நர்ஸாக இருந்த ஜூலி நிகழ்ச்சித் தொகுப்பாளராக இருக்க ஆசைப்படுவதாகக் கூறியிருந்தார். தற்போது இவரது ஆசை கலைஞர் டி.வி-யின் வாயிலாக நிறைவேறியிருக்கிறது. கலைஞர் டி.வி-யில் ஒளிப்பரப்பாகிவரும் ஓடி விளையாடு பாப்பா நிகழ்ச்சியின் ஆறாவது சீஸனை கோகுலுடன் சேர்ந்து இவர் தொகுத்து வழங்கப்போகிறார்.
இது குறித்து விகடன் சார்பாக ஜூலியிடம் கேட்டபோது, ``சமீபத்தில் எனக்கு கலா மாஸ்டர் போன் பண்ணி, `என்னோட ஷோவுக்கு ஆங்கராக இருக்க உனக்கு விருப்பமா’னு கேட்டார். நானும் ஓகேனு சொன்னேன். நான் ஓகே சொன்ன ரெண்டாவது நாள், கலா மாஸ்டர் கால் பண்ணி `நீதான் என் ஷோவோட ஆங்கர்’னு சொன்னார். என் நீண்ட நாள் ஆசை கலா மாஸ்டர் மூலமா நிறைவேறியிருக்கு. அவருக்குதான் நன்றி சொல்லணும். ஒரு சக்சஸ்ஃபுல் தொகுப்பாளியாக நான் வலம் வருவேன்னு எனக்கு நம்பிக்கை இருக்கு’’ என்றார்.




