உலகளவில் நேசமணி ட்ரெண்டிங்கில் வர காரணம் இந்த நபர் தான்.!

0
1088
- Advertisement -

கடந்த இரண்டு நாட்களாக #Pray_for_Neasamani ஹேஷ் டேக் தான் சமூக வலைதளத்தில் டிரண்டிங்கில் இருந்து வருகிறது. மேலும் , வைகைப்புயல் வடிவேலு புகைப்படத்தை பயன்படுத்தி பல்வேறு மீம்கள் சமூக வலைதளத்தில் படு வைரலாக பரவி வருகிறது. திடீர் என்று வைகைபுயல் வடிவேலு எப்படி ட்விட்டரில் ட்ரெண்டிங்கில் வந்தார் என்பது பலருக்கும் ஒரு அச்சாரமாக இருந்தது.

-விளம்பரம்-

2000 ஆம் ஆண்டு வெளிவந்த ப்ரெண்ட்ஸ் படத்தில் இடம்பெற்ற இந்த காட்சிக்கு சிரிக்காமல் அவ்வளவு எளிதில் கடந்து சென்று விட முடியாது. நம்ம பெயின்டிங் கான்ட்ராக்டர் நேசமணியும், அவரது லேபர்ஸ்-ம் அள்ளித்தெளித்த நகைச்சுவை காட்சிகளை நம்மால் மறக்கவே முடியாது.

- Advertisement -

பிரெண்ட்ஸ் படத்தின் நகைச்சுவை காட்சி 19 ஆண்டுகள் கழித்து Pray_for_Neasamani என்னும் ஹேஷ்டேக் மூலம் உலகளவில் ட்ரெண்டாகி வருகிறது. அதற்கான காரணம் என்ன என்பதை வடிவேலு பாணியில் ஆழமாக போயி அலசி பார்க்கையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்துள்ளன.

ஆனால் , இந்த நகைச்சுவை திடீரென்று எப்படி ட்ரெண்ட் ஆனது எப்படி தெரியுமா? பாகிஸ்தானில் இருந்து இயங்கும் `Civil Engineering Learners’ என்ற முகநூல் பக்கத்தில் சுத்தியலின் படம் ஒன்றை போட்டு, இதனை உங்கள் ஊரில் என்னவென்று அழைப்பார்கள் என கேட்க, விக்னேஷ் என்பவர், `இதன் பெயர் சுத்தியல், பெயின்டிங் கான்ட்ராக்டர் நேசமணி தலையை இந்த சுத்தியல்தான் பதம் பார்த்தது என கோக்குமாக்காக கமெண்ட் இட, Pray_for_Neasamani ஹேஷ்டேக் உருவானது.

-விளம்பரம்-

இந்த பதிவிவை அடுத்து மீம்ஸ் கிரியேட்டர்கள் கோதாவில் இறங்கி, பிரேக்கிங் நியூஸ், டெம்ப்ளேட் வீடியோ என பலவிதமாக மீம்ஸ்களை வெளியிட தொடங்கினர். இதையடுத்து பேஸ்புக்கில் வைரலான நேசமணி தற்போது ட்விட்டரில் உலக அளவில் ட்ரெண்டாகி ‘ஓவர் நைட்டில் ஒபாமா’ ஆகிவிட்டார்.

Advertisement