பிக்பாஸ் வீட்டின் பல பிரச்னைகளுக்கு சினேகன்தான் காரணம்- புலம்பும் ஜூலி!

0
2106
Julie - Snehan
- Advertisement -

பிக் பாஸ்’ வீட்டிலிருக்கும்போதே ஜூலி சமூக வலைதளங்களில் கடுமையான விமர்சனத்துக்கு ஆளானார். வீட்டிலிருந்து அவரை வெளியேற்றியபிறகும்கூட அவரை விமர்சனங்களும் ஓவியா ஆர்மியும் துரத்தின. இந்த நிலையில் அவரைச் சந்தித்துப் பேசினோம். “’பிக் பாஸ்ல எனக்கு நடந்தது மிகக் கொடுமை. அதைவிட மக்கள் கஷ்டப்படுத்துறது கொடுமையிலும் கொடுமை’ என்றபடி பேச ஆரம்பிக்கிறார் ஜூலி.

-விளம்பரம்-

Julieஆரவ்கிட்ட உங்க காதலை வெளிப்படுத்துனீங்களே… என்ன ஆச்சு

- Advertisement -

ஆரவ்வோட கண்கள் என் அப்பா கண்கள் மாதிரியே இருக்கும்னு சொன்னேன். நான் சொன்ன விதம் வேணும்னா தவறா தெரிஞ்சுருக்கலாம். ஆனால் நான் வேறு எந்தக் கண்ணோட்டத்துலயும் சொல்லலை.

உங்க அடுத்து கட்ட திட்டம் என்ன?

-விளம்பரம்-

இந்த நேரத்துல எனக்குக் கிடைத்த புகழை சரியா பயன்படுத்திக்கணும்னு நினைக்கிறேன். இப்போ பயந்து போய் ஆள் அடையாளமே தெரியாம இருந்துட்டா என்னைக் கோழைனு நெனச்சுருவாங்க. ஆங்கரிங், சினிமா, விளம்பரங்களுக்கான வாய்ப்புகள் நிறைய வந்துக்கிட்டு இருக்கு. கண்டிப்பா மீடியாவுக்கு வருவேன். ஆனா அது எப்போன்னுதான் தெரியலை.

Julie

ஆரவ் பிக்பாஸ் டைட்டில் வின் பண்ணினது உங்களுக்கு மகிழ்ச்சியா?

கணேஷ் ஜெயிச்சிருந்த நல்லா இருந்துருக்கும். அவர் எலிமினேட் ஆனதும், ‘சினேகனா, ஆரவ்வானு போட்டி மாறுச்சு. சினேகனுக்கு ஆரவ் எவ்வளவோ மேல். சினேகன் நல்லா கேம் விளையாடினார். ஆனால் பிக்பாஸ் வீட்டில் இருந்த பல பிரச்னைகளுக்கு அவர்தான் காரணம். ஸோ, ஆரவ் வென்றதற்காக நான் சந்தோஷப்படுறேன். ஆனால் யார் என்ன தவறா சொன்னாலும் அப்பவும் இப்பவும் சினேகன் என் அண்ணன்.

Advertisement