ஐபிஎல் அணியில் தேர்வான தீவிர விஜய் ரசிகர்..!

0
820
- Advertisement -

ஐபிஎல் தொடரின் 11 ஆம் சீசன் சிலமாதங்களுக்கு முன்னர் நடைபெற்று முடிந்தது. இந்த தொடரில் தோனி தலைமையிலான சென்னை அணி 3 வது முறையாக கோப்பையை கைப்பற்றியது என்பது நம் அனைவருக்கும் தெரியும்.இந்நிலையில் அடுத்த ஆண்டிற்கான ஐபில் தொடரின் ஏலம் சில நாட்களுக்கு முன்னர் துவங்கியது.

-விளம்பரம்-

பொதுவாக ஐபிஎல் தொடருக்கான ஏலம் ஜனவரி அல்லது பிப்ரவரி மாதத்தில் தான் பெங்களூரில் இரண்டு நாட்கள் நடக்கும். ஆனால் இந்த முறை டிசம்பர் மாதம் அதாவது இம்மாதம் 18 ஆம் தேதி ஐபிஎல் ஏலம் ஜெய்பூரில் தொடங்கியது. 

- Advertisement -

இந்த இரண்டு நாள் ஏலத்தில் இன்னும் முன்னணி வீரர்கள் ஏலம் எடுக்கப்படவில்லை. இந்நிலையில் தமிழகத்தை சேர்ந்த வருண் சக்கரவர்த்தி என்பவரை பஞ்சாப் கிங்ஸ் IX அணி ரூ. 8.4 கோடிக்கு ஏலம் எடுத்தது.

வருண் சக்கரவர்த்தியை பற்றிய முழு தகவல்களையும் ஒரு ஆங்கில ஊடகம் வெளியிட்டுள்ளனர். அதில் வருண் இளைய தளபதி விஜய்யின் தீவிர ரசிகர் என்பதை குறிப்பிட்டுள்ளனர். இவர் கடந்த ஆண்டு சென்னை அணியில் விளையாடியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

-விளம்பரம்-
Advertisement