புத்திசுவாதீனமில்லாத மகன்.!கண்ணீர் விட்டு அழுத அம்மா..?யாருக்கும் தெரியாமல் விஜய் செய்த உதவி.!

0
1787
vijay-5

கடந்த மே 22 ஆம் தேதி தூத்துக்குடியில் நடந்த ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தின் போது போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் பலர் காயமடைந்த நிலையில் அவர்களுக்கு தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் பாதிக்கப்பட்டவர்களை நடிகர் விஜய் நேற்று இரவு எந்தவித விளம்பரமும் இல்லாமல் நேரில் சென்று சந்தித்துள்ளார்.

vijay 2

- Advertisement -

தூத்துக்குடியில் நடைபெற்ற போராட்டத்தில் பாதிக்கப்பட்ட மக்களை நேற்று இரவு நடிகர் விஜய் தனது ரசிகர்களுடன் எந்த வித ஆரவாரமும் இல்லாமல் இரு சக்கர வாகனத்தில் சென்று நேரில் சந்தித்தார். மேலும் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களின் 13 குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறியதுடன் அவர்களின் குடும்பத்தினருக்கு தலா 1 லட்ச ரூபாய் நிதியுதவியும் வழங்கினார்.

இந்நிலையில் போராட்டத்தின் போது உயிரிழந்த 13 பேரில் ஒருவராண கந்தையா என்பவரின் வீட்டிற்கு சென்ற விஜய், கந்தைய்யா மனைவி ஜெயலக்ஷ்மி என்பவரை சந்தித்து ஆறுதல் கூறி சம்பவத்தை பற்றி கேட்டுள்ளார். தனது கணவரின் உயிரிழந்த சம்பவம் குறித்து நடிகர் விஜய்யிடம் தெரிவித்த ஜெயலக்ஷ்மி “என்னுடைய புருஷன் போராடத்தப்போநெஞ்சில குண்டு பாஞ்சி செத்துட்டாருனு டிவியில பாத்து தான் தெரிஞ்சிகிட்டேன்,அவர் தான் எங்க குடும்பத்த காப்பாத்திட்டு இருந்தாரு. எனக்கு 18 வாசுல புத்தி ஸ்வாதீனம் இல்லாத ஒரு மகன் இருக்கான் . அவனை குணப்படுத்த எதாவது வழி செஞ்சீங்கன்னா நல்லா இருக்கும் ” என்று விஜய்யிடம் உதவி கேட்டுள்ளார்.

-விளம்பரம்-

kanthaiya

இதையடுத்து கந்தையாவின் மனைவி ஜெயலக்ஷ்மிக்கு ஆறுதல் கூறிய விஜய் “கவலைப்படாதீங்க, உங்கள் மகனை குணப்படுத்த ஒரு நல்ல டாக்டரை ஏற்பாடு செய்கிறேன் என்று கூறி, இந்த நம்பருக்கு போன் போடுங்க, சென்னைக்கு போனதும் நான் உடனே ஏற்பாடு பன்றேன்” என்று அவருக்கு ஆறுதல் கூறியுள்ளார். விஜயின் இந்த நல்ல குணத்தை பற்றி கந்தையாவின் மனைவி ஜெயலக்ஷ்மி கூறுகையில் அவரது கண்களில் கண்ணீர் ததும்பி வழிந்தது.

Advertisement