தென்னிந்திய சினிமாவில் தற்போது வளர்ந்து வரும் நடிகையாக திகழ்ந்து வருகிறார் நடிகை ராஷ்மிகா மந்தனா. கடந்த 2016 ஆம் ஆண்டு கன்னட மொழியில் வெளியான ‘கிரிக் பார்ட்டி’ என்ற படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார் . அது மட்டும் இல்லாமல் முதல் படத்திலேயே தனெக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை சேர்த்தவர். நடிகர் விஜய் தேவர் கொண்டாவுக்கு ஜோடியாக ‘கீதா கோவிந்தம்’ என்ற படத்தின் மூலம் தெலுங்கு மொழியில் அறிமுகமானவர். இந்த படம் பிளாக் பஸ்டர் படமாகவும் அமைந்தது.
அதிலும் குறிப்பாக இந்த படத்தில் இடம்பெற்ற “இன்கேம் இன்கேம் காவாலி” என்ற ஒரு பாடல் மூலம் இன்றைய இளைஞர்களின் ஹார்ட்டு பீட்டே நம்ம ராஸ்மிகா தான் என்று சொல்லலாம். இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகை ராஷ்மிகா மறுபடியும் விஜய் தேவர்கொண்டா உடன் இணைந்து ‘டியர் காம்ரேட்’ படத்தில் நடித்து உள்ளார். இப்படி இவர் நடிப்பில் வரும் படங்கள் எல்லாம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அதோடு நடிகை ராஷ்மிகா அவர்கள் சினிமாவிற்கு வந்த குறுகிய காலத்திலேயே ரசிகர்கள் மனதை கொள்ளை அடித்தவர்.
தெலுங்கு மற்றும் கன்னட மொழியை தொடர்ந்து தற்போது கார்த்தியின் ‘சுல்தான்’ படத்தின் மூலம் தமிழிலும் கால்பதிக்க உள்ளார். இந்த நிலையில் கடந்த 16 ஆம் தேதி வருமான வரித்துறையினர் சோதனை நடத்தியுள்ளனர். கோடகுவின் விராஜ்பேட்டை தாலுகாவில் உள்ள நடிகைகளின் வீட்டில் ஐ.டி துறையைச் சேர்ந்த சுமார் 10 அதிகாரிகள் தேடுதல் நடத்தினர். ஆனால்,அப்போது ரஷ்மிகாவின் தந்தையார் மட்டும் தான் இருந்துள்ளார். காலை 7.30 மணிக்கு துவங்கிய இந்த விசாரணை அடுத்த நாள் வரை தொடர்ந்துள்ளது.
மேலும், ராஷ்மிகாவுக்கு சொந்தமான திருமண மண்டபம் பெட்ரோல் பங்குகளிலும் இந்த சோதனையாந்து நடபெற்றிருப்பதாக இந்த சோதனையின் போது கணக்கில் வராத 25 லட்சம் ரூபாய் ரொக்கம் மற்றும் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான சொத்து ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த நிலையில் வருகிற திங்கள் கிழமை பெங்களூருவிலுள்ள வருமான வரித்துறையினர் அலுவலகத்திற்கு ராஷ்மிகா தனது தந்தையுடன் ஆஜராகும்படி அதிகாரிகள் உத்தரவிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ராஷ்மிகா தனது சொந்த ஊரில் சர்வதேச பள்ளி ஒன்றையும், பெட்ரோல் பங்கையும் தொடங்க விண்ணப்பித்திருக்கிறார் என்றும் இதனால்தான் சந்தேகமடைந்த வருமான வரி சோதனையினர் ராஷ்மிகா வீட்டில் திடீரென சோதனை நடத்தி வருவதாக சொல்லப்படுகிறது.