கலைஞர் காப்பாற்றிய Landmark – முதலவர் செல்ஃபி எடுத்த மாடர்ன் தியேட்டர்ஸ் வரலாறு தெரியுமா?

0
607
- Advertisement -

சரித்திர புகழ்பெற்ற மாடர்ன் தியேட்டர் முன்பு நின்று தமிழ் நாட்டின் முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் செல்பி எடுத்துக்கொண்டது தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் தயாரிப்பாளர் டி ஆர் சுந்தரம் அவர்களையும், மரடர்ன் தியேட்டரையும் யாராலும் அவ்வளவு எளிதில் மறக்க முடியாது. ஒரு காலத்தில் சென்னையை விட அதிக திரையரங்கில் சேலத்தில் என்று கூறப்படுகிறது. மேலும் ஆரம்ப காலத்தில் படங்கள் தயாரிப்பு சேலம் மாவட்டத்தை மையப்படுத்தி இருந்ததாகவும் சொல்லப்படுகிறது.

-விளம்பரம்-

தயாரிப்பாளர், இயக்குனர், நடிகர் என் பன்முகத்திறமை கொண்ட டி ஆர் சுந்தரம் என்பவர் கடந்த 1907 ஆம் ஆண்டு சேலத்தில் திருச்செங்கோட்டில் ஜவுளி வியாபாரம் செய்து வந்த பணக்கார குடும்பத்தைச் சேர்ந்தவரின் மகனாக பிறந்தவர் தான் டி ஆர் சுந்தரம். இவர் தன்னுடைய படிப்பை லண்டனில் முடித்து தமிழ் நாடு திரும்பும் நேரத்தில் தமிழில் முதல் முறையாக பேசும் படமான காளிதாஸ் வெளியாகி பெரிய வரவேற்பு பெற்றது. இந்நிலையில் குடும்ப தொழிலின் மீது கவனத்தை செலுத்தாலும் சினிமாவின் மீது இவருக்கு ஆர்வம் போக வேலாயுதம் என்ற நண்பருடன் இணைந்து டி ஆர் சுந்தரம் ஏஞ்சல் பிலிம்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை 1934ல் தொடங்கினார்.

- Advertisement -

மாடர்ன் தியேட்டர் :

பின்னர் இவரின் ஏஞ்சல் பிலிம்ஸ் நிறுவனம் மூலம் திரெளபதி வஸ்திராபரணம், நல்ல தங்காள் போன்ற படங்களை தயாரித்த இவர் தனியாக மாடர்ன் தியேட்டர் லிமிடெட் என்ற நிறுவனத்தை தொடங்கி ஒரு தனியார் நிறுவனம் போல சினிமாவை தயாரிக்க ஆரம்பித்தார். சினிமாவிற்கு தேவைப்படும் அனைத்து விஷயங்களும் ஒரே இடத்தில் உருவாக்க 10 ஏக்கரில் இடத்தை வாங்கி அங்கேயே படத்தை தயாரிக்கும் வசதியுடன் கூடிய மார்டன் தியேட்டரை உருவாக்கினார். மேலும் இதனை குறைந்த செலவிலும், குறுகிய காலத்திலும் சிறந்த படைப்புகளை தரும் நோக்கிலும் உருவாக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது

சரித்திர புகழ் :

இந்த திரையரங்கில் தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு, ஹிந்தி, ஆங்கிலம் உள்ளிட்ட பல மொழிகளில் இவர் 100க்கும் மேற்பட்ட படங்களை தயாரித்தார், மேலும் மலையாளத்தில் பேசும் படமான “பாலன்” எம்ஜிஆர் நாயகனாக நடிக்க, கருணாநிதி வசனம் எழுதினார். தமிழில் இரட்டை வேடப் படம் உத்தமபுத்திரன், தமிழ் முதல் வண்ணத் திரைப்படம் அலிபாபாவும் 40 திருடர்களும், மலையாளத்தில் முதல் வண்ணப் படம் என முக்கிய படங்களை மாடர்ன் ஸ்டேட்டஸ் தயாரித்து குறிப்பிடதக்கது.

-விளம்பரம்-

காப்பற்றிய கருணாநிதி :

இந்நிலையில் பல ஆண்டுகளுக்கு பிறகு அந்த திரையரங்கம் இடித்து வீடுகளாக கட்டப்பட்டது. இந்நிலையில் மாடர்ன் திரையரங்கின் முகப்பு அலங்கார வளைவை கட்டுமான பணியாட்கள் இடிக்க முயற்சி செய்த செய்தி சான் டிவியில் வெளியான நிலையில் அன்றய முதல்வர் கருணாநிதி கண்டுமான நிறுவனத்திடம் பேசி அந்த அலங்கார வளைவை மட்டும் இடிக்க வேண்டாம் என்று கூறினார்.

செல்பி எடுத்துக்கொண்ட ஸ்டாலின் :

இந்நிலையில் தற்போது தமிழ் நாட்டில் மாவட்ட வாரியாக முதல்வர் முக ஸ்டாலின் கள ஆய்வை மேற்கொண்டு வருகிறார். இந்த நிலையில் தான் பல ஆண்டுகளுக்கு பிறகு கருணாநிதி காப்பாற்றிய மாடரன் திரையரங்கின் அலங்கார வளைவின் முன் கருணாநிதி அவர்களின் மகன் முதலமைச்சர் முக.ஸ்டாலின் நின்று செல்பி எடுத்துக்கொண்டார். அவர் செல்பி எடுத்துக்கொண்ட புகைப்படம் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அதோடு இந்த புகைப்படம் ஒரு வரலாற்று புகைப்படம் என்பது குறிப்பிடதக்கது.

Advertisement