ரூபாய் நோட்டுகளை கொண்டு ஐஸ் கிரீம் சாப்பிடும் பிரியங்கா. சர்ச்சையை ஏற்படுத்திய புகைப்படம்.

0
27718
- Advertisement -

பிரபல இந்தி நடிகையான பிரியங்கா சோப்ரா சமீப காலமாக பெரும் சர்ச்சையில் சிக்கி வருகிறார். பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா பல ஆண்டுகளாக ஹிந்தி சினிமாவில் முடி சூடா ராணியாக இருந்து வருகிறார். மிஸ் இந்தியா ஆகியன இவர் பல ஆண்டுகளாக திரையில் கலக்கி வந்தார். மேலும் இந்திய சினிமாவை தாண்டி ஹாலிவுட் வரை சென்று தனது திறமையை நிரூபித்து காட்டியவர்.

-விளம்பரம்-

இந்தி சினிமாவில் சிறிது வாய்ப்புகள் குறையவே சில வருடங்களாக ஹோலிவுட்டில் செட்டில் ஆகிவிட்டார். மாடல் அழகியாக இருந்து பின்னர் இந்தி சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக விளங்கி வருகிறார் நடிகை பிரியங்கா சோப்ரா. விஜயுடன் ‘தமிழன்’ படத்தில் நடித்த இவர் தன்னை விட வயதில் குறைவான நபரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்கு பின்னர் தனது கணவருடன் வெளிநாட்டிலேயே செட்டில் ஆகிவிட்டார். இருப்பினும் சமூக வலைதளத்தில் அவ்வப்போது புகைப்பங்களை பதிவிட்டு வருகிறார்.

இதையும் பாருங்க : நீச்சல் குளமே சூடாகும் வகையில் போட்டோஷூட் நடத்திய அனுபமா. வீடியோ இதோ.

- Advertisement -

சமீபத்தில் ஐஸ்கிரீமின் புகைப்படத்தை பிரியங்கா சோப்ரா இன்ஸ்டாகிராமில் வெளியிட்டிருந்தார். அதில் ஐஸ்கிரீமை சுற்றி 500 ரூபாய் நோட்டுகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தன. இதனைப் பார்த்த நெட்டிசன்கள் இந்தியாவில் பொருளாதாரம் கடுமையாக உள்ள நிலையில் இப்படி ஒரு புகைப்படத்தை பதிவிட்டிருப்பது உங்களது பண திமிரை காண்பிக்கிறது என்று கூறி வருகின்றனர். மேலும், இந்திய ரூபாயில் காந்தியின் புகைப்படம் இருப்பதை கூட அறியாமல் இப்படி கேவலபடுத்துகிறீர்கள் என்றும் கொதித்துள்ளனர்.

பிரியங்கா சோப்ரா

பிரியங்கா சோப்ரா இது போன்ற சர்ச்சையில் சிக்குவது புதிதல்ல. புதுடெல்லியில் கடந்த மூன்று ஆண்டுகளை விடவும் அதிகமாக காற்று மாசு ஏற்பட்டுள்ளது. இதனால் மக்கள் பெரும் அவதிக்கு ஆளாகியுள்ளனர். டெல்லியில் அதிகரித்திருக்கும் காற்று மாசு குறித்து கடந்த சில நாட்களுக்கு முன் நடிகை பிரியங்கா சோப்ரா முகமூடியுடன் செல்பி ஒன்றை பகிர்ந்து, ’காற்று மாசால் படப்பிடிப்பு நடத்துவது கடினமாக உள்ளது. இதுபோன்ற நிலைமையில் இங்கு எப்படி வாழ்வது என்று நினைத்து கூட பார்க்கமுடியவில்லை என்று பதிவிட்டிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

-விளம்பரம்-
Advertisement