நயனுக்கு கோபம் வந்தால் இதை தான் செய்வார் – டிடி சொன்ன சீக்ரெட். வைரலாகும் வீடியோ.

0
1064
nayan
- Advertisement -

அன்றும் இன்றும் என்றும் ரசிகர்களின் பேவரைட் தொகுப்பாளினியாக திகழ்ந்து வருகிறார் டிடி என்கிற திவ்யதர்ஷினி. அந்த அளவிற்கு தன்னுடைய பேச்சு திறனாலும் சுட்டிதனத்தாலும் அனைவரையும் கட்டி இழுத்து உள்ளார். இவர் அண்ணா ஆதர்ஷ் கல்லூரியில் இளங்கலை, முதுகலைப் படிப்பை படித்து முடித்து உள்ளார். டிடி தன்னுடைய ஐந்தாம் வகுப்பு படிக்கும் போதே டிவி நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராக சின்னத்திரைக்கு அறிமுகமானவர். நடிகை டிடி அவர்கள் வெள்ளித்திரை, சின்னத்திரை என எல்லாத் துறைகளிலும் ஒரு கலக்கு கலக்குகிறார்.

-விளம்பரம்-

திவ்யதர்ஷினி அவர்கள் தமிழ் திரைப் படங்களில் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்து உள்ளார். இவர் விஜய் தொலைக்காட்சியில் காபி வித் டிடி என்ற நிகழ்ச்சி மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தார்.இதனை தொடர்ந்து இவர் பல நிகழ்ச்சிகளை தொகுப்பாளராக தொகுத்து வழங்கி உள்ளார். இவர் 20 ஆண்டுகளுக்கு மேலாக தொகுப்பாளினியாக பணியாற்றி வருகிறார்.

- Advertisement -

டிடி சிறந்த தொகுப்பாளினியாக பல முறை பல்வேறு விருதுகள் கிடைத்திருக்கிறது. சமீபத்தில் கூட இவருக்கு “டார்லிங் ஆப் தி டெலிவிஷன்” அவார்ட்கூட வாங்கி இருந்தார். சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் டிடி சமீபத்தில் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்திருந்தார். அப்போது நயன் மற்றும் திரிஷா குறித்தும் பேசியுள்ளார்.

ரசிகர் ஒருவர் நயன்தாரா குறித்து சொல்லுங்கள் என்று கேட்டதற்கு ‘அவங்க கிட்ட எனக்கு ரொம்ப புடிச்சது, அவங்களுக்கு கோபம் வந்த உடனே போன் பண்ணி என்ன பிரச்சனை, இதெல்லாம் எனக்கு பிடிக்கல என்பதை சொல்லிடுவார். மனசுல எதையும் வச்சிக்கமாட்டார்’ என்று கூறியுள்ளார். அதே போல திரிஷா குறித்து பேசுகையில், அவங்க எதைப்பத்தியும் கவலபட மாட்டாங்க, அவங்க ரூல்ஸ், அவங்க லைப்னு போய்ட்டே இருப்பாங்க என்று கூறியுள்ளார்.

-விளம்பரம்-
Advertisement