ஐஸ்வர்யாவை விவகாரத்து பண்ண மாட்டேன்- தனுஷின் திடீர் மனம் மாற்றம்- பின்னணி என்ன?

0
1104
dhanush
- Advertisement -

ஐஸ்வர்யாவை விவாகரத்து பண்ண மாட்டேன் என்று தனுஷின் திடீர் மாற்றம் குறித்து தற்போது சோசியல் மீடியாவில் பரவலாக பேசப்பட்டு வருகிறது. கடந்த சில வாரங்களாகவே ஒட்டுமொத்த தமிழகம் முழுவதும் தனுஷ்- ஐஸ்வர்யா விவாகரத்து குறித்து தான் பேசிக் கொண்டிருக்கின்றது. சோசியல் மீடியாவை ஓபன் பண்ணினாலே போதும் தனுஷ் – ஐஸ்வர்யா விவாகரத்து பற்றிய கருத்துக்களும், வீடியோக்களும் தான் உலா வந்து கொண்டிருக்கின்றது. அதே போல் கடந்த ஆண்டு முழுவதும் சோசியல் மீடியாவில் நடிகை சமந்தா- நாக சைதன்யா விவகாரத்து பற்றிய பேச்சு தான் அதிகம் இருந்தது. இந்த சர்ச்சை முடிவதற்குள் நடிகர் தனுஷ்- ஐஸ்வர்யா விவாகரத்து ரசிகர்கள் மத்தியில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

-விளம்பரம்-

தமிழ் சினிமாவில் உள்ள முன்னணி நடிகர்களில் ஒருவராக நடிகர் தனுஷ் திகழ்ந்து வருகிறார். தனுஷ் அவர்கள் நடிகராக மட்டுமில்லாமல் திரைப்பட தயாரிப்பாளர், பின்னணிப் பாடகர், திரைப்பட பாடலாசிரியர், திரைக்கதையாசிரியர், திரைப்பட இயக்குனர் என பல துறைகளில் சாதித்து வருகிறார். அதோடு இவர் கோலிவுட்,டோலிவுட்,பாலிவுட்,ஹாலிவூட் என அணைத்து மொழிகளிலும் கால் தடம் பதித்து வருகிறார். இதனிடையே தனுஷ் அவர்கள் 2004 ஆம் ஆண்டு சூப்பர் ஸ்டார் ரஜினியின் முத்த மகளான ஐஸ்வர்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

- Advertisement -

தனுஷ் – ஐஸ்வர்யா விவாகரத்து:

இவர்களுக்கு யாத்ரா , லிங்கா என்று இரண்டு மகன்கள் உள்ளார்கள். இப்படி ஒரு நிலையில் தாங்கள் பிரிவதாக தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இருவரும் தங்கள் சமூக வலைதளபக்கத்தில் அறிவித்து இருப்பது ரசிகர்களுக்கு மட்டும் இல்லாமல் பிரபலங்களுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. தங்களின் 18 ஆண்டுகள் குடும்ப வாழ்க்கையில் இருந்து இருவரும் பிரிவதாக பரஸ்பரமாக முடிவு செய்துள்ளோம் என்று கூறி இருந்தார்கள்.

தனுஷ் – ஐஸ்வர்யா விவாகரத்து வதந்திகள்:

இவர்களின் இந்த முடிவை தொடர்ந்து ரசிகர்கள், பிரபலங்கள் என பலரும் பல விதமான கருத்துக்களை போட்டு வருகின்றனர். அதோடு இவர்களுடைய விவாகரத்து குறித்து பலரும் கண்ணு, மூக்கு, காது வைத்து பல விதமாக கதைகளை அவிழ்த்து விட்டும் வருகின்றனர். தனுஷ்- ஐஸ்வர்யா இருவருக்கும் நடுவில் என்ன நடந்தது? என்று தெரியாமல் பலரும் பல விதமாக வதந்திகளை பரப்பி வருகிறார்கள். மேலும், பிரிய போகிறோம் என்று அறிவித்த பிறகு இருவரும் தங்களின் கேரியரில் அதிக கவனம் செலுத்தி வருகிறார்.

-விளம்பரம்-

தனுஷ் மனம் மாறிய தகவல்:

அதுமட்டும் இல்லாமல் சமீபத்தில் ஐஸ்வர்யா கொரோனா தொற்று ஏற்பட்டு பாதிக்கப்பட்டு இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி தனுஷ் – ஐஸ்வர்யா விவாகரத்து அறிவித்ததில் இருந்து குடும்பத்தினர், நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள், ரசிகர்கள், தெரிந்தவர்கள், தெரியாதவர்கள் என பலரும் அவர்களை சேர்த்து வைக்க பல முயற்சி செய்து வருகின்றனர். இந்த நிலையில் ஐஸ்வர்யாவை விவாகரத்துச் செய்வதில் தனுஷ் மனம் மாறி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. ஐஸ்வர்யாவை தனுஷ் பிரிந்தாலும் முறையாக அவரை விவாகரத்து செய்யும் எண்ணம் இல்லை என்று தனுஷ் கூறியதாகச் சொல்லப்படுகிறது.

தனுஷின் விவாகரத்து முடிவு:

அதோடு தற்போது வரை விவாகரத்து வேண்டாம் என்கிற முடிவில் தான் தனுஷ் இருக்கிறார். மேலும், தங்களின் குழந்தைகளுக்காக இருவரும் சேர்ந்து வாழவேண்டும் என்றும் குடும்பத்தினர், நெருங்கிய நண்பர்களும் ஐஸ்வர்யா- தனுஷ் இருவருக்கும் அட்வைஸ் செய்து வருகின்றனர். இதனால் இவர்கள் இருவரும் மீண்டும் சேருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவர்கள் இருவரும் சேர்ந்தால் நன்றாக இருக்கும் என்று ரசிகர்கள் கேட்டு வருகின்றனர்.

Advertisement