அறிவு கெட்ட முண்டம். கொரோனா வைரஸ் குறித்து கேலியாக பதிவிட்ட ஆதியை கிழித்த நெட்டிசன்.

0
4912
hiphop
- Advertisement -

உலகம் முழுவதும் பயங்கர அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது இந்த கொரோனா வைரஸ் . உலகம் முழுவதும் உள்ள 24 நாடுகளில் இந்த கரோனா வைரஸ் தொற்று உள்ளது. சீனாவின் ஹுபெய் மாகாணத்தின் தலைநகரான வுஹான் நகரில் இருந்து தான் இந்த கரோனா வைரஸ் பரவ ஆரம்பித்தது. இந்த வைரஸ் பரவலை தடுக்க உலக நாடுகள் அனைத்தும் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதனால் மக்கள் அனைவரும் பயங்கர பீதியில் உள்ளார்கள். சீனா மற்றும் உலக நாடுகளில் தற்போது இந்த கரோனா வைரஸ் தாக்குதலினால் மூவாயிரத்துக்கும் மேல் உயிரிழந்து உள்ளார்கள்.

-விளம்பரம்-

இந்தியாவில் கேரள மாநிலத்தில் மூன்று பேருக்கு இந்த கரோனா வைரஸ் தாக்குதலால் பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு குணமடைந்த நிலையில் தற்போது இரண்டு பேர் இந்த கரோனா வைரஸ் தாக்குதலினால் பாதிக்கப்பட்டு உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இத்தாலியில் இருந்து டெல்லிக்கு திரும்பிய ஒருவரும், தெலுங்கானாவை சேர்ந்த ஒருவருக்கும் இந்த கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் கொரோனா வைரஸ் குறித்து ஹிப் ஹாப் தமிழா போட்ட பதிவு ரசிகர்களை கடும் கடுப்பில் ஆழ்த்தியுள்ளது.

- Advertisement -

இதையும் பாருங்க : நடனத்தில் ஆர்வமுடையவர் விஜய் சார். ஆனால், அஜித் மாறவே இல்லை. ராபர்ட் மாஸ்டர் பேட்டி.

இதுகுறித்து சமீபத்தில் அவர், முகமூடி அணிந்தபடி இருக்கும் புகைப்படம் ஒன்றை பதிவிட்டு, நீங்கள் காற்று அதிகமாக வீசும் இடத்திற்கு படப்பிடிப்பிற்காக செல்லும்போது இப்படி தூசு படக்கூடாது என்று முகமூடி அணிந்து இருந்தால் பார்ப்பவர்கள் அனைவரும் கொரோனா வைரஸ் என்று தான் நினைப்பார்கள். கொரோனா விற்கு நோ ஏன் என்றால் நம்மிடம் நிலவேம்பு இருக்கு ப்ரோ என்று பதிவிட்டுள்ளார். ஹிப் ஹாப் ஆதியின் இந்த பதிவை ஒரு சிலர் கேலியாக பார்த்தாலும் ஒரு சிலர் கடும் கடுப்பில் ஆழ்ந்துள்ளனர். இது விளையாட்டு இல்லை, இதில் விளையாடுவதற்கு ஒன்றுமில்லை, இப்படியெல்லாம் கருத்தை பகிராதீர்கள் என்று கழுவி ஊற்றி வருகிறார்கள்.

-விளம்பரம்-

ஏற்கனவே கொரோனா வைரஸ் குறித்து கிண்டலாக பதிவிட்டு வீடியோ வெளியிட்டிருந்த பிரபல நடிகை சார்மியை ரசிகர்கள் வறுத்தெடுத்தனர். இதனால் அந்த விடீயோவை நீக்கிவிட்டு தனது செயலுக்கு மன்னிப்பும் கேட்டிருந்தார் சார்மி என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி கொரோனா வைரஸால் மக்கள் பீதியில் இருக்கும் போது கோடிகளில் சம்பாதிக்கும் நடிகர்களுக்கு இது வேடிக்கையாக தான் இருக்கிறதோ என்னவோ.

Advertisement