சன் மியூசிக்கில் அடிக்கடி ஒளிபரப்பிய பாடலால் ஹுசைன் மீது காதலில் விழுந்துள்ள மணிமேகலை – அவரே சொன்ன லவ் ஸ்டோரி.

0
192
Manimegalai
- Advertisement -

அவன் மேல் காதல் வர இதுதான் காரணம் என்று மணிமேகலை அளித்திருக்கும் பேட்டி தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. சன் மியூசிக்கில் பிரபலமான வி.ஜே வாக வேலை பார்த்து இருந்தவர் மணிமேகலை. அதன் பின் இவர் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி இருக்கிறார். இதனை தொடர்ந்து இவர் தனியார் சேனலில் தொகுப்பாளராக அறிமுகம் ஆனார். பின் மணிமேகலை மக்கள் மத்தியில் பிரபலமான தொகுப்பாளினியாக ஆனார். இதனால் இவருக்கென ஒரு தனி ரசிகர் பட்டாளமே உருவாகி இருக்கிறது.

-விளம்பரம்-
manimegalai

இதனிடையே மணிமேகலை- உசேன் நீண்ட வருடமாக காதலித்து வந்தார்கள். ஆனால், இவர்கள் காதலுக்கு இருவீட்டாரும் சம்மதிக்கவில்லை. இதனால் பெற்றோர்கள் எதிர்ப்பை மீறி இருவரும் ரிஜிஸ்டர் மேரேஜ் செய்து கொண்டார்கள். மணிமேகலை திருமணத்திற்குப் பின்னும் தொடர்ந்து நிகழ்ச்சியில் தொகுப்பாளராக இருந்து வருகிறார். திருமணத்திற்கு பின்னர் இவர்கள் இருவரும் தனியாக தான் வசித்து வந்தார்கள். மணிமேகலை தம்பி மட்டும் இவர்களின் திருமணத்தை ஏற்றுக்கொண்டார்.

- Advertisement -

மணிமேகலை- உசேன் திருமணம்:

இதனால் அவர் மட்டும் இவர்களை அடிக்கடி சந்தித்து வந்தார். இரண்டு குடும்பத்தினரின் எந்த ஒரு ஆதரவும் இல்லாமல் தங்களின் வாழ்க்கை துவங்கிய உசேன் மற்றும் மணிமேகலை படிப்படியாக முன்னேறி இன்று சொந்தமாக நிலம், கார் என்று என்று வாழ்ந்து வருகிறார்கள். இவர்கள் இருவருமே திருமணத்திற்கு பின்னர் யூடியூப் சேனல் ஒன்றை துவங்கியிருந்தார்கள். அதில் இவர்கள் பதிவிடும் எதார்த்தமான வீடியோக்கள் பார்வையாளர்களை கவர, இவர்களது யூடியூப் பார்வையாளர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து இருக்கிறது.

மணிமேகலை குறித்த தகவல்:

யூடியூப் மூலமே இவர்களுக்கு மாதம் பல லட்சம் வருமானம் கிடைத்தது. அதுபோக சின்னத்திரையில் பல ஆண்டுகளாக காணாமல் போன மணிமேகலை குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார். மேலும், மணிமேகலை சின்னத்திரையில் தான் இழந்த மார்க்கெட்டை மீண்டும் பிடித்தார். தற்போது இவர்கள் இருவரும் மிகவும் மகிழ்ச்சியுடன் வாழ்ந்து வருகிறார்கள். அதோடு குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் மூன்று சீசன்களாக கோமாளியாக மணிமேகலை கலந்து கொண்டிருந்தார்.

-விளம்பரம்-

நிகழ்ச்சியில் இருந்து விலகிய மணிமேகலை:

பின் திடீரென நிகழ்ச்சியில் இருந்து விலகுவதாக மணிமேகலை கூறி இருந்தார். இவர் கர்ப்பமாக இருப்பதால் தான் இந்த நிகழ்ச்சியில் விலகியதாகவும், தொகுப்பாளரிடம் சண்டை எனவும் பல செய்திகள் சோசியல் மீடியாவில் வைரலாகி இருந்தது. இந்த நிலையில் யூடூப் சேனல் ஒன்றுக்கு சமீபத்தில் மணிமேகலை அவர்கள் பேட்டி ஒன்று அளித்திருந்தார். அதில் அவர், மொட்ட சிவா கெட்ட சிவா படத்தில் வரும் ரீமிக்ஸ் பாடலில் லாரன்ஸ் உடன் சேர்ந்து ஒரு சில ஸ்டெப்புகளை ஆடியிருப்பார். அந்த பாடல் சன் மியூசிக்கில் வரும்போது எல்லாம் இவருடைய டான்ஸ்சை பார்த்து இந்த பையன் சூப்பரா ஆடுறான் என்று மனசுக்குள் சொல்லி கொண்டே இருந்தது.

காதல் குறித்து சொன்னது:

தொடர்ந்து அந்த பாடலை பார்த்துக் கொண்டிருந்ததால் எப்படியாவது இவரை பாராட்ட வேண்டும் என்றும் என்னுடைய மனதிற்குள் ஆசை வந்தது. இதனால் சில பல பேரிடம் நம்பர் கேட்டேன். நம்பர் கிடைத்துவிட்டது. அப்போதுதான் இவருடைய பெயர் உசைன் என்று சொன்னார்கள். என்னடா முஸ்லிமா இருக்காரே கால் பண்ணலாமா? வேண்டாமா? என்று ஒரு மணி நேரம் யோசித்தேன். அதற்கு பிறகு இரவு 11 மணிக்கு கால் பண்ணினேன். அப்போதே என் போனில் இவருடைய பெயரை கிரஷ் என்று சேவ் செய்து விட்டேன் என்று தன்னுடைய காதல் அனுபவங்களை குறித்து மணிமேகலை கூறியிருந்தார்.

Advertisement