தரமற்ற ஹோட்டலுக்கு சீல், நல்ல Review கொடுத்ததாக கழுவி ஊற்றிய ரசிகர்கள் – இர்பான் சொன்ன ஷாக்கிங் உண்மை.

0
62097
irfan
- Advertisement -

சமீபத்தில் சென்னை தாம்பரம், சேலையூர் பகுதியில் உள்ள ஒரு பிரபலமான பிரியாணி ஹோட்டலில் சுகாதாரமற்ற உணவுகள் பரிமாறப்பபடுவதாக உணவு பாதுகாப்பு அதிகாரிகள் அந்த ஹோட்டலில் ஆய்வு நடத்தி சீல் வைத்தனர். அங்கு கெட்டுப்போன 45 கிலோ பிரியாணி, முந்திய தினம் வேக வைக்கப்பட்ட முட்டை, தரமற்ற சிக்கன், மட்டன், மீன் இறைச்சிகளை வைத்து சமையல் செய்து அதை வாடிக்கையாளர்களுக்கு பரிமாறப்பபட்டதாக உணவு பாதுகாப்பு அதிகாரிகள் கூறி அந்த ஹோட்டலுக்கு சீல் வைத்தனர். இந்த செய்தி வைரலானதை தொடர்ந்து பிரபல உணவு விமர்சகரான இர்பானை பலர் கடுமையாக சாடினர்.

-விளம்பரம்-

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் சம்மந்தபட்ட அந்த ஹோட்டலின் உணவை சாப்பிட்டு இர்பான் ஆஹா ஓஹோ என்று விமர்சனம் செய்தார். அந்த வீடியோவிற்கு கீழ் தான் ரசிகர்கள் பலரும் இர்பானை தற்போது கடுமையாக சாடி வருகின்றனர். ஆனால், உன்மையில் சீல் வைக்கப்பட்ட ஹோட்டலின் பெயர் ‘காரைக்குடி’ தான். இந்த ஹோட்டளின் கீழ் தளத்தில் தான் ‘பிரியாணி பிரதர்ஸ்’ ஹோட்டலும் செயல்பட்டு வருகிறது. இந்த இரண்டு ஹோட்டலும் ஒரே பில்டிங்கில் இருந்ததால் சீல் வைக்கப்பட்ட ஹோட்டலின் பெயரை ‘காரைக்குடி பிரியாணி பிரதர்ஸ்’ என்று குறிப்பிட்டு செய்திகள் வெளியாகியது.

இதையும் பாருங்க : கைவிட்ட காதல் கணவர், இரண்டு குழந்தையை காப்பாற்ற இப்படி ஒரு வேலை செய்யும் வல்லவன் பட நடிகை – காதல் சுகுமார் வெளியிட்ட புகைப்படம்.

- Advertisement -

இதனால் தான் இர்பானின் ‘பிரியாணி பிரதர்ஸ்’ ஹோட்டல் உணவு பற்றிய ரிவியூ வீடியோவில் பலர் அவரை டதிட்டி தீர்த்தனர். இப்படி ஒரு நிலையில் இது குறித்து விளக்கமளித்துள்ள இர்பான் ‘செய்யாத ஒரு தவறுக்கு பிரியாணி பிரதர்ஸ் அவப் பெயருக்கு உள்ளாகி இருக்கிறார்கள் சம்பந்தப்பட்ட அந்த ஹோட்டலின் பெயர் ‘காரைக்குடி’ அதே பில்டிங்கில் தான் பிரியாணி பிரதர்ஸ் ஹோட்டலும் இருக்கிறது.

This image has an empty alt attribute; its file name is 1-169-1024x740.jpg

ஆனால், தவறுதலாக காரைக்குடி பிரியாணி பிரதர்ஸ் என்று செய்திகள் வெளியாகி இருந்தது. இதனால் அவர்களின் தொழில் பாதிக்கப்படும். எல்லாவற்றிற்கும் மேலாக பிரியாணி பிரதர் ஹோட்டலில் சமைப்பது கிடையாது. அவர்கள் சமைப்பதற்கு என்று ஒரு சென்ட்ரல் கிட்சன் ஒன்றை வைத்திருக்கிறார்கள். அங்கிருந்துதான் உணவுகள் போகும் என்றும் கூறியிருக்கிறார்’

-விளம்பரம்-

அதே போல இந்த விவகாரம் இதுகுறித்து பிரியாணி பிரதர்ஸ் வெளியிட்டுள்ள விளக்கத்தில் ‘பிரியாணி பிரதர்ஸ் சார்பாக முதலில் உங்கள் அன்பிற்கும் நம்பிக்கைக்கும் தலை வணங்குகிறோம். சில நாட்களுக்கு முன்பு சேலையூரில் உணவு பராமரிப்பு துறை மேற்கொண்ட ஆய்வின் போது உணவு பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த ஆய்வு பிரியாணி பிரதர்ஸ் அமைந்துள்ள அதே கட்டிடத்தில் முதல் தளத்தில் உள்ள மற்றொரு நிறுவனத்திற்கு சொந்தமான உணவு விடுதியில் மேற்கொள்ளப்பட்டது. எங்களுக்கு சற்றும் தொடர்பில்லாத செய்தியை வெளியிட்டது மிக மன வேதனையை அளிக்கிறது.

அதற்கான போதிய தகவலை இந்த பதிவோடு இணைத்துள்ளோம். இச்செய்தியை தெரிவிக்கும் பொழுது மற்றொரு நிறுவனத்துடன் எங்கள் நிறுவனம் பிரியாணி பிரதர்ஸ் பெயரை சரியான புரிதல் இன்றி இணைத்து தெரிவித்துள்ளனர். இந்த நாள் வரை எங்கள் வாடிக்கையாளர்களுக்கு தரமான உணவு மற்றும் சேவை வழங்கி உள்ளதை எண்ணி பெருமைக் கொள்கிறோம். இந்த பதிவை நாங்கள் கடவுளாக எண்ணும் எங்கள் வாடிக்கையாளர்களுக்கும் மற்றவர்களுக்கும் தாழ்மையுடன் வெளியிடுகிறோம்.’ என்று பதிவிட்டுள்ளனர்.

Advertisement