தனுஷ் கிட்ட எல்லாமே சொல்லிட்டேன் ஆனா, படத்துல- இசை கச்சேரியில் மனம் திறந்த இளையராஜா

0
367
- Advertisement -

இளையராஜாவின் இசைக்கச்சேரியில் தனுஷ் குறித்து கூறியிருக்கும் விஷயம் தான் தற்போது இணையத்தில் வைரல் ஆக்கப்பட்டு வருகிறது. தமிழ் சினிமாவில் இசைஞானி என்ற அந்தஸ்துடன் பல ஆண்டுகளாக இசைத்துறையில் ஜாம்பவானாக திகழ்ந்து வருபவர் இளையராஜா. 80ஸ் காலகட்டம் துவங்கி தற்போது வரை இவர் இசைக்கு மயங்காத ரசிகர்கள் யாரும் இல்லை என்று தான் சொல்ல வேண்டும். அதோடு இவரது இசைக்காகவே ஓடிய படங்கள் பல இருக்கிறது.

-விளம்பரம்-

இந்நிலையில் இளையராஜாவின் 50 ஆண்டு திரை வாழ்க்கையை கொண்டாடும் வகையில் சென்னையில் நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றிருந்தது. இதில் பாடகர்கள் விபாவரி, ஸ்வேதா மோகன், எஸ்.பி.பி.சரண், ஹரி சரண், மது பாலகிருஷ்ணன் ஆகியோர் பல பாடல்களை பாடி இருந்தார்கள். அதுமட்டுமில்லாமல் நிகழ்ச்சியின் சிறப்பம்சமாக ஹங்கேரி இசை கலைஞர்களும் நிகழ்ச்சியில் இசையமைத்து இருந்தார்கள்.

- Advertisement -

இளையராஜா கச்சேரி:

மூன்று வருடங்களுக்குப் பிறகு இந்த நிகழ்ச்சி நடைபெற்றதால் மக்கள் கூட்டம் அலைமோதி இருந்தது. இந்த நிகழ்ச்சி மெர்குரி நிறுவனத்துடன் இணைந்து நடைபெறுவதால் சென்னை மட்டுமில்லாமல் லண்டன், பாரிஸ், சூரிச் உள்ளிட்ட இடங்களில் அடுத்தடுத்து நடைபெற இருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும், இந்த நிகழ்ச்சியில் இளையராஜாவின் எவர் கீரின் பாடல்களும் பாடப்பட்டுள்ளது. இந்த நிலையில் இந்த நிகழ்ச்சியில் இளையராஜா சொன்ன விஷயங்கள் எல்லாம் இணையத்தில் வைரலாகப்பட்டு வருகிறது.

தனுஷ் குறித்து சொன்னது:

அதாவது நிகழ்ச்சியில் இளையராஜா, கிளாஸ் எடுக்கிறேன் என்று நினைக்காதீர்கள். என்னுடைய பயோபிக் எடுக்கிறார்கள். தனுஷிடம் இந்த பாடல்கள் உருவான கதை பற்றி எல்லாம் சொல்லி இருக்கிறேன். ஆனால், அது படத்தில் வருமா? என்று தெரியவில்லை. அதான் உங்களிடம் பகிர்ந்து கொண்டேன். உங்களுக்காக தானே, நான் மனதில் வைத்துக்கொண்டு என்ன பண்ணப் போகிறேன். எனக்குள் இருக்கிற விஷயம் உங்களுக்கு தெரிந்தால் தான் சந்தோஷம். நீங்கள் சந்தோஷப்பட்டு பார்த்தால் தான் எனக்கு சந்தோஷம் என்று கூறி இருந்தார்.

-விளம்பரம்-

இளையராஜாவின் பயோபிக் படம்:

இளையராஜாவின் பயோபிக் படம் உருவாக இருப்பதாக கடந்த ஆண்டு தகவல் வெளியாகி இருந்தது. இதில் இளையராஜாவாக தனுஷ் நடிக்கிறார். காரணம், தனுஷின் முகம் இளையராஜாவின் முகம் போலவே இருப்பதாக கூறப்படுகிறது. அது மட்டும் இல்லாமல் தனுஷ் இளையராஜாவின் தீவிர ரசிகர் என்பது அனைவரும் அறிந்ததே. அதனால் பயோபிக்கில் நடிக்க தனுஷ் சரியாக இருப்பார். இளையராஜா பயோபிக் படத்தை இயக்குனர் அருண் மாதேஸ்வரன் தான் இயக்கப் போவதாக கூறப்படுகிறது.

படம் குறித்த தகவல்:

இந்த தகவல் வெளியானதை தொடர்ந்து ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பும் உற்சாகமும் ஏற்பட்டு இருக்கிறது. அந்த காலகட்டத்தில் இளையராஜாவுடன் நட்பாக பழகிய இயக்குனர்கள், நடிகர்கள், பாடகர்கள் என பல பேர் இந்த படத்தில் வருவார்களா? கமலஹாசன், ரஜினி, வைரமுத்து, ஏ.ஆர்.ரகுமான் கதாபாத்திரங்களும் இந்த படத்தில் இடம்பெருமா? என்ற கேள்வியும் எழுந்திருக்கிறது. இந்தப் படத்தை இளையராஜா நேரடியாக தன்னுடைய பாவலர் கிரியேஷன் மூலம் தயாரிக்கவில்லை. பி ஏ ஸ்ரீராம் பக்திசரண் மூலமாகத்தான் தயாரிக்கிறார். இவர்களுடன் சேர்ந்து இன்னும் இரு நிறுவனங்களும் தயாரிக்கிறது.

Advertisement