கொரோனா பிரச்சனை காரணமாக திரைப்படங்கள் அனைத்தும் Ott தளத்தில் வெளியாகி வருகிறது. ஆனால், பெரிய நடிகர்களின் படங்கள் கொரோனா பிரச்சனை முடிந்த பின்னர் திரையரங்குகளில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், சூர்யா தனது ‘சூரரை போற்று’ படத்தை Amazon OTT தளத்திற்கு விற்றுவிட்டார்.வரும் அக்டோபர் 30 ஆம் தேதி இந்த அமேசான் பிரைமில் இந்த திரைப்படம் வெளியாக இருக்கிறது.

இதனால் தமிழ்த் திரையுலகினர் பலரும் ஆச்சரியமடைந்தனர். ஏனென்றால், தென்னிந்தியத் திரையுலகில் ஓடிடி தளத்தில் வெளியாகும் முதல் பெரிய ஹீரோ படமாக ‘சூரரைப் போற்று’ அமைந்துள்ளது. இதுகுறித்து அறிக்கை வெளியிட்டுள்ள சூர்யா,பல்துறை கலைஞர்களின் கற்பனை திறனிலும் கடுமையான உழைப்பிலும் உருவாகும் திரைப்படத்தைச் சரியான நேரத்தில் மக்களிடம் கொண்டு சேர்ப்பது தயாரிப்பாளரின் முக்கியக் கடமை” என்று தெரிவித்துள்ளார்.

Advertisement

இருப்பினும் சூர்யாவின் இந்த முடிவிற்கு திரையரங்க உரிமையாளர்கள் பலரும் தங்களது அதிருப்தியையும் கண்டனத்தையும் தெரிவித்து வருகின்றனர். இருப்பினும் இந்த படத்தின் வியாபாரத்தில் கிடைத்த பணத்தில் இருந்து 5 கோடி ரூபாயை கொரோனாவிற்கு எதிராக போராடும் முன்கள பணியாளர்களுக்கு நிதியாக வழங்கியுள்ளார் சூர்யா. இந்த நிலையில் இந்த படத்தின் OTT வியாபாரம் பற்றிய விவரங்களை பிரபல யூடுயூப் விமர்சகர்களான வலைப்பேச்சி சேனல் கூறியுள்ளது.

அதில், அமேசான் நிறுவனம் முதலில் இந்த படத்தின் டிஜிட்டல் உரிமையை 20 கோடிக்கு தான் ஒப்பந்தம் செய்திருந்தது ஆனால் இந்த திரைப்படம் திரையரங்கில் வெளியாகாமல் நேரடியாக OTT தளத்தில் வெளியாவதால் இந்த படத்திற்கு 60 கோடி ரூபாயை கொடுத்திருக்கிறது. இந்த படத்தின் பட்ஜெட் 60 கோடிதான். மேலு,ம் இந்த படத்தின் தொலைக்காட்சி உரிமையை விஜய் தொலைக்காட்சி 20 கோடி ரூபாய் கொடுத்து வாங்கியிருக்கிறது. மேலும் இந்தி டப்பிங் உரிமை வெளிநாட்டு வியாபாரம் என்று அனைத்தையும் சேர்த்து இந்த படம் 99 கோடி ரூபாய் வியாபாரத்தை செய்துள்ளதாக கூறியுள்ளனர் .

Advertisement
Advertisement