என்ன மாதிரி யாரும் அப்படி இசைமைத்தது இல்லை, என் கர்வத்தை நான் இறக்கி வைத்துவிட்டேன் – இளையராஜாவின் முன்னுக்கு பின்னான பேச்சு.

0
200
- Advertisement -

எனக்கு கர்வம் இல்லை என்று இளையராஜா அளித்து இருக்கும் பேட்டி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. 70களின் இறுதியில் தமிழ் சினிமாவில் நுழைந்து 20 வருடங்கள் தனது இசையால் திரையுலகையும், ரசிகர்களையும் கட்டி ஆண்டவர் இசைஞானி இளையராஜா. இவர்‘அன்னக்கிளி’ படத்திலேயே அற்புதமான பாடகர் என்று பெயர் எடுத்தவர். இளையராஜா பாடல் எல்லாம் பட்டிதொட்டியெங்கும் பிரபலம். 80களில் ராஜாவின் இசையை நம்பியே 90 சதவீத திரைப்படங்கள் உருவானது.

-விளம்பரம்-

ராஜா இசையமைக்க சம்மதித்துவிட்டால் அந்த படம் ஹிட் என்றே கணித்த காலம் அது. படத்தின் கதாநாயகன், கதாநாயகி யார் என முடிவாவதற்கு முன்பே தயாரிப்பாளர்கள் இளையராஜாவை ஒப்பந்தம் செய்துவிடுவார்கள்.அந்த அளவுக்கு ஒரு படத்தின் வெற்றிக்கு அவர் தேவைப்பட்டார். இளையராஜா ஏதோ வெற்றிக்கு நடத்தி வந்து அப்படியே சினிமாவுக்கு வந்துவிட்டார் என பலரும் நினைக்கிறார்கள். அதுதான் இல்லை. அவர் எல்லா இசை கருவிகளையும் முறையாக பலரிடமும் கற்றவர்.

- Advertisement -

இளையராஜா குறித்த சர்ச்சை:

என்னதான் இசையில் ஜாம்பவான் என்றாலும் பொது வாழ்வு என்று வந்துவிட்டால் இளையராஜா ஒரு டெரர் பீஸ் தான். இதுவரை பல்வேறு முறை பல விதமாக சர்ச்சையில் சிக்கி இருக்கிறார் இளையராஜா. அதிலும் சமூக வலைத்தளம் வந்த காலம் முதல் இவர் அடிக்கடி ரசிகர்களின் விமர்சனத்திற்கு உள்ளாகி இருக்கிறார். இவரது தலைக்கனமான பேச்சுக்கள் பல முறை ரசிகர்களை எரிச்சலடைய செய்துள்ளது. மேலும், சமீப காலமாகவே இசைஞானி இளையராஜா கர்வம் கொண்டவர், திமிர் பிடித்தவர் என்றெல்லாம் சோசியல் மீடியாவில் அவரைக் குறித்த விமர்சனங்கள் வந்திருக்கிறது.

விழாவில் இளையராஜா:

இந்த நிலையில் சமீபத்தில் சென்னை தியாகராயர் நகரில் நடந்த புத்தக வெளியீட்டு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இளையராஜா, நான் கர்நாடிக் சங்கீதத்தில் எல்லாம் கரை கண்டு வந்தவன் இல்லை. இசைஞானி இளையராஜா என்று பட்டம் கொடுத்திருக்கிறார்கள். அந்த இசைஞானிக்கு நான் தகுதியானவனா? என்று என்னை கேட்டால் கேள்விக்குறிதான். மக்கள் கொடுத்தது. அதற்கு மக்களுக்கு தான் நன்றி சொல்லணும். ஆனால், நான் என்னை அப்படி நினைத்துக் கொள்வதில்லை. அதனால் எனக்கு ஒரு கர்வம் கிடையாது.

-விளம்பரம்-

இசை கச்சேரியில் நடந்தது:

நான் சின்ன வயதிலேயே என்னுடைய கர்வத்தை தூக்கி எறிந்து விட்டேன். நான் சின்ன பையனாக இருந்த போது ஒரு கச்சேரியில் நான் ஹார்மோனியம் வாசித்து இருந்தேன். அப்போது சினிமா பாடல்களை தான் வாசித்து இருந்தேன். பலருமே அந்த பாடலை கேட்டு ஆரவாரம் அதிகமாகி கொண்டே இருந்தது. எனக்கும் கர்வம் தலைக்கு மேல் வந்தது. நம்மை தான் புகழ்கிறார்கள் என்று நானும் கர்வமாக வாசித்துக் கொண்டே இருந்தேன். பின் ஒரு கட்டத்தில் நான் யோசிக்க ஆரம்பித்தேன். இந்த கைத்தட்டல் பாட்டிற்கா? இசைக்கா? இல்லை வாசிக்கிற திறமைக்காகவா? என்று என் மனதுக்குள்ளே கேள்வி எழுந்தது.

கர்வம் குறைய காரணம்:

அதற்கு பிறகு தான் அந்த கைத்தட்டல் விஸ்வநாதன் சாருக்கு போட்டது என்று உணர்ந்தேன். இதனால் என் தலையில் இருந்த கர்வம் குறைந்து பாரமில்லாமல் போய்விட்டது. நமக்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இந்த கர்வத்தில் இருந்து எப்போதோ நான் விடுபட்டுவிட்டேன். அதனால் எந்த புகழ் மொழியும், எந்த பாராட்டுகளும் என்னை சிந்திக்க வைக்காது. மூன்று தினங்களில் மூன்று படங்களுக்கு நான் பின்னணி இசை எல்லாம் போட்டு தந்திருக்கிறேன். அப்படி இசையமைத்தவர்கள் உலகிலேயே கிடையாது. இதை நான் என்னுடைய திறமை சொல்வதற்காக சொல்லவில்லை. அந்த அளவிற்கு படக்குழு நெருக்கடி தருவார்கள் என்று கூறியிருக்கிறார்.

Advertisement