கட்சிக்கொடியை காட்டியதால் வந்த வினை, மாவீரன் வெளியீட்டுக்கு வந்த சிக்கல், நீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு.

0
1416
Maaveeran
- Advertisement -

மாவீரன் படத்தை தடை செய்ய தொடரப்பட்ட வழக்கிற்கு உயர்நீதிமன்றம் அளித்திருக்கும் உத்தரவு தற்போது சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது. தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக திகழ்ந்து கொண்டு இருப்பார் சிவகார்த்திகேயன். இவர் ஹீரோயிசத்திற்கு மட்டுமில்லை, அவரது நகைச்சுவை திறனுக்கும் என்று ஒரு தனி ரசிகர் பட்டாளம் இருக்கிறது. தற்போது தமிழ் சினிமா உலகில் கோடிக்கணக்கில் சம்பளம் வாங்கும் முன்னணி நடிகராக சிவகார்த்திகேயன் கலக்கிக் கொண்டிருக்கிறார்.

-விளம்பரம்-

மேலும், இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது.
இவர் நடிகராக மட்டுமில்லாமல் சிங்கர், மிமிக்ரி, பாடலாசிரியர், தொகுப்பாளர், தயாரிப்பாளர் என பன்முகம் கொண்டு திகழ்கிறார். கடந்த ஆண்டு சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்து இருந்த டாக்டர், டான் படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும், அதிக வசூலையும் பெற்றிருந்தது. இதை தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிப்பில் கடைசியாக பிரின்ஸ் படம் தான் வெளி வந்தது.

- Advertisement -

மாவீரன் படம்:

இந்த படத்தில் மரியா, பிரேம்ஜி உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். ஆனால், இந்த படம் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றி அடையவில்லை. இதனை அடுத்து தற்போது சிவகார்த்திகேயன் அவர்கள் மாவீரன் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் உருவாகி இருக்கிறது. இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக அதிதி சங்கர் நடித்து வருகிறார். இந்த படம் தமிழ், தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளில் வெளிவர இருக்கிறது.

படம் குறித்த தகவல்:

இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு வில்லனாக இயக்குனர் மிஷ்கின் நடிக்கிறார். சமீபத்தில் தான் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில், வரும் ஜூலை மாதம் 14ஆம் தேதி மாவீரன் படம் வெளியாகும் என்று அறிவிக்கபட்டிருந்தது. மேலும், சிவகார்த்திகேயன் பாடிய வண்ணாரப்பேட்டை பாடல் சோசியல் மீடியாவில் வெளியாகி பெரிய அளவில் ட்ரெண்ட் ஆகி இருக்கிறது. கடந்த வாரம் தான் இந்த படத்தின் ஆடியோ, மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்று இருக்கிறது.

-விளம்பரம்-

மாவீரன் படம் ரிலீஸ் குறித்த சர்ச்சை:

இந்த படத்தின் டிரைலர் ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த நிலையில், மாவீரன் படத்தை தடை செய்ய வேண்டும் என்று நீதிமன்றத்தில் தொடர்ந்து இருக்கும் வழக்கு குறித்த சர்ச்சை தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அதாவது, மாவீரன் படத்தில் ஐ. ஜே. கே கட்சியின் கொடி பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இந்த படத்தை தடை விதிக்க வேண்டும் என்று ஐ. ஜே. கே கட்சியின் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. மேலும், அதில் அவர்கள், எங்கள் கட்சியின் கொடியை மாவீரன் படத்தில் பயன்படுத்தி இருக்கிறார்கள்.

சென்னை உயர்நீதிமன்றம் அளித்த உத்தரவு:

அந்த காட்சியை நீக்க வேண்டும். இல்லை என்றால் படத்தை தடை செய்ய வேண்டும் என்று கூறியிருக்கிறார்கள். இந்நிலையில் இந்த வழக்கினை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் கூறியது, சிவகார்த்திகேயன் நடித்த மாவீரன் படத்தை வெளியிட தடை இல்லை. இந்த படத்தில் எந்த அரசியல் கட்சியையும் குறிப்பிடவில்லை. 40 வினாடிகள் பொறுப்புத் துறப்பு போட வேண்டும். ஐ. ஜே. கே கட்சியின் கொடியை குறித்த காட்சிகளை மாற்றிய பின்னர் தான் ஓடிடி மற்றும் சேட்டி லைட் சேனல்களில் வெளியிட வேண்டும் என்று உத்தரவு அளித்துள்ளது.

Advertisement