது. பின் இவர் பல படங்களில் ஹிப் ஹாப் ஆதி பாடி உள்ளார். அதுமட்டும் இல்லாமல் இவர் ஹீரோவாகவும் பல படங்களில் நடித்து உள்ளார். அதிலும் இவர் நடிப்பில் வெளிவந்த மீசையை முறுக்கு, நட்பே துணை படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

இதையும் பாருங்க : அட, கொடுமையே Ullu வெப் தொடரில் அரை நிர்வாண காட்சியில் நடித்துள்ள கோமாளி பட பஜ்ஜி ஆன்டி.

- Advertisement -

இறுதியாக இவர் நடிப்பில் வெளியான நான் சிரித்தாள் திரைப்படம் எதிர்பார்த்த அளவு வெற்றி பெறவில்லை இருப்பினும் இவர், சிவகுமாரின் சபதம், அன்பறிவு போன்ற படங்களில் நடித்து வருகிறார். ‘நட்பே துணை’, ‘நான் சிரித்தால்’ ஆகிய படங்களில் நாயகனாக மட்டுமே நடித்திருந்த ஆதி தற்போது ‘சிவகுமாரின் சபதம்’ படத்தின் மூலம் மீண்டும் இயக்குனர் ஆகி இருக்கிறார்.

இந்த படத்தில் ஒளிப்பதிவாளராக அர்ஜுன்ராஜா, எடிட்டராக தீபக், கலை இயக்குநராக வாசுதேவன் ஆகியோர் பணிபுரிந்துள்ளனர். கடந்த சில வாரங்களுக்கு முன்னர் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியான நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் ‘சிவகுமார் பொண்டாட்டி’ என்ற பாடலும் வெளியானது. இந்த பாடலை கேட்ட ரசிகர்கள் பலரும் இந்த பாடலையும் ஆதியை கலாய்த்து வருகின்றனர்.

-விளம்பரம்-

அதிலும், கடந்த சில நாட்களாக இந்த பாடலையும் ஆதியின் இசையையும் கலாய்த்து பல்வேறு விதமான மீம்கள் சமூக வலைதளத்தில் வைரலாக பரவியது. இப்படி ஒரு நிலையில் இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக தண்ணீர் குடிக்கும் புகைப்படம் ஒன்றை பதிவிட்டு, தனது பாடல் ஒரே நாளில் 1 லட்சம் லைக்ஸ்களையும் 1 மில்லியன் பார்வையாளர்களையும் பெற்றுவிட்டது என்று பதிவிட்டு இருந்தார் ஆதி.

இதை பார்த்த நெட்டிசன்கள் சும்மா இருப்பார்களா, மீண்டும் ஆதியை மீம் போட்டு கலாய்த்து, இவன் கிட்ட இருந்து இந்த இசைதுறைய காப்பாத்துங்க என்றெல்லாம் மீம் போட்டு வருகின்றனர். கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தான் ஹிப் ஹாப் ஆதியின் பாடல்களையும் அவரது பாடல் வரிகளையும் பிரபல ஸ்டான்ட் அப் காமெடியனான ஜெகன் கிருஷ்ணன் கலாய்த்து தள்ளி இருந்தார்.

இதற்கு பதில் அளிக்கும் விதமாக தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்ட ஆதி, ஊன்றி பிழைக்காதே! ஆம், ஒருவரின் உழைப்பை ஏளனம் செய்து அதில் நீ சேர்க்கும் பணமோ, புகழோ நிலைக்காது. ஒருவர் முன் மண்டியிட்டு அவரை ஊன்றி ஊன்றி நீ பிழைக்கும் போது உன் முட்டி தேய்ந்து போவது மட்டுமல்ல, சூழ்நிலை சரியில்லை என்றால் உடைந்தும் போகலாம் என்று கூறி இருந்தார். ஆனால், தற்போது ரசிகர்களே ஆதியின் இசையை கேலி செய்து வருகின்றனர்.

Advertisement