கோலங்கள் சீரியல் ஶ்ரீவித்யாவா இது..? இப்படி மாறிட்டாங்க..! புகைப்படம் உள்ளே !

0
3009
Kolangal srividhya

கோலங்கள்’ சீரியல் வழியே நம் வீட்டு வரவேற்பறையில் வலம்வந்தவர், நடிகை ஶ்ரீவித்யா. சிறு வயதிலேயே நடிப்புத் துறைக்கு வந்தவர். 30 வருடங்களாக நடிப்புத் துறையில் இருந்தவர், தற்போது பிஸினஸில் ஈடுபடத் தொடங்கியுள்ளார். பெண் இப்படித்தான் இருக்க வேண்டும் என்கிற கட்டமைப்புகளைத் தவிர்த்து எல்லாத் துறைகளிலும் முத்திரை பதிக்க விரும்பும் பெண். தன்னம்பிக்கையுடன் பிசினஸில் இறங்கியிருப்பவரை ஒரு குட்டி பயோடேட்டாவுடன் அவரைச் சந்திப்போமா?

srividhya

என் சொந்த ஊர், சென்னை. எம்.பி.ஏ படிச்சிருக்கேன். சின்ன வயசிலேயே நடிக்க வந்துட்டேன். எங்க ஃபேமிலி நண்பர் மூலமா நடிக்க வாய்ப்பு கிடைச்சது. குழந்தை நட்சத்திரமாக நிறைய சீரியல்களிலும், ஒரு சில படங்களிலும் நடிச்சிருக்கேன். ஒன்பதாம் வகுப்பு படிக்கும்போது, ‘கோலங்கள்’ சீரியலில் நடிக்கவந்தேன். பாலா சாரின் ‘நந்தா’ படத்திலும் நடிச்சிருக்கேன்” என்கிற ஶ்ரீவித்யா, ‘கோலங்கள்’ பற்றிப் பேசும்போதே பரவசமாகிறார்.

கோலங்கள்’ எனக்கு பெரிய பெயரை வாங்கிக்கொடுத்துச்சு. ஒன்பதாவது படிக்கும்போது நடிக்க ஆரம்பிச்சது, பி.காம் படிக்கும்போது முடிஞ்சது. கிட்டத்தட்ட 7 வருஷங்கள்.என் கணவர் தனியார் நிறுவனத்தில் வேலை பார்க்கிறார். என் ஐந்து வயது பையனை என் மாமியார்தான் பார்த்துக்கிறாங்க. கல்யாணத்துக்கு முன்னாடி சீரியலுக்கு பிரேக் எடுத்திருந்தேன். அப்புறம் ‘சித்திரம் பேசுதடி’ என்ற சீரியலில் ரீ-என்ட்ரி கொடுத்தேன். தொடர்ந்து, ‘கைராசி குடும்பம்’ சீரியலில் நடிச்சேன்.

kolangal

actress srividhya

srividhya actress

இப்போ, சீரியல் நடிப்புக்கு பிரேக் எடுத்துட்டு பிசினஸில் இறங்கியிருக்கேன். இப்போதைக்கு சீரியலில் நடிக்கும் பிளான் இல்லை. ‘கிளவுட்ஸ் கிச்சன்’ என்கிற பெயரில் ஒரு பிஸினஸை ஆரம்பிச்சிருக்கேன். அது என்ன பிசினஸ்னா, ஃபேச்சுலர்ஸுக்கு அவங்க விருப்பப்படும் இரவு உணவுக்கான மெனுவை கேட்டு, செஞ்சுக் கொடுக்கிறது. இப்போதைக்கு இதில் முழுமையா கவனம் செலுத்தறேன். வருங்காலத்தில், அசிஸ்டென்ட் இயக்குநராகவும் விருப்பம் இருக்கு. தொடர்ந்து நிறைய சீரியலில் நடிச்சாச்சு. இயக்குநர் துறை எப்படி இருக்குன்னு பார்க்கணும்; அதையும் கத்துக்கணும்னு விரும்புறேன். என் விருப்பத்துக்கு என் கணவரும், என் குடும்பமும் முழு ஒத்துழைப்பு கொடுக்குறாங்க. அதுனால தான் சுதந்திரமா என் விருப்பத்தை என்னால நிறைவேற்ற முடிகிறது என்கிறார்.