விஜய் இல்லாமல் இந்த சாதனை என்னால் செய்து இருக்க முடியாது – இசையமமைப்பாளர் ட்விட்டரில் புகழாரம்

0
1350
imman

தற்போது தமிழ் சினிமாவில் மாதத்திற்கு ஒரு புது இசையமைப்பாளர்கள் வருகின்றனர். அப்படி பார்த்தால் ரொம்ப காலம் தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக நீடிப்பது கடினம் தான்.

vijay

ஆனால் வெகு சில இசையமைப்பாளர்களே 100 படங்களை தாண்டி இசையமைத்து இன்னும் தமிழ் சினிமாவில் இயங்கி வருகின்றனர். அவர்களில் டி.இமானும் ஒருவர். இவர் கடந்த 2002ஆம் ஆண்டு விஜயின் தமிழன் திரைப்படத்தில் இசையமைப்பாளராக அறிமுகம் ஆனவர்.

தற்போது ஜெயம் ரவி நடித்துள்ள விண்வெளி பற்றிய படமான டிக் டிக் டிக் படத்திற்கு இசையமைத்துள்ளார். இது இமானின் 100வது படமாகும். இதனால் பல்வேறு தரப்பினரும் இமானை பாராட்டி வருகின்றனர்.

ஆனால் இந்த சாதனைக்கு காரணமாக இமான் காட்டியது தளபதி விஜயை தான். அவர் மட்டும் தமிழன் படத்தில் எனக்கு வாய்ப்பு கொடுக்கவில்லை என்றால் நான் தற்போது டிக் டிக் டிக் வரை வந்திருக்க மாட்டேன்.

என நெகிழ்ச்சி பொங்க தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.