ஐஃபா விருதுகள் 2024 : அசால்ட்டா 6 விருதுகளை அள்ளி குவித்த பொன்னியின் செல்வன் படம், எந்தெந்த கேட்டகிரி தெரியுமா?

0
359
- Advertisement -

ஐஃபா விருது விழாவில் ‘பொன்னியின் செல்வன்’ படம் பல பிரிவுகளில் விருதுகளை அள்ளி குவித்திருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. ஐக்கிய அரபு எமிரேட்ஸில் ஐஃபா விருது வழங்கும் விழா வருடம் வருடம் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் 2024 ஆம் ஆண்டுக்கான ஐபா விருது அபுதாபியில் உள்ள யாஸ்தீவில் நடைபெற்று இருந்தது. இந்த விழாவில் பல மொழிகளை சேர்ந்த பிரபலங்கள் கலந்து கொண்டிருந்தார்கள்.

-விளம்பரம்-

இந்த விழாவில் இந்திய திரை உலகை சேர்ந்த சியான் விக்ரம், கீர்த்தி சுரேஷ், சமந்தா, ஐஸ்வர்யா ராய், மணிரத்தினம், ஏ.ஆர். ரகுமான், சிரஞ்சீவி, பாலகிருஷ்ணன், நானி, ஷாருக்கான், ஷாஹித் கபூர், ஷபானா ஆஸ்மி உட்பட பலர் கலந்து கொண்டிருந்தார்கள். இந்த விழாவில் தமிழ் திரைப்படங்களுக்கு வழங்கப்பட விருதுகள் பட்டியல் இதோ,

- Advertisement -

சிறந்த படம்:

கடந்த ஆண்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் வெளியாகி இருந்த ஜெயிலர் படத்திற்கு சிறந்த படம் விருது வழங்கப்பட்டிருக்கிறது. இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது.

சிறந்த நடிகர்:

மணிரத்தினம் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியாகியிருந்த பொன்னியின் செல்வன் படத்தில் ஆதித்ய கரிகாலனாக நடித்த சியான் விக்ரமுக்கு சிறந்த நடிகருக்கான விருது கிடைத்து இருக்கிறது. சமீபத்தில் தான் இவருக்கு சைமா விருது நிகழ்ச்சியிலும் சிறந்த நடிகருக்கான விருது கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

-விளம்பரம்-

சிறந்த வில்லன்:

எஸ் ஜே சூர்யாவிற்கு இந்த விருது வழங்கப்பட்டது. கடந்த ஆண்டு ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால் நடிப்பில் வெளியாகி இருந்த மார்க் ஆண்டனி படத்திற்காக தான் இந்த விருது வழங்கப்பட்டது.

சிறந்த நடிகை:

மணிரத்தினம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் படத்தில் நந்தினி, ஊமை ராணி ஆகிய இரட்டை வேடத்தில் மிரட்டி இருந்த ஐஸ்வர்யாவுக்கு சிறந்த நடிகைக்கான விருது வழங்கப்பட்டது.

சிறந்த இயக்குனர்:

பொன்னியின் செல்வன் படத்திற்காக மணிரத்தினத்திற்கு சிறந்த இயக்குனர் என்ற விருது கிடைத்திருக்கிறது.

சிறந்த துணை நடிகர்:

பொன்னியின் செல்வன் படத்தில் ஆழ்வார்கடியான் நம்பி என்ற கதாபாத்திரத்தில் நடித்ததற்காக ஜெயராமுக்கு இந்த விருது வழங்கப்பட்டிருக்கிறது.

சிறந்த துணை நடிகை:

கடந்த ஆண்டு அருண்குமார் இயக்கத்தில் சித்தார்த் நடிப்பில் வெளியாகியிருந்த சித்தா படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்த சாஹஸ்ரா ஸ்ரீக்கு இந்த விருது கிடைத்திருக்கிறது.

சிறந்த பெண்மணி:

இந்தியாவில் சிறந்த பெண்மணி என்ற சிறப்பு விருதை நடிகை சமந்தாவுக்கு வழங்கப்பட்டிருக்கிறது.

சிறந்த இசையமைப்பாளர்:

பொன்னியின் செல்வன் படத்திற்கு சிறந்த இசை அமைத்ததற்காக இசையமைப்பாளர் மற்றும் பின்னணி இசை ஆகிய பிரிவுகளில் இசைப்புயல் ஏ ஆர் ரகுமானுக்கு இந்த விருது வழங்கப்பட்டிருக்கிறது. இப்படி இந்த விழாவில் ஆறு பிரிவுகளில் பொன்னியின் செல்வன் படம் விருதை அள்ளி குவித்து இருக்கிறது. இதற்கு ரசிகர்கள், பிரபலங்கள் என பலர் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

Advertisement