மன்னிப்பெல்லாம் கேக்க முடியாது. ஆதாரத்துடன் கெத்து காட்டும் ரஜினி. வைரலாகும் வீடியோ.

0
4891
rajini
- Advertisement -

சமீபத்தில் துக்ளக் பத்திரிகையின் ஆண்டு விழாவில் பெரியார் குறித்து ரஜினி பேசிய கருத்து திராவிட கட்சிகள் மத்தியிலும் பெரியார் ஆதரவாளர்கள் மத்தியிலும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் என்ற அந்தஸ்துடன் பல ஆண்டுகளாக உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக திகழ்ந்து வரும் ரஜினிகாந்த் அரசியலில் முழுமையாக ஈடுபட போவதாக பல ஆண்டுகளாக கூறி வருகிறார். ரஜினி அரசியலுக்கு இன்னும் முழுமையாக வராத போதிலும் அடிக்கடி ரஜினி பேசும் கருத்துக்கள் அரசியல் வட்டாரத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது.

-விளம்பரம்-

கடந்த செவ்வாய்க்கிழமை அன்று சென்னையில் நடைபெற்ற துக்ளக் இதழின் 50ஆவது ஆண்டு விழாவில் கலந்து கொண்டு பேசிய ரஜினி, 1971ஆம் ஆண்டு சேலத்தில் பெரியார் அவர்கள் ராமரையும் சீதாவின் உருவத்தை உடை இல்லாமல் செருப்பு மாலை போட்டு ஊர்வலமாக கொண்டு சென்றார்கள். அதை யாரும் செய்தித்தாளில் வெளியிடவில்லை. ஆனால், சோவின் துக்ளக் பத்திரிக்கை மட்டும் அட்டைப்படத்தில் போட்டு கடுமையாக விமர்சித்திருந்தார். இதனால் அப்போதைய திமுக அரசுக்கு பெரிய கெட்ட பெயர் வந்தது இதனால் பத்திரிக்கை பிரதிகளை கைப்பற்றினார்கள். ஆனால், அந்த இதழை மீண்டும் அச்சடித்து வெளியிட்டார் என்று கூறி இருந்தார் ரஜினி.

இதையும் பாருங்க : பெற்றோர் எதிர்ப்பை மீறி காதல் திருமணம் செய்த மனோரமா . ஆனால், அவரோ இரண்டாம் திருமணம் செய்து கொண்டார்.

- Advertisement -

பெரியார் குறித்து ரஜினி பேசிய இந்த கருதினால் பல்வேறு பெரியார் ஆதரவாளர்களும் திராவிட கட்சியினரும் ரஜினியை கடுமையாக விமர்சித்து வருகிறார்கள். மேலும் நடிகர் ரஜினி ஆதாரமில்லாத தகவல்களை கூறுவதாகவும் ரஜினி கூறிய கருத்து பெரியாரை அவமதிப்பதாகும் இருப்பதாக பல்வேறு தரப்பிலிருந்தும் எதிர்ப்பு தெரிவித்து ரஜினி மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் கூறி வருகிறார்கள். இந்த நிலையில் இன்று (ஜனவரி 1 )தனது இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்த ரஜினிகாந்த் பேசுகையில், 1971 ஆம் ஆண்டு பெரியார் சம்பந்தப்பட்ட ஒரு விஷயத்தை, இல்லாத ஒன்றை நான் பேசிவிட்டதாக ஒரு சர்ச்சை கிளப்பப்படுகிறது.

ரஜினி - பெரியார் விவகாரம்: “அவர் ஏன் துக்ளக்கையே ஆதாரமா காட்டல..?”- எழும் புதிய சர்ச்சை!!

-விளம்பரம்-

நான் அப்படி எதுவும் பேசவில்லை. இதோ என் கையில் ‘அவுட்லுக்’ பத்திரிகையை வைத்துள்ளேன். நான் பேசியதற்குச் சான்றாக இந்த பத்திரிகையிலேயே தகவல்கள் உள்ளன. எனவே, பெரியார் குறித்து பேசியதற்கு என்னால் மன்னிப்பு கேட்க முடியாது என்று திட்ட வட்டமாக தெரிவித்துள்ளார். ரஜினியின் இந்த பேட்டி சமூக வலைதளத்தில் வைரலாக பரவ தற்போது ரஜினி மற்றும் பெரியார் தரப்பினருக்கு இடையேயான கருத்து மோதல் மேலும் அதிகரித்துள்ளது.

Advertisement