கண்மணியை விட ரசிகர்களை கதீஜா ரோல் அதிகம் கவர்ந்து இருப்பது குறித்து விக்கி விளக்கம் கொடுத்து இருக்கும் பேட்டி தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான இயக்குனராக திகழ்பவர் விக்னேஷ் சிவன். இவர் திரைப்பட இயக்குனர் மட்டுமில்லாமல் நடிகர், திரைப்பட பாடலாசிரியர், தயாரிப்பாளர் என பன்முகம் திரைப்பட விளங்குகிறார். தற்போது இவர் காத்துவாக்குல ரெண்டு காதல் என்ற படத்தை இயக்கி இருக்கிறார். இந்த படத்தில் விஜய்சேதுபதி, நயன்தாரா, சமந்தா, கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த், கலா மாஸ்டர் உட்பட பல நடிகர்கள் நடித்து இருக்கிறார்கள்.
மேலும், இப்படத்தினை தயாரிப்பாளர் லலித் குமார் தயாரித்து இருக்கிறார். இசையமைப்பாளர் அனிருத் இந்த படத்திற்கு இசையமைத்து இருக்கிறார். பல எதிர்பார்ப்புகளுடன் காத்திருந்த காத்துவாக்குல ரெண்டு காதல் படம் சமீபத்தில் வெளியாகி இருக்கிறது. நானும் ரவுடிதான் படத்திற்கு பிறகு விஜய் சேதுபதி- நயன்தாரா- விக்னேஷ் சிவன் கூட்டணியில் வெளியாகி இருக்கும் படம் காத்துவாக்குல 2 காதல். இந்த படம் முழுக்க முழுக்க ரொமாண்டிக் காமெடி திரைப்படமாக உருவாகி இருக்கிறது.
காத்துவாக்குல ரெண்டு காதல் படம்:
இந்த படத்தில் விஜய் சேதுபதி- ராம்போ, சமந்தா – கதீஜா, நயன்தாரா- கண்மணி எனும் கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறார்கள். படத்தில் ராம்போ கதாபாத்திரத்தில் அதிஷ்டம் இல்லாதவராக இருக்கிறார். எது வேண்டும் என்று நினைத்தாலும் அது அவரை விட்டு செல்கிறது. இந்த நிலையில் இவருடைய வாழ்க்கையில் சமந்தா, நயன்தாரா இருவரும் வருகிறார்கள். இருவரையுமே விஜய் சேதுபதி காதலிக்கிறார். இறுதியில் இருவருமே விஜய்சேதுபதிக்கு கிடைத்தார்களா? இல்லையா? என்பதே படத்தின் மீதி கதை.
சமந்தா குறித்து ரசிகர்கள் சொன்னது:
பெரிய எதிர்பார்ப்புடன் திரைக்கு வந்த இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்று இருக்கிறது. மேலும், படம் வெளியானதிலிருந்து சமந்தாவின் கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் அதிக வரவேற்பு பெற்று இருக்கிறது. பலரும் நயனை விட சமந்தாவுடைய கதாபாத்திரம் சூப்பராக உள்ளது என்று கமெண்ட் போட்டிருந்தார்கள். இந்த நிலையில் இதுகுறித்து சமீபத்தில் விக்னேஷிடம் பேட்டி எடுக்கப்பட்ட போது அதில் அவர் கூறியிருப்பது, இது நயன்தாராவுக்கு மிகவும் சந்தோஷத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
விக்கி அளித்த பேட்டி:
ஏனென்றால், இந்த படத்தில் சமந்தா நடிப்பதற்கு நயன்தாரா தான் முக்கிய காரணம். நாங்கள் இந்த படத்தில் நடிப்பதற்கு சமந்தாவிடம் கால்ஷீட் கேட்டபோது அவர் அப்போது தெலுங்கில் பிசியாக தொடர்ந்து நடித்துக் கொண்டிருந்தார். அதனால் அவரிடம் தொடர்பு கொண்டு கதையை சொல்ல முடியவில்லை. பின் நயன்தாரா தான் அவரிடம் பேசினார். ஒருமுறை கதை கேளுங்கள் பிடித்தால் ஓகே என்று நயன் சொன்ன பிறகு சமந்தா கதையை கேட்டார். கேட்டவுடன் சமந்தாவுக்கு பிடித்து போய் விட்டது.
கதிஜா குறித்து நயன் சொன்னது:
அதுமட்டுமில்லாமல் நயன் அவங்களுடைய போஷன் எந்த காலத்திலும் குறைந்து விடக்கூடாது. பலரும் அவர்களுடைய கதாபாத்திரம் குறித்து எதுவும் குறை சொல்லக் கூடாது என்று கவனமாக இருந்தார். அந்த சமயத்தில் நான் பிழை பாடல் வந்த போது மிகப்பெரிய அளவில் ஹிட்டானது. உடனே நயன் அதேபோல் சமந்தாவின் பாடல் ஹிட்டாகி விட வேண்டும் என்று அதிகமாக கவலை கொண்டிருந்தார். அதேபோல் பாடல் ஹிட்டாகி விட்டது. மேலும், படம் வெளியாகி கதிஜா கதாபாத்திரத்தை பற்றி பலரும் புகழ்ந்து பேசும்போது நயன்தாரா மிகவும் சந்தோசப்பட்டார் என்று கூறியிருக்கிறார்.