விஜய்யிடம் இருந்து எனக்கு இது தெரிய வேண்டும். ரித்திக் ரோஷன் பேட்டி.

0
74775
Vijay
- Advertisement -

தமிழகத்தில் மட்டும் இல்லாமல் உலகம் முழுவதும் ரசிகர்களை கொண்டவர் தளபதி விஜய். கடந்த ஆண்டு அட்லீ இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளிவந்த பிகில் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. பிகில் படத்தை தொடர்ந்து தற்போது தளபதி விஜய் அவர்கள் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் “மாஸ்டர்” படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் விஜய்க்கு வில்லனாக விஜய் சேதுபதி நடித்து வருகிறார். இந்த படத்தில் நடிகர் விஜய் அவர்கள் கல்லூரி பேராசிரியாக நடிக்கிறார். சமீபத்தில் தான் இந்த படத்தின் போஸ்டர்கள் எல்லாம் சமூக வலைதளங்களில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றிருந்தது. மேலும், பல நடிகர், நடிகைகளுக்கும் தளபதியை பிடிக்கும் என்று கூறுவதை கேட்டு உள்ளோம்.

-விளம்பரம்-

தளபதி விஜய் பற்றி பல பிரபலங்கள் புகழ்ந்து பேசி இருந்தாலும் உலகமே புகழக் கூடிய ரித்திக் ரோஷன் தளபதி விஜய் பற்றி கூறி உள்ளார். தற்போது இந்த தகவல் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. உலக அளவில் உள்ள ரசிகர்களை அழகால் தன் பக்கம் இழுத்தவர் நடிகர் ரித்திக் ரோஷன். பாலிவுட்டில் பல ஆண்டு காலமாக சூப்பர் ஸ்டாராக கலக்கி கொண்டு இருக்கிறார். அதுமட்டும் இல்லாமல் இவரை ஆணழகன் என்று தான் கூறுவார்கள். இவருக்கு ஆண்கள் பட்டாளத்தை விட பெண்களின் கூட்டம் தான் அதிகம். அந்த அளவிற்கு தன் உடலை கட்டுக்கோப்பாக வைத்து உள்ளார்.

- Advertisement -

இவர் 1980 களில் குழந்தை நட்சத்திரமாக சினிமா உலகில் அறிமுகமானாலும் தற்போது வரை சினிமா உலகில் பட்டையைக் கிளப்பிக் கொண்டிருக்கிறார். மேலும், இவருடைய நடிப்பிற்கு மட்டும் இல்லாமல் இவருடைய அழகுக்கும், உடல் கட்டுக்கோப்புக்கும் என ஒரு தனி ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. ரித்திக் ரோஷன் நடிப்பில் சமீபத்தில் வெளியான “வார்” திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் நடிகர் ரித்திக் ரோஷன் அவர்கள் சென்னையில் தன்னுடைய ராடோ கடிகாரம் விளம்பரத்துக்காக நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். அதில் அவர் பல சுவாரஸ்யமான விஷயங்களை பகிர்ந்து கொண்டார். அப்போது தொகுப்பாளர் ரித்திக் ரோஷன் இடம் நீங்கள் விஜய் குறித்து ஒரு வரியில் கூறுங்கள் என்று கேட்டுள்ளார்.

அதற்கு ரித்திக் ரோஷன் அவர்கள் கூறியது, நடிகர் விஜய்யின் நடனத்தை பற்றி நான் பல இடங்களில் கேள்விப்பட்டிருக்கிறேன். அவர் எப்படி இவ்வளவு எனர்ஜியோடு ஆடுகிறார் என்று தெரியவில்லை. அவர் நடனம் ஆடுவதற்கு முன் எந்த உணவை எடுத்துக் கொள்கிறார் என்ற ரகசியத்தை தெரிந்துகொள்ள ஆர்வமாக உள்ளது என்று கூறினார். இப்படி இவர் விஜய்யின் டயட் குறித்து பேசிய வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. உலகமே கொண்டாடும் ரித்திக் ரோஷன் அவர்கள் தளபதி விஜய்யை பற்றி பேசியது விஜய் ரசிகர்களிடையே பெரும் கொண்டாட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.

-விளம்பரம்-
Advertisement