ஸ்ரீதேவி எப்படி ஆனதற்கு இந்த இரண்டு ஹீரோக்கள் தான் காரணம் – நடிகையின் அதிர்ச்சி தகவல்கள்

0
1931

நடிகை ஸ்ரீதேவியும் நடிகை ஜெயப்பிரதாவும் சம்காலத்தில் ஹீரோயின்களாக நடித்த நடிகைகள் ஆவார். இவருக்கும் ஸ்ரீதேவிக்கும் ஒரு வயது தான் வித்யாசம். இருவருமே தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மலையாளம் என அனைத்து இந்திய மொழிகளிலும் நடித்து அசத்தியவர்கள். ஆனால் இருவரும் கீரியும்-பாம்புகள் போல எப்போதும் பகைதான்.

sridevi

தசாவதாரம் படத்தில் கடைசியாக மேடையில் பாடல் பாடும் சிங் கெட்டப் போட்ட கமலின் மனைவியாக வந்தவர் தான் ஜெயாபிரதா. ஜெயபிரதாவும், ஸ்ரீதேவியும் ஒரே படத்தில் நடித்துள்ளனர்.

அந்த ஹிந்தி படத்தின் பெயர் மக்சத். இதில் ராஜேஷ் கண்ணாவுக்கு ஜோடியாக ஸ்ரீதேவியும், ஜிதேந்திரவிற்கு ஜோடியாக ஜெயப்பிரதாவும் நடித்தனர். இதில் சூட்டிங்கில் இருவரும் சண்டை போட்டுகொண்டு கீரியும் பாம்புமாக இருப்பதை பார்த்த இரண்டு நடிகர்களும் சேர்ந்து இருவரையும் ஒரு ரூமில் போட்டு பூட்டினர்.

sridevi

ரூமில் அடைத்துவிட்டால் இருவதும் கண்டிப்பாக பேசியாக வேண்டும் என நினைத்துள்ளனர் இரண்டு ஹீரோக்களும். சில மணி நேரம் கழித்து ரூம் கதவை திறந்து பார்த்தால் இருவருக்கும் ஆச்சரியம் காத்திருந்தது. இருவரும் ஆளுக்கொரு மூலையில் பேசாமல் உட்கார்ந்து கொண்டு முறைத்து பார்த்துக்கொண்டு இருந்தனராம்.

என்னதான் பகை இருந்தாலும் ஸ்ரீதேவியின் உடலுக்கு அஞ்சலி செலுத்த ஜெயப்பிரதா நேற்று வந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.