இன்னமும் எனக்கு விஜய் ‘அங்கிள்’ தான் – அட விஜய் கையில் இருக்கும் நடிகை கொடுத்த பேட்டிய பாருங்க. இவங்க தானா அது.

0
3874
hema
- Advertisement -

பல ஆண்டு காலமாக தமிழ் சினிமா உலகில் முடிசூடா மன்னனாக பட்டையை கிளப்பிக் கொண்டிருப்பவர் தளபதி விஜய். தளபதி விஜய்க்கு தமிழகம் மட்டுமில்லாமல் உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளார்கள். இவருடைய படம் திரையரங்குகளில் வரப்போகிறது என்று சொன்னாலே போதும் ரசிகர்களின் கூட்டம் அலைமோதும். கடந்த ஆண்டு இவர் நடிப்பில் வெளிவந்த பிகில் படம் உலக அளவில் வசூல் சாதனை செய்தது.

-விளம்பரம்-

இந்நிலையில் தளபதி விஜய்யின் புகைப்படம் ஒன்று தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அந்த புகைப்படத்தில் தளபதி விஜயின் கையில் ஒரு குழந்தை உள்ளது. அந்த குழந்தை தற்போது நடிகை ஆவர். அந்த நடிகை யார் தெரியுமா? அவர் வேற யாரும் இல்லைங்க சீரியல் நடிகை ஹிமா பிந்து.கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் கடந்த சில மாதங்களுக்கு முன் வெளிவந்த தொடர் தான் இதயத்தை திருடாதே.

- Advertisement -

இந்த தொடரில் புதுமுக நடிகையாக சஹானா என்ற கதாபாத்திரத்தில் நடிப்பவர் தான் ஹிமா பிந்து. இப்படி ஒரு நிலையில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற நடிகை ஹீமா பிந்து, விஜய் குறித்து பேசியுள்ளார். அதில் ‘சின்ன வயதில் நான் விஜய்யை அங்கிள் என்று தான் கூப்பிட்டேன். அதனால் எனக்கும் இப்பவும் அவர் அங்கிள் தான். என்று கூறியுள்ளார் ஹீமா பிந்து.

மேலும், விஜய் சேதுபதி குறித்து பேசுகையில், அவர் மிகவும் ஸ்வீட். அவரு அப்படியே கண்ணாலே அட்ராக்ட் பனிடுவாரு. அவர் கண்ணை பார்த்தாலே மயங்கிடுவாங்க யாரா இருந்தாலும். அந்த புகைப்படம் எடுக்கும் போது கூட சைட் அடிச்சிட்டே தான் இருந்தேன். பின்னர் அவரா வந்து என்கிட்டே வந்து கைய பிடித்து போட்டோ எடுத்துக்கொண்டு அப்படியே என்னை வெளியில் கூட்டிக்கொண்டு போய் விட்டார் என்று கூறியுள்ளார் ஹீமா.

-விளம்பரம்-
Advertisement