‘இனி அப்படி சொன்னா செருப்ப கழட்டி அடிப்பேன்’ – சிறுபான்மையினர் குறித்த கேள்விக்கு சீமான் ஆவேசம்.

0
1190
- Advertisement -

தீரன் சின்ன மலையின் 218ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி அவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பிறகு பத்திரிக்கையாளர் சந்திப்பில் சிறுபான்மையினர் கூறித்த கேள்விக்கு ஆக்ரோஷமாக பதிலளித்தார். சீமானின் விடியோக்கள் பொறுத்த வரைக்கும் அது மக்களிடம் பெரிய வரவேற்ப்பை பெரும் இருப்பினும் அவரின் சில கருத்துகள் சில நேரத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நாம் தமிழர் கட்சி தற்போது தமிழகத்தில் வளர்ந்து கொண்டு இருக்கும் கட்சியாக இருக்கிறது.

-விளம்பரம்-

ஆனால் தற்போது சீமான் பேசிய பேச்சுக்களானது அக்கட்சியின் தொண்டர்களிடம் இடமே அதிருப்தியை ஏற்படுத்தியது.   -விளம்பரம்- சீமான் கூறியது: மணிப்பூரில் நடைபெற்ற சம்பவங்களை கண்டித்து திருவள்ளுவர் கோட்டத்தில் ஜூலை 30 அன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய சீமான் கிறிஸ்துவ மற்றும் இஸ்லாமிய மக்களை பற்றி அவதுறாக பேசிய பேச்சுக்கள் தான் தற்போது இணையத்தில் தீயாய் பரவி வருகிறது. சீமான் கூறிய கருத்துக்கு பல்வேறு தரப்பிரனரும் பல கண்டனகளை தெரிவித்து வருகின்றனர்.

- Advertisement -

நாம் தான் இஸ்லாமியர்களையும் கிறித்துவர்களையும் தேவனின் குழந்தைகள் என்று நினைத்து கொண்டு இருக்கிறோம் ஆனால் அவர்கள் சாத்தனின் குழந்தைகளாக மாறி பல வருடங்கள் ஆகிறது என்றும் அவர் கூறினார். மேலும் கூறிய அவர் “இந்த நாட்டில் அனைத்து அநிதிக்கும் அக்கிரமத்திற்கும் பெரிய பொறுப்பு கிறித்துவர்கள் மற்றும் இஸ்லாமியர்கள் தான்” எனவும் அவர் கூறினார். மேலும் கூறிய “தொடர்ச்சியாக 18% விழுக்காடு ஓட்டு வைத்திருக்கும் பல ஆண்டுகளாக திமுக மற்றும் காங்கிரஸ் கட்சிக்கு ஒட்டு போட்டு நாட்டை தெருவில் விட்டது இவர்கள் தான்.

நாட்டில் லஞ்சம் மற்றும் ஊழலுக்கு காரணமே இவர்கள் தான் இவர்களிடம் போய் என்ன பாவத்தை ஒப்புக்கொள்வது இவர்கள்தான் பாவத்தையே செய்கிறார்கள்?”. என்றும் அவர் கூறியிருந்தார். இது கூறித்து கேள்வி எழுப்பிய பத்திரிக்கையாளர்களிடம் ஆக்ரோஷமாக பதிலளித்தார்.

-விளம்பரம்-

சீமானின் பதில்:

செய்தியாளர்கள் சிறுபான்மையினர் பற்றிய கேள்விக்கு “யார் சிறுபான்மையினர்? இங்குள்ள கிறித்துவர்கள் மற்றும் முஸ்லீம்கள் தமிழர்கள் என்றும் வந்தவன் போனான் எல்லாம் அவர்களை சிறுபான்மை சொன்னால் என்று சொன்னால் செருப்பால் அடிப்பேன் என்றும் பதிரிக்கையளர்களிடம் ஆவேசமாக பேசினார்”. மேலும் பேசிய அவர் மதம் என்பது மாறக்கூடிய ஒன்று என்றும் யாரு வேண்டுமானாலும் மதம் மாறிக்கொள்ளலாம் ஆனால் மொழியும் இனமும் மாற்றி கொள்ள முடியாது என்றும் அவர் கூறினார். மொழியின் இனமும் வைத்து தான் மனித அடையாளத்தை கணக்கிட படுகிறது என்றும் அவர் கூறினார் அது தற்போது இணையத்தில் பரவி வருகிறது.  

      

Advertisement