அபிநந்தன் சென்னையை சேர்ந்தவர் அல்ல.! அவரின் பூர்விகம் தெரியுமா.!

0
1902
Abinanthan
- Advertisement -

பாகிஸ்தான் எல்லையில் நுழைந்த இந்தியாவின் போர் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதாகவும், பிடிபட்ட 2 விமானிகளில் ஒருவர் காயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் தெரிவித்திருந்த நிலையில் அபிநந்தன் என்ற இந்திய வீரர் பாகிஸ்தான் சிறைபிடித்து வைத்துள்ளது.

-விளம்பரம்-

இதையொட்டி பாகிஸ்தான் ராணுவ செய்தித்தொடர்பாளர் ஆசிப் கபூர் டுவிட்டரில் ஒரு பதிவு வெளியிட்டார். அதில் அவர், “ இந்திய போர் விமானங்களில் ஒன்று சுட்டு வீழ்த்தப்பட்டபோது அது ஆசாத் காஷ்மீரில் (பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர்) விழுந்தது. மற்றொன்று காஷ்மீரில் விழுந்தது. ஒரு இந்திய விமானி கைது செய்யப்பட்டுள்ளார்” என கூறி உள்ளார்.

- Advertisement -

பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகளின் விசாரணையின் போது, தான் வந்த விமானத்தின் பெயரையும், எதற்காக வந்தேன் என்பதையும் தெரிவிக்க முடியாது என , இந்திய விமானப்படை வீரர் அபிநந்தன் கூறியுள்ளார். அவரது தைரியத்தை பார்த்த பாகிஸ்தான் வீரர்கள் வியந்தனர்.

அபி நந்தன் சென்னையைச் சேர்ந்தவர் என்பதும், தெரிய வந்தது. இதையடுத்து சென்னை தாம்பரம் பகுதியில் உள்ள அவரது வீட்டில் பெற்றோர் மற்றும் உறவினர்கள் சோகத்துடன் அமர்ந்துள்ளனர். தங்கள் மகனை எப்படியாவத மீட்டுத் தர வேண்டும் என இந்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

-விளம்பரம்-

ஆனால் , உண்மையில் அவர் சென்னையை சேர்த்தவர் அல்ல திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்தவர். அபிநந்தனின் தந்தை சிம்மக்குட்டி வர்த்தமானும் ராணுவத்தில் உயர் அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவரது பெற்றோர் சென்னை தாம்பரத்தை அடுத்த மாடம்பாக்கத்தில் வசித்து வருகின்றனர். அபிநந்தன் மனைவி, குழந்தையுடன் டெல்லி யில் வசித்து வருகிறார். மேலும், அவரது சகோதரி காஷ்மீரில் வசித்து வருகின்றனர்.  

Advertisement