வாழை மட்டைய எடுத்து – மாரி செல்வராஜின் கோர முகத்தை அம்பல படுத்திய காமெடி நடிகர்.

0
1122
- Advertisement -

மாரி செல்வராஜின் உண்மையான முகம் இது தான் என்று நடிகர் டெலிபோன்ராஜ் அளித்து இருக்கும் பேட்டி தான் தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான இயக்குனராக திகழ்பவர் மாரி செல்வராஜ். தற்போது உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் மாமன்னன் என்ற திரைப்படத்தை இயக்கி இருந்தார் மாரி செல்வராஜ். இத்திரைப்படத்தில் உதயநிதி ஸ்டாலினிற்கு கதாநாயகியாக கீர்த்தி சுரேஷ் நடித்திருக்கிறார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் அதிக வசூலையும் பெற்றுத் தந்திருக்கிறது. இது ஒரு பக்கம் இருக்க சில மாதங்களாகவே மாரி செல்வராஜ் குறித்த சர்ச்சை சோசியல் மீடியாவில் இருந்து வைரல் ஆகி வருகிறது.

-விளம்பரம்-

மாரி செல்வராஜ் தன்னுடன் பணியாற்றும் நடிகர்கள், உதவி இயக்குனர்கள் என யாரையும் பார்க்காமல் கடுமையாக திட்டியும், சரா மாறியாக அடித்தும் இருக்கிறாராம். இது தொடர்பாகவே பல பிரபலங்கள் பேட்டியும் அளித்திருக்கிறார்கள். இந்த நிலையில் மாரி செல்வராஜ் குறித்து டெலிபோன் ராஜ் பேட்டியில் கூறியது, கர்ணன் படத்தில் நடிப்பதற்கு ஒரு 50 நடிகர்களை மாரி செல்வராஜ் அழைத்து சென்றிருந்தார். போலீஸ்காரர்கள் அடிப்பது போன்ற காட்சி. அதற்குத் தான் எங்களை பயன்படுத்திக் கொண்டார்கள். பாதுகாப்பிற்காக பின்னால் ஊர் மக்களை நிற்க வைத்து விட்டார். டயலாக் பேசுவது அனைவருமே ஊர்க்காரர்கள். ஆனால், அடி வாங்குவது மட்டும் நாங்கள்.

- Advertisement -

டெலிபோன் ராஜ் பேட்டி:

மேலும், அவர் தன்னுடைய படங்களில் உண்மை தன்மையை அதிகரிக்க அந்த பகுதி வாழும் மக்களின் முகங்கள் தான் அதிகம் படத்தில் தேவைப்படும் என்று சொல்வார். ஆனால், மலையாள சினிமாவில் இருந்து ஏன் பகத் பாசிலை வர வைக்க வேண்டும்? அவர்களுக்கு அந்த பகுதியில் இருக்கும் மக்களின் முகம் அப்படியே இருக்கிறதா? என்ன இதெல்லாம் நமக்கு காது குத்தற வேலை. செல்வராஜ் தன்னுடைய மக்கள் நசுக்கப்பட்டதாக சொல்லி படம் எடுக்கிறார். அது மிகவும் நல்ல விஷயம்தான். அப்படி நசுக்கப்பட்ட மக்களுக்கு நீங்கள் என்ன செய்தீர்கள்? கோடி கோடியா நீங்கள் பணம் சம்பாதிக்கிறீர்கள். சொந்த படம் எடுக்கிற அளவுக்கு சம்பாதிவிட்டீர்கள். அவர்களுக்கு அதில் கொஞ்சம் கொடுக்கலாம் இல்ல. மேலும், மாரி செல்வராஜ் ஒரு புது வீடு ஒன்றை வாங்கி இருக்கிறார். அந்த வீட்டின் பாதை கொஞ்சம் சரியில்லாமல் இருந்தது.

மாரி செல்வராஜ் குறித்து சொன்னது:

இதனை அடுத்து அதற்கு ஏற்றவாறு அவரே பாதைகளை உருவாக்குகிறார். அது கூட பரவாயில்லை. கேவலமான செயல்களை சில இயக்குனர்கள் செய்கிறார்கள். நடிகர்கள், உதவி இயக்குனர்களை அடிப்பது, கெட்ட வார்தைகளால் திட்டுவதை வழக்கமாக வைத்து இருக்கிறார்கள். இதை எல்லாம் அறிவு கெட்டவர்கள் தான் செய்வார்கள்.ஒருவருக்கு நடிப்பு வரவில்லை என்று நீங்கள் அடிக்கிறீர்கள். எங்களைப் போன்ற நடிகர்கள் அங்கிருந்தால் நீங்கள் ஏன் பிறரை அப்படி அடிக்க வேண்டும். கால் மீது கால் போட்டு பார்த்துக் கொண்டிருக்கலாமே.

-விளம்பரம்-

டெலிபோன் ராஜ் வைத்த கோரிக்கை:

அதேபோல் ஒரு படத்தில் மாரி செல்வராஜ் தன்னுடன் இருந்த உதவி இயக்குனர்களை வாழை மட்டையால் அந்த அடி அடித்து இருப்பதாக சொல்கிறார்கள். இதை ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்று. மேலும், மாமன்னன் படத்தில் ஒரு நடிகரின் முடியை பிடித்து வெறிகொண்டு இழுத்து இருக்கிறார். அதோடு பல இயக்குனர்கள் ஊரில் படம் எடுக்கும் பொழுது தான் ஒரு இயக்குனர் என்பதை வெளிக்காட்ட வேண்டும் என்பதற்காகவே இதுமாதிரி வெறிகொண்டு நடக்கிறார்கள். தயவுசெய்து அந்த பழக்கத்தை மாற்றிக்கொள்ள வேண்டும். இந்த தருணத்தில் அதை நான் வேண்டுகோளாகவே வைக்கிறேன் என்று பேசி இருக்கிறார்.

நடிகர்கள் சொன்ன தகவல்:

ஏற்கனவே பரியேறும் பெருமாள் படத்தில் நடித்த நெல்லை தங்கராஜ் கூட பேட்டியில் மாரி செல்வராஜ் என்னை கடுமையாக தாக்கியிருந்தார். நடிக்க கூட்டிட்டு வந்து இப்படி எல்லாம் அடித்து கொடுமைப்படுத்தினார் என்று கண்ணீர் மல்க பேசி இருந்தார். இவரை அடுத்து மாமன்னன் படத்தின் பேட்டியில் உதயநிதி ஸ்டாலின், அவருக்கு வேண்டுமென்றால் அதை வாங்கி விடுவார். ஒரு முறை கூட செட்டில் பயங்கர டென்ஷன் ஆக இருந்தார். இதனால் அவர் அனைத்து இயக்குனர்களை எல்லாம் சரமாரியா அடி வைத்திருந்தார். கோபம் வந்தாலே அவர் கண்ட மணிக்கு திட்டுவார். அவர் பயங்கரமான ஆளு என்றெல்லாம் பேசி இருந்தார்.

Advertisement