நடனத்தில் ஆர்வமுடையவர் விஜய் சார். ஆனால், அஜித் மாறவே இல்லை. ராபர்ட் மாஸ்டர் பேட்டி.

0
46999
robert-master
- Advertisement -

தென்னிந்திய சினிமா உலகில் மிக பிரபலமான நடன இயக்குனர் ராபர்ட். இவர் நடன இயக்குனர் மட்டுமில்லாமல் ரியாலிட்டி நிகழ்ச்சி நடுவர், இயக்குனர், தயாரிப்பாளர், நடிகர் என பன்முகம் கொண்டவர். 1991 ஆம் ஆண்டு வெளிவந்த அழகன் என்ற படத்தின் மூலம் தான் இவர் சினிமா உலகிற்கு அறிமுகமானவர். அதனைத் தொடர்ந்து பல்வேறு படங்களில் நடித்தும், நடன இயக்குனராக பணி புரிந்தும் உள்ளார். நடன ஆசிரியர் ராபர்ட் அவர்கள் தற்போது ஹூசைன் இயக்கத்தில் உருவாகியுள்ள அல்டி படத்தில் நடன இயக்குனராக உள்ளார். மேலும், இந்த படத்தின் ஹீரோ அன்பு மயில்சாமி ஆவார். இந்த படத்தின் ஹீரோ அன்பு மயில்சாமி பிரபல நகைச்சுவை நடிகர் மயில்சாமி அவர்களின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.

-விளம்பரம்-

- Advertisement -

இந்த இந்த படம் குறித்து இயக்குனர் ஹூசைன், நடன ஆசிரியர் ராபர்ட் , ஹீரோ அன்பு மயில்சாமி ஆகியோர் சமீபத்தில் பேட்டி ஒன்று அளித்து உள்ளார்கள். அதில் நடன ஆசிரியர் ராபர்ட் அவர்கள் அஜீத், விஜய், சிம்பு ஆகியோர் உடன் பணிபுரிந்த பல சுவாரசியமான விஷயங்களை சொன்னார். முதலில் விஜய் உடன் பணிபுரிந்த அனுபவங்களைக் குறித்து கேட்கையில் அவர் கூறியது, லவ் டுடே படம் நடித்த போது அவர் வெற்றி பெறவில்லை. அப்போது அவர் சினிமாவில் வளர்ந்து கொண்டிருந்த ஸ்டேஜ். அப்போதெல்லாம் நடிகர் விஜய் அவர்கள் சாதாரணமாகத் தான் நடனம் ஆடுவார். அதற்கு பிறகு சுறா படத்தில் நான் அவருடன் பணிபுரிந்தேன். சுறா படத்தில் விஜய் வெற்றி பெற்று அவர் பெரிய நடிகராகி விட்டார்.

அவருடைய நடனமும் அதற்கு பின்னால் வெறித்தனமாக இருந்தது. பின் விஜய் நடனத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து ஆட தொடங்கினார். விஜய் இது பலரும் கற்றுக்கொள்ள வேண்டிய விஷயம். சினிமா துறையில் கொஞ்சம் பிரபலமான ஆனாலே இதெல்லாம் போதும் என்று சொல்கிறார்கள். ஆனால், விஜய் எவ்வளவு உச்சத்தில் இருந்தாலும் இன்னும் நிறைய ஆட வேண்டும், தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் உடையவர் என்று கூறினார். ராசி, வரலாறு படத்திலும் அஜித்துடன் நடித்த அனுபவங்களை குறித்து கூறியது, விஜய் சாருக்கு சொன்னேன் ஒரு டிரான்ஸ்மிஷன். ஆனால், அஜித் மாறவே இல்லை. ராசி படத்தில் எப்படி என் மீது தோளில் கைபோட்டு சாப்பிட்டியா? என்ன பண்றன்னு கேள்வி கேட்டாரோ, அதேபோல் தான் வரலாறு படப்பிடிப்பிலும் அவர் இருந்தார்.

-விளம்பரம்-

அதே கேள்வியை அதே ஸ்டைலில் எப்போதும் அவர் மாறாமல் அப்படியே உள்ளார். அவர் எப்போதுமே நடிகர்களை மட்டும் நலம் விசாரிப்பது இல்லை. அவருடைய குடும்பத்தினரையும் நலம் விசாரித்து கேட்பார். அவரிடம் இந்த குணம் தான் எனக்கு மிகவும் பிடிக்கும். தல அஜித் எப்போதுமே நடந்து வந்தாலே, நின்றாலே போதும் செம மாஸ். நடனமாட தேவை இல்லை என்று கூறினார். சிம்புவின் வளர்ச்சியை தடுக்கிறார்கள் என்று சமீபத்தில் சோசியல் மீடியாவில் சர்ச்சை எழுந்தது. இதுகுறித்து கேட்டபோது அவர் கூறியது, சிம்புவே இது குறித்து ஒரு பேட்டியில் கூட சொல்லியிருந்தார். சிம்பு தினமும் இரவு நேரங்களில் மியூசிக் வாசித்துவிட்டு, பாடல்கள் எழுதி விட்டு, நண்பர்களுடன் பேசி விட்டு அதிகாலை 4 மணிக்கு மேல தான் தூங்க போவார்.

காலையில் ஒன்பது மணிக்கு கால்ஷீட் வந்தால் அவரால் எப்படி வரமுடியும். இருந்தாலும் காலையில் சீக்கிரம் எழுந்து ஷூட்டிங் வர கொஞ்சம் லேட் ஆகி விடும். இரவு என்று இருந்தால் பகல் இருக்கும்; சந்திரன் என்றால் சூரியன் இருக்கும்.அதே போல தான் சிம்புவுக்கு எதிராக ஒரு கூட்டம் இருக்கமாட்டார்களா? சிம்புவை தடுக்க ஒரு பெரிய கூட்டமே இருக்கிறது. அது அனைவருக்குமே தெரியும். சிம்புவை படம் பண்ண விடாமல் தடுக்கலாம். அதை தான் சிம்பு சூசகமாக சொல்லியிருக்கிறார் என்று கூறினார்.

Advertisement