பிக் பாஸ் 2-வில் கூப்பிட்டால் போவேன்..! விஜய்க்கு வில்லனாக நடிக்கணும்..! நடிகர் விருப்பம்

0
851
Actor amit bhargav
- Advertisement -

`பாகுபலி’ அளவுக்குப் பிரமாண்டமா மகாபாரதத்தைப் படமா எடுத்தா, அதுல கிருஷ்ணன் கேரக்டர்ல நடிக்கணும்னு ஆசை” என்று கூறும் அமித் பார்கவ் தற்போது, `நெஞ்சம் மறப்பதில்லை’ சீரியலில் நடித்து வருகிறார். சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை இரண்டிலும் தன்னுடைய கவனத்தைச் செலுத்தி வருகிறார். இவர் ஏற்கெனவே, `என்னமோ ஏதோ’, `என்னை அறிந்தால்’, `மிருதன்’ ஆகிய படங்களில் நடித்துள்ளார். தற்போது, `கர்ஜனை’ உள்ளிட்ட சில படங்களில் கமிட் ஆகியிருக்கிறார். அவரிடம் பேசினேன்.

amit

கல்யாணம் முதல் காதல் வரை’ இவ்வளவு பெரிய ஹிட் ஆகும்னு நினைச்சீங்களா?
“ `கல்யாணம் முதல் காதல் வரை’ சீரியலுக்கு முன்னாடி சில படங்கள், விளம்பரங்கள்ல நடிச்சிருக்கேன். எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமதான் இந்தக் கதையைக் கேட்டேன். இவ்வளவு பெரிய ஹிட்டானது ரொம்ப சந்தோஷமா இருக்கு. எந்த ஒரு விஷயத்தையும் நான் ரீச் இருக்காதுனு நினைச்சு உதாசீனப்படுத்தமாட்டேன். அதுக்குக் கிடைச்ச பரிசு இதுனு நினைக்கிறேன்!”

- Advertisement -

`பிக் பாஸ் 2′ நிகழ்ச்சியில உங்களைப் போட்டியாளரா கூப்பிட்டா, போவீங்களா?

“கண்டிப்பா போவேன். முதல் பகுதியிலேயே கூப்பிட்டாங்க. நான்தான் வேண்டாம்னு சொல்லிட்டேன். அப்புறம் ஒரு பார்வையாளரா நிகழ்ச்சியைப் பார்க்கும்போது, நல்ல எக்ஸ்பெரிமென்ட்டா இருந்துச்சு. என்னை நானே டெஸ்ட் பண்ணிக்கிறது எனக்கு ரொம்பப் பிடிக்கும். `பிக் பாஸ்’ வீட்ல எல்லோரையும் ஹேண்டில் பண்றது ரொம்ப சுவாரஸ்யமான விஷயம்.

அந்த வீட்ல நாம ஒரு விஷயம் நல்லதுனு நினைச்சுப் பண்ணுவோம், அது நமக்கே கெடுதலா அமைந்திடும். அதனால, `பிக் பாஸ்’ மூலமா நமக்கு ரீச் கிடைக்கும்ங்கிறதைத் தாண்டி, நம்மை நாமே டெஸ்ட் பண்ணிக்கிற நிகழ்ச்சியா இருக்கும்.”

amit bhargav

சினிமாவுல என்னென்ன பண்ணனும்னு ஆசை?

“சின்ன வயசுல ஒரு வருடம் வயலின் கிளாஸ் போனேன். என் குடும்பத்துல எல்லாரும் பாடுவாங்க. அதனால பாட்டு பாடுற ஆர்வம் எனக்கும் இருக்கு. அதனால, வாய்ப்பு கிடைச்சா, பாடணும்னு ஆசை. இதுவரை விஜய் சாரை பார்க்கிற பாக்கியம் கிடைச்சதில்லை. அவருடைய மிகப்பெரிய ரசிகன் நான். அவர் தேர்ந்தெடுக்கிற கதைகள் பிரமாதமா இருக்கும்.

actor amith nisha

அவர் படத்துல வில்லன் ரோல் பண்ணணும்ங்கிற கனவு இருக்கு. தவிர, எல்லாப் படங்களிலும் ஹீரோவைவிட வில்லனைத்தான் நான் ரசிச்சுப் பார்ப்பேன். வெப் சீரீஸ் ஒன்றுக்கு கதை ரெடி பண்ணிக்கிட்டு இருக்கேன். மனைவியைத் துன்புறுத்துற நெகட்டிவ் கேரக்டர்ல நடிக்கப்போறேன்”

Advertisement