புதுப்பேட்டை படத்தில் சினேகாவுக்கு டப்பிங் பேசியது இந்த பிரபல சீரியல் நடிகையை..? புகைப்படம் உள்ளே

0
645
puthuppettai

சின்னத்திரையில் எந்தக் கதாபாத்திரம் கொடுத்தாலும் அசால்டாகக் கலக்குபவர், தேவி பிரியா. 20 வருடங்களுக்கும் மேலாக சின்னத்திரையில் உலா வருபவர். தற்போது, கலர்ஸ் தொலைக்காட்சியின் `வந்தாள் ஶ்ரீதேவி’ சீரியலில் நடித்துவருகிறார். அவரைப் பற்றிய குட்டி பயோடேட்டாவுடன் தொடர்வோம்.

devi priya

பெயர்: தேவி பிரியா
அறிமுகமான படம்: டீனேஜில், `மின்சார கனவு’
தற்போது நடிப்பது: `வந்தாள் ஶ்ரீதேவி’ சீரியல்
பிடித்த கதாபாத்திரம்: போலீஸ் (*நேர்மையான போலீஸ்னா மட்டும்தாங்க)
நடிப்பு தவிர: டப்பிங் ஆர்ட்டிஸ்ட்
எதிர்காலத் திட்டம்: இயக்குநர்

சீரியஸ், ரொமான்டிக், வில்லி, காமெடி என நிறைய கதாபாத்திரங்களில் நடிச்சாச்சு. ஆனாலும், என் ஃபேவரைட், போலீஸ் கேரக்டர்தான். போலீஸ் டிரெஸ் போட்டுட்டு நடிக்கும்போது, அது எனக்கு நல்லா ஷூட் ஆகுதுன்னு பலரும் சொல்வாங்க. ஒரு கட்டத்தில் அந்த காஸ்டியூம் ரொம்பப் பிடிச்சுப்போச்சு. `சொர்க்கம்’ சீரியலில் நடிச்ச போலீஸ் கதாபாத்திரத்துக்காக, ஸ்டேட் அவார்டு வாங்கினேன்.

actress deva priya

நான் ரொம்ப வருஷமாவே டப்பிங் பண்ணிட்டிருக்கேன். உங்க எல்லோருக்கும் பிடிச்ச `புதுப்பேட்டை’ படத்தின் சினேகா குரல், என்னுடையதுதான். `தாமிரபரணி’ படத்தில் நதியா மேடமுக்கு டப்பிங் பேசினேன். `கிடாரி’, `மருது’ போன்ற படங்களில் பேசியிருக்கேன். இப்போ, `ஆண் தேவதை’ படத்துக்குப் பேசியிருக்கேன். `என் ஆளோட செருப்பைக் காணோம்’, `கத்துக்குட்டி’ படங்களில் நடிச்சிருந்தேன். ரீசன்ட்டா, `கண்ணே கலைமானே’ படத்தில் நடிச்சிருக்கேன். அந்தப் படத்தின் ரிலீஸுக்காக வெயிட்டிங். `வேலையில்லா பட்டதாரி- 2′ படத்தில் காஜோல் கதாபாத்திரத்துக்கு என்னைத்தான் டப்பிங் பேசக் கூப்பிட்டாங்க. அப்போ, உடம்பு சரியில்லாததால் பண்ண முடியலை. அந்த வாய்ப்பை மிஸ் பண்ணிட்டேன்னு ரொம்பவே ஃபீல் பண்றேன். எதிர்காலத்தில் இயக்குநராக ஆகறதுதான் என் ஆசை” என்கிறார் தேவி பிரியா.

அந்த காஸ்டியூமை ரொம்பப் பாதுகாப்பா வெச்சிருந்தேன். சென்னையில் வெள்ளம் வந்தபோதுகூட அந்த டிரெஸைப் பாதுகாப்பா பெட்டியில் போட்டுவெச்சிருந்தேன். டிரெஸ் பழசாகி, போட்டுக்க முடியாத நிலையில் இருந்தாலும் இப்பவும் வெச்சிருக்கேன்” என்றபோது தேவி பிரியா பேச்சில் அத்தனை பூரிப்பு.

devipriya-serial-actress

`ரோமாபுரி பாண்டியன்’, `தென்பாண்டி சிங்கம்’ என ரெண்டு வரலாற்றுச் சீரியல்களில் என் திறமையை முழுசா வெளிப்படுத்தினேன். எனக்கு ஒரு பழக்கம் இருக்குங்க. ஒரு கேரக்டரில் நடிச்சா அந்த கேரக்டரை அப்படியே உள்வாங்கிப்பேன். அதனாலேயே, சின்ன வயசுலேயே என் முகம் ரொம்ப மெச்சூர்டு ஆயிடுச்சு. இப்போ, `வந்தாள் ஶ்ரீதேவி’ சீரியலில் நடிச்சுட்டிருக்கேன். எப்பவும்போல போல்டான கதாபாத்திரம்” என்றவரிடம், டப்பிங் பற்றி கேட்டோம்.