விக்ரம் வேதா படத்தின் இந்தி ரீமேக் அறிவிப்பு – யார் நடிக்கிறாங்கனு நீங்களே பாருங்க. (இவருக்கு வேதா கெட்டப் பக்காவா சூட் ஆகுமே)

0
2243
vikram
- Advertisement -

சமீப காலமாகவே பல்வேறு தமிழ் திரைப்படங்கள் பாலிவுட்டில் ரீ – மேக் செய்யப்பட்டு வருகிறது. இப்படி ஒரு நிலையில் தமிழில் வெளியாகி சூப்பர் ஹிட் அடைந்த ‘விக்ரம் வேதா’ படத்தின் இந்தி ரீ – மேக் பற்றிய அதிகாரபூர்வ தகவல் வெளியாகியுள்ளது. தமிழில் புஷ்கர் – காயத்ரி தம்பதிகள் இணைந்து இயக்கிய ‘விக்ரம் வேதா’ மாபெரும் வெற்றி பெற்றது. இந்த படத்தில் தாதாவாக வேதா என்ற கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதியும், விக்ரம் என்ற போலீஸ் அதிகாரியாக மாதவனும் நடித்து இருந்தனர்.

-விளம்பரம்-
விக்ரம் வேதா

இவர்களுடன் ஷ்ரத்தா ஸ்ரீநாத், வரலக்ஷ்மி சரத்குமார், பிரேம், கதிர் என்று பலர் நடித்து இருந்தனர். வேதாளம் கதையில் எப்படி வேதாளம், விக்ரமாதித்தன் முதுகில் அமர்ந்து கேள்வி கேட்டு பின்னர் அவரிடம் இருந்தே பதிலை வரவைக்குமோ அதே போல தான் இந்த படத்தின் கதையில் வேதாவான விஜய் சேதுபதி, விக்ரமான மாதவனிடம் கேள்வி கேட்டு பின்னர் அவரே உண்மைகளை கண்டறிய செய்வார்.

- Advertisement -

மிகவும் வித்தயாசமான அமைக்கப்பட்டு இருந்த இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் இந்த படம் இந்தியிலும் ரீ – மேக் செய்யப்படுவதாக கூறப்பட்டு வந்தது. ஆனால், இந்த படத்தில் யார் விக்ரம் – வேதாவாக நடிக்கப் போகிறார்கள் என்ற மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவியது. குறிப்பாக விஜய் சேதுபதி கதாபாத்திரத்தில் நடிப்பதற்குப் பல்வேறு முன்னணி நடிகர்களிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வந்தது.

இப்படி ஒரு நிலையில் பல்வேறு பேச்சு வார்த்தைக்கு பிறகு தற்போது இந்த படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. புஷ்கர் – காயத்ரி இயக்கத்தில் மாதவன் கதாபாத்திரத்தில் சைப் அலி கான், விஜய் சேதுபதி கதாபாத்திரத்தில் ஹிருத்திக் ரோஷன் இருவரும் நடிக்கவுள்ளனர். இதன் படப்பிடிப்பு விரைவில் தொடங்கி, செப்டம்பர் 30, 2022-ல் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

-விளம்பரம்-
Advertisement