தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகையாக உயர்ந்து உள்ளார் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் . ஐஸ்வர்யா ராஜேஷ் அவர்கள் திரைப்பட நடிகை, நடன கலைஞர், தொகுப்பாளினி பல துறைகளில் பங்காற்றி வருகிறார். இவர் 2011 ஆம் ஆண்டு வெளியான ‘அவர்களும் இவர்களும்’ என்ற படத்தின் மூலம் தான் தமிழ் திரைப்படத்துறைக்கு அறிமுகமானார். இதனை தொடர்ந்து இவர் அட்டகத்தி, காக்கா முட்டை, தர்மதுரை, குற்றமே தண்டனை, ரம்மி, கனா உட்பட பல படங்களில் நடித்து உள்ளார்.சமீபத்தில் வந்த கனா படம் கூட இவருக்கு நல்ல பெயரை ஏற்படுத்தி தந்தது.
நடிகை ஐஸ்வர்யா, ராஜேஷ் தனுஷ் தயாரிப்பில் வெளியான காக்க முட்டை படத்தில் நடித்து அந்த படத்திற்காக சிறந்த நடிகை என்ற விருதையும் பெற்றார். இந்த படத்தில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் இரண்டு குழந்தைகளுக்கு தாயாக நடித்திருந்தார்.சமீபத்தில் மணிரத்னம் இயக்கத்தில் சரத் குமார், ராதிகா,விக்ரம் பிரபு நடித்த ‘வானம் கொட்டட்டும்’ என்ற படத்தில் தங்கை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
மேலும், சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான நம்ம வீட்டு பிள்ளை படத்திலும் சிவகார்த்திகேயனின் தங்கையாக நடித்திருந்தார். இப்படி இளம் வயதிலேயே முன்னணி நடிகர்களுக்கு தங்கையாகவும், இரண்டு குழந்தைகளுக்கு தாயாகவும் நடித்த நடிகைகளில் ஐஸ்வர்யா ராஜேஷ் ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆதரவை பெற்றார். ஆனால், இதுவே அவருக்கு ஒரு பிரச்சனையாக மாறியுள்ளது.
அம்மா மற்றும் தங்கை வேடங்களில் நடிப்பதால் தனக்கு சினிமா வாய்ப்புகள் தவறி வருகிறது என்று புலம்பியுள்ளார் ஐஸ்வர்யா ராஜேஷ் . இதுகுறித்து சமீபத்தில் பேட்டி ஒன்றில் கூறியுள்ள நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், இனி அம்மா வேடங்களில் நடிக்க மாட்டேன் என்று நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தெரிவித்துள்ளார். அம்மா வேடத்தில் நடிப்பதால் பிரபல நாயகர்கள் தம்முடன் நடிப்பதை தவிர்ப்பதாகவும், வயது அதிகமாகி விட்டதாக ரசிகர்கள் நினைப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
ஏற்கனவே, வானம் கொட்டட்டும் படத்தின் ப்ரெஸ் மீட் ஒன்றில் பேசி இருந்த ஐஸ்வர்யா ராஜேஷ், ராதிகா சரத் குமார் அவர்களின் பல படங்களை பார்த்து ரசித்திருக்கிறேன்.சாவித்ரி அம்மாவிற்கு பின்னர் தங்கை கதாபாத்திரத்தில் நடித்த முதல் நடிகை அவங்க தான். இப்போ அந்த பெருமையை நான் எடுத்துக்கொண்டு உள்ளேன். சாவித்ரா அம்மா, ராதிகா மேடம்க்கு பிறகு இப்போ நான் தான் தங்கச்சி கதாபத்திரம் பன்றேன். காக்கை முட்டை படத்தில் நான் நடிக்கும் போது எனக்கு 22 வயசு தான்.
ஆனால், என்னை தவிர வேறு எந்த நடிகையாவது அந்த வயதில் நடித்திருப்பார்களா என்று எனக்கு தெரியவில்லை என்று கூறி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், காக்க முட்டை படத்திற்க்கு பின்னர் நிறைய ஹீரோயின்கள் செய்தார்கள். அது எனக்கு மிகவும் சந்தோசமாக இருந்தது. எனக்கு மஞ்சுமா எனக்கு நல்ல தோழி, ஒரு நாள் எனக்கு அவர் போன் செய்து நான் விஜய் சேதுபதிக்கு தங்கையாக நடிக்கிறேன். நான் இதை செய்வதற்கு நீ தான் காரணம் என்று சொன்னார் என்று கூறியுள்ளார் ஐஸ்வர்யா ராஜேஷ். மேலும், ஐஸ்வர்யா ராஜேஷ் ‘வான