அடுத்தடுத்த படங்கள், பணி சுமை, எப்படி Stress மேனஜ் பண்றீங்க – ரசிகரின் கேள்விக்கு தோனி புகைப்படத்தை போட்டு அனிருத் கொடுத்த படத்தில்.

0
548
- Advertisement -

தமிழ் சினிமாவில் இசையில் ராக் ஸ்டாராக வலம் வந்து கொண்டிருப்பவர் அனிருத் ரவிச்சந்திரன். தன்னுடைய இளம் வயதிலேயே இசையின் மூலம் ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்தவர். இவர் இசையமைப்பாளர், பின்னணி பாடகர் என பன்முகங்களை கொண்டு திகழ்கிறார். ஆரம்பத்தில் இவர் பல கச்சேரிகளில் பாடி இருக்கிறார். பின் 2011 ஆம் ஆண்டு தனுஷ் நடிப்பில் வெளிவந்து சூப்பர் ஹிட் கொடுத்த 3 படத்தின் மூலம் தான் அனிரூத் சினிமாவுலகில் இசையமைப்பாளராக அறிமுகமானார். அதுவும் ‘ஒய் திஸ் கொலவெறி’ என்ற பாடலின் மூலம் இவர் உலக அளவில் பிரபலம் ஆனார்.

-விளம்பரம்-

அதனை தொடர்ந்து இவர் பல முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இசையமைத்து வருகிறார். இவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தொடங்கி சினிமாவில் பல முன்னணி நட்சத்திரங்களின் படங்களுக்கு இசை அமைத்து உள்ளார். இவரது மெலோடி பாடல்கள், குத்து பாடல்கள் எது என்றாலும் ரசிகர்கள் மத்தியில் சும்மா கிழி தான். சமீபத்தில் வெளியாகி இருந்த டாக்டர் படத்தில் அனிரூத் உடைய பாடல்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றிருந்தது.

- Advertisement -

அனிரூத் பணியாற்றும் படங்கள்:

அதனைத் தொடர்ந்து அவர் அயலான், டான் போன்ற படங்களில் இசையமைத்து இருக்கிறார். தற்போது விஜய் நடிப்பில் உருவாகி உள்ள பீஸ்ட் படத்திலும் இசை அமைத்து உள்ளார். இந்த படத்தை இயக்குனர் நெல்சன் இயக்கி இருக்கிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்து இருக்கிறது. மேலும், இந்த படத்தில் செல்வராகவன், பூஜா ஹெக்டே, விடிவி கணேஷ் உட்பட பல நடிகர்கள் நடித்து இருக்கிறார்கள். படத்தில் நெல்சன்- அனிருத்- சிவகார்த்திகேயன் கூட்டணியில் உருவாகி இருக்கும் பாடலுக்கு அரபிக் குத்து என்று பெயரிடப்பட்டு உள்ளது.

விஜய்யின் பீஸ்ட் படம்:

மேலும், இந்த அரபிக் குத்து பாடல் பிப்ரவரி 14 அரபிக் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பாடலின் ப்ரோமோ வீடியோவின் இறுதியில் சிறிய கிலிம்ப்ஸை வெளியிட்டிருந்தனர். அந்த வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தற்போது அனிருத் அவர்கள் டாக்டர், சியான் 60, இந்தியன் 2, விக்ரம், திருச்சிற்றம்பலம், உள்ளிட்ட பல படங்களுக்கு இசை அமைத்து வருகிறார். மேலும், இவர் இசையமைப்பது மட்டும் இல்லாமல் பாடல் பாடுவது, இசை ஆல்பங்களில் நடிப்பது, விளம்பர படங்களில் நடிப்பது என பல வேலைகளில் கவனம் செலுத்தி வருகிறார்.

-விளம்பரம்-

தலைவர் 169 படம்:

தற்போது இவர் தலைவர் 169 படத்திற்கு இசையமைப்பாளராக ஒப்பந்தம் ஆகி இருக்கிறார். தற்போது நெல்சன் குமார் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் படம் தலைவர் 169. அதற்கான அதிகாரபூர்வ தகவலும் வெளியாகி இருந்தது. இந்த படத்தில் அனிருத்தும் இணைந்து இருக்கிறார். இப்படி தமிழ் சினிமாவில் டாப் நடிகர்களின் படங்களில் அனிரூத் பிசியாக இருக்கும் நிலையில் பயனர் ஒருவர் அனிருத்திடம் கேள்வி ஒன்று கேட்டிருக்கிறார். அதில் அவர் கூறியது, இந்த கடுமையான பணிச்சுமை மற்றும் அழுத்தத்தை நீங்கள் எவ்வாறு சமாளிக்கிறீர்கள்? ஏதாவது அறிவுரை இருந்தால் சொல்லுங்கள்.

ரசிகர் கேட்ட கேள்விக்கு அனிருத் அளித்த பதில்:

உங்கள் ரசிகர்களுக்கு பயனாக இருக்கும் என்று கேட்டிருக்கிறார். இதைப்பார்த்த அனிருத் அவர்கள் அவருக்கு பதில் கொடுத்து இருக்கிறார். அதில் அவர், கிரிக்கெட் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனியின் ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் முதல் 150 ரன்களை எடுத்த போது அவர் கொண்டாட்டத்தின் பிரபலமான GIF பதிவிட்டு ஆஹாஹா, enjoy the process என்று எழுதினார். இப்படி இவரின் பதிவும், வீடியோவும் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இதை பார்த்த ரசிகர்கள் அனிரூத்தை பாராட்டி மீம்ஸ்களை போட்டு வருகிறார்கள். அதில் சிலர் கிண்டலும் செய்து வருகிறார்கள்.

Advertisement