வாட்ஸ் அப் சேட்டில் கஞ்சா பற்றி மெசேஜ் – விசாரணையில் 22 வயது இளம் நடிகை சொன்ன காரணத்தை கேட்டு ஆடிப்போன அதிகாரிகள்.

0
1859
- Advertisement -

ஆர்யன் கானுக்கு போதை பொருள் மருந்து விநியோகஸ்தர்களின் போன் நம்பரை வழங்கியது பாலிவுட் நடிகை அனன்யா பாண்டே தான் என்றும் அதற்கான வாக்குமூலம் ஆதாரங்களும் உள்ளது என்றும் வெளியான தகவல் தற்போது சோஷியல் மீடியாவில் பயங்கர சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. பாலிவுட்டில் மிக பிரபலமான நடிகர் ஷாருக்கானின் மகன் சொகுசு கப்பலில் போதை பார்ட்டி நடத்தியதால் போலீசார் கைது செய்த சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. கடந்த 3ஆம் தேதி மும்பை அருகில் சொகுசு கப்பலில் போதை பொருள் பயன்படுத்தியதாக ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான் உட்பட 10 பேர் கைது செய்யப்பட்டனர்.

-விளம்பரம்-

மும்பை ஆர்தர் சாலையில் உள்ள சிறையில் ஆர்யன் கான் உள்ளார். அவரை வெளியில் எடுக்க ஷாருக்கான் பல வகையில் போராடி வருகிறார். மேலும், சோசியல் மீடியாவில் ஆர்யன் கான் கைது குறித்து பல தகவல்கள் எழுந்து வருகின்றன. இந்நிலையில் சொகுசு கப்பலில் பயணம் செய்யப் பட்ட நபர்களில் சிலருடன் வாட்ஸ் அப்பில் இருந்ததாகவும் அவர்களுக்கு போதைப் பொருள்களை வாங்குவதற்கு உதவியாக இருந்துது பாலிவுட் நடிகை அனன்யா பாண்டே என்று கூறப்படுகிறது.

இதையும் பாருங்க : திருமணத்திற்கு வர முடியாததால் சினேகனை நேரில் அழைத்து இசையானி கொடுத்துள்ள பரிசு – என்ன கொடுத்துள்ளார் பாருங்க.

- Advertisement -

அதுமட்டுமில்லாமல் ஆர்யன் கானுக்கு போதை மருந்து விநியோகஸ்தர்கலிங் எண்களை கொடுத்ததே அனன்யா பாண்டே தானாம். அதோடு மூன்று முறை அவருக்கு போதை மருந்துகளை வாங்க அனன்யா பாண்டே உதவியாகவும் கூறப்படுகிறது. இது குறித்து அனன்யா பாண்டே வாட்ஸ் அப்பில் அவர்களுடன் பேசிய உரையாடலும், வாட்ஸ்அப் சாட் ஆதாரமும் கிடைத்துள்ளது. இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பாக நேற்று முன்தினம் நீதிமன்றத்தில் அனன்யா பாண்டே ஆஜரானார். இதுகுறித்து விசாரித்த அனன்யா பாண்டே கூறியது,

நான் எப்போதும் போதைப் பொருளைப் பயன்படுத்துவது இல்லை. வாட்ஸப்பில் போதைப்பொருட்கள் குறித்து நான் கூறியது வெறும் ஜோக்குகாக மட்டுமே என்று போதைப் பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகளிடம் அனன்யா வாக்குமூலம் அளித்துள்ளார். இப்படி இவர் கூறிய தகவல் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. பிரபல பாலிவுட் நடிகர் சுங்கி பாண்டே, நடிகை பாவனா பாண்டே ஆகியோரின் மகள் தான் அனன்யா பாண்டே. தற்போது இவருக்கு 22 வயதுதான் ஆகிறது. இது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

-விளம்பரம்-
Advertisement