ஒரு ரூபாய் கூட சம்பளம் வாங்காமல் இசைஞானி இளையராஜா அவர்கள் இசையமைத்த படத்தை பற்றி தான் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் இசைஞானி என்ற அந்தஸ்துடன் பல ஆண்டுகளாக இசைத்துறையில் ஜாம்பவானாக திகழ்ந்து வருபவர் இளையராஜா. 80ஸ் காலகட்டம் துவங்கி தற்போது வரை இவர் இசையை விரும்பாத ரசிகர்கள் யாரும் இல்லை என்று தான் சொல்ல வேண்டும். அதோடு இவரது இசைக்காகவே ஓடிய படங்கள் பல உள்ளது.
இளையராஜா இசையமைத்தால் போதும்:
அதேபோல் ராஜா இசையமைக்க சம்மதித்து விட்டால் அந்த படம் ‘ஹிட்’ என்று கணித்த காலம் அது. படத்தின் கதாநாயகன் ,கதாநாயகி யார் என முடிவாவதற்கு முன்பே தயாரிப்பாளர்கள் இளையராஜாவை ஒப்பந்தம் செய்து விடுவார்கள். அந்த அளவுக்கு ஒரு படத்தில் வெற்றிக்கு அவர் தேவைப்பட்டார். இளையராஜா ஏதோ கச்சேரிகள் நடத்தி வந்து அப்படியே சினிமாவுக்கு வந்துவிட்டார் என பலரும் நினைக்கிறார்கள். ஆனால் அவர் எல்லா இசை கருவிகளையும் முறையாக பலரிடம் கற்றவர்.
இளையராஜாவின் பயோபிக் படம்:
இப்படி பல்வேறு சாதனைகளுக்கும் சொந்தக்காரரான இளையராஜாவின் வாழ்க்கை வரலாறு தற்போது திரைப்படமாக தயாராகி வருகிறது. அருண் மாதேஸ்வரன் இயக்கும் இப்படத்தில் இளையராஜாவாக தனுஷ் நடிக்கிறார் என்பது நாம் அறிந்தவை. இசையமைப்பாளரே இல்லாமல் தயாராகி வரும் இப்படத்தில், மாறாக இளையராஜா இசையமைத்த எவர்கிரீன் பாடல்களையும், பின்னணி இசையையும் பயன்படுத்த உள்ளதாக கூறப்படுகிறது.
ராஜாவின் காப்புரிமை விவகாரம்:
அதேபோல் என்னதான் ஏராளமான ஹிட் படங்களை தமிழ் சினிமாவிற்கு இளையராஜா கொடுத்திருந்தாலும், இவரைச் சுற்றி சர்ச்சைகளும் ஏராளமாக உள்ளன. அதில் காப்புரிமை விவகாரமும் ஒன்று.இளையராஜா தான் இசை அமைத்த பாடலுக்கு முழு உரிமையும் தனக்குத்தான் என்று உரிமை கோரி நீதிமன்றத்தை நாடிய போது, இப்படி பாடல் ஆசிரியர்களும் உரிமை கோரினால் என்னவாகும் என நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. அதேபோல் காப்புரிமை விவகாரத்தில் பாடல் ஆசிரியருக்கும் உரிமை உண்டு என பாடல் ஆசிரியர் வைரமுத்து ஒரு புறம் கருத்து தெரிவிக்க, இல்லை தயாரிப்பாளர்களுக்கே முழு உரிமை உண்டு என தயாரிப்பாளர் கே.ராஜன் மறு புறம் மல்லு கட்டினார்.
ராஜா சம்பளம் வாங்காமல் இசையமைத்த படம்:
இப்படி காப்புரிமை விவகாரத்தில் கண்டிஷனாக இருக்கும் ராஜா, சம்பளமே வாங்காமல் இசையமைத்த படமும் உள்ளது. அதைப் பற்றி இயக்குனர் பி.வாசு ஒரு பேட்டியில், தான் இயக்கி முதலில் வெளியான “பன்னீர் புஷ்பங்கள் ” திரைப்படத்திற்கு இசை அமைப்பாளராக இளையராஜாவை தான் கமிட் செய்திருந்தாராம். அந்த காலகட்டத்தில் ஒரு படத்திற்கு ரூபாய் ஒரு லட்சம் சம்பளமாக இசைஞானி வாங்கி வந்ததாகவும் ஆனால் , அந்த பட வேலைகள் முடிந்த பிறகு சம்பளம் பற்றி ராஜாவிடம் கேட்டபோது அதற்கு அவர்,”இப்பதானே வந்தீங்க, முதல் படம் வேற, நல்லா பண்ணுங்க, எனக்கு சம்பளம் வேண்டாம்” என்று சொல்லிவிட்டார் எனக் கூறியுள்ளார்.
விடுதலை 2 :
1980 களில் தொடங்கி இசைஞானியின் ராஜ்ஜியம் இன்றுவரை தொடர்ந்து தான் வருகிறது. அந்த வரிசையில் அவர் இசையமைப்பில் கடைசியாக வெளிவந்த ‘விடுதலை’ திரைப்படத்தின் பாடல்கள் மாபெரும் வரவேற்பை பெற்றது. தற்போது விடுதலை படத்தின் இரண்டாம் பாகத்திற்கும் ராஜா தான் இசையமைத்து வருகிறார் என்பதும் நாம் அறிந்தவையே. அது தவிர ராஜா மேலும் சில திரைப்படங்களுக்கு இசை அமைப்பதோடு ,இந்தியா மட்டுமல்லாமல் வெளிநாடுகளிலும் கான்சர்ட்களும் நடத்தி வருகிறார்.